அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

உங்க குழந்தைங்க ரொம்ப நேரம் மொபைல் ஃபோன் யூஸ் பன்றாங்களா ? அவசியம் படிங்க !

திருச்சியில் அடகு நகையை விற்க

செல்பேசியை ஒருமணி நேரத்திற்கும் மேலாக பயன்படுத்தும் குழந்தைகளுக்கு மனநல பிரச்சனை ஏற்படும்  என மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையின் மனநல மருத்துவர் கீதாஞ்சலி எச்சரித்திருக்கிறார்.

”செல்பேசி அடிமை (Mobile Addiction) சிக்கல் தற்போது ஆன்லைன் விளையாட்டு அடிமைத்தனத்தில் (Gaming Addiction) கொண்டு வந்து விட்டுள்ளது. சில குழந்தைகள் எல்லாம் மொபைல்  மூலம் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் எல்லாம் கேம் விளையாடுகிறார்கள். மொபைலை ஒரு மணிநேரத்திற்கு மேலாக, உபயோகிக்கும் குழந்தைகளுக்கு மனநல பிரச்சினை ஏற்படுவதாக உலகளாவிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது” என மனநல மருத்துவர் கீதாஞ்சலி குறிப்பிடுகிறார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

செப் 10 உலக தற்கொலை தடுப்பு தினம் உலக அளவில் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில், நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மருத்துவமனையின் மனநலத்துறை தலைவர் டாக்டர் கீதாஞ்சலி, டாக்டர் ஜான் சேவியர், சுகதேவ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய டாக்டர் கீதாஞ்சலி, “பள்ளி மாணவர்களிடம் தற்கொலை தொடர்பான விஷயங்களை நேரடியாக பேசக்கூடாது. நேர்மறையான சிந்தனைகள் குறித்து அவர்களோடு பகிர்ந்து கொள்ளலாம். அவர்களுக்கான பிரச்சனைகளை உடனடியாக யாரிடம் பேச வேண்டும் என்பதற்கான  வழிமுறைகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அதன் மூலமாகத்தான் மாணவர்களின் தற்கொலைகளை தடுக்க இயலும். இவர்களில் சிலருக்கு வீட்டிலும் மேலும் சிலருக்கு பள்ளியிலும் பிரச்சனைகள் இருக்கலாம். அதனை பெற்றோரோ ஆசிரியரோ கண்காணித்து சரி செய்ய வேண்டும்.

குழந்தைகளிடம் உத்தரவிடும் மனப்பான்மையில் நாம் அணுகுவது கூடாது. நான் சொல்வதைக் கேளு. வாயை மூடு’ என்பது போன்று பேசுவது தவறு. இதனால் குழந்தைகளுக்கு பகுத்தறியும் மனப்பான்மை குறைந்துவிடும். தங்களது செயல்களுக்கான  தீர்வினை அவர்களே கண்டறிவதற்கான வழிமுறைகளை அறியும் வண்ணம் அவர்களை வழிநடத்த வேண்டும். எதிர்மறையான சிந்தனைகளுக்குள் மாணவர்களை நாமே தள்ளி விடக்கூடாது. எதையும் ஆராய்ந்து அறியக்கூடிய பேச்சுத்திறமையை உரையாடலை குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும். இதன்மூலமாக எதிர்காலத்தில் அவர்கள் முடிவெடுக்கும் திறனை வளர்த்துக் கொள்ள முடியும். அதேபோன்று ‘மொபைல் அடிக்சன்’ தற்போது பெரும் பிரச்சனையாக உள்ளது. பெருந்தொற்று காலத்தில் குழந்தைகளுக்கு செல்பேசி பயன்படுத்தியே ஆகவேண்டிய நிலை இருந்தது. அது தற்போது பெரும் சிக்கலாக மாறி  உள்ளது.

Admission Enquiry Form

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மொபைல் அடிக்சன்இந்த மொபைல் அடிக்சன் சிக்கல் தற்போது ஆன்லைன் விளையாட்டு அடிமைத்தனத்தில் கொண்டு வந்துவிட்டுள்ளது. சில குழந்தைகள் எல்லாம் மொபைல் மூலம் ஒரு மணி நேரம் இரண்டு மணி நேரம் எல்லாம் கேம் விளையாடுகிறார்கள். மொபைலை ஒரு மணி நேரத்திற்கு மேலாக உபயோகிக்கும் குழந்தைகளுக்கு மனநல பிரச்சினை ஏற்படுவதாக உலகளாவிய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. மன அழுத்தம் அதிகரித்து கற்றல் திறன் குறையும் நிலை ஏற்படுகிறது. அண்மையில் கொரியாவில் கூட குழந்தைகள் மொபைல் போனை 12 வயது வரை பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. சில நேரங்களில் குழந்தைகள் சூதாட்டத்திலும் ஈடுபடுகிறார்கள். மேலும், சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதன் மூலமாக அதற்கும் அடிமையாகும் நிலை ஏற்படுகிறது.

இவற்றையெல்லாம் தவிர்க்கச் செய்ய பெற்றோருக்கும் ஆசிரியர்களுக்கும் மிகப்பெரிய பங்கு உண்டு.  ஒரு விஷயத்தில் பெற்றோர்கள் காட்டும் உறுதி என்பது எப்போதும் அதே நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். செல்பேசி, ஆன்லைன் விளையாட்டு ஆகியவற்றிலிருந்து மீட்டெடுக்க வேண்டுமானால், பள்ளிப்பாடபுத்தகங்கள் தவிர மற்ற புத்தகங்களையும் வாசிக்க பழக்க வேண்டும். இது போன்ற வாசிப்பு பழக்கத்தின் மூலமாக குழந்தைகளின் எண்ண ஓட்டத்தில் மாற்றம் ஏற்படும். நிறைய பள்ளிகளில் தற்போது நூலகம் உருவாக்கப்பட்டுள்ளன. அங்கிருந்து நூல்களை வீட்டிற்கு கொண்டு செல்வதற்கும் பள்ளி நிர்வாகம் ஊக்குவித்து வருகின்றன. இது வரவேற்கத்தக்கது.

மொபைல் அடிக்சன்குடும்ப பிரச்சினை உடல் நல சிக்கல் ஆகியவை காரணமாக, தற்கொலை செய்து கொள்வோர் எண்ணிக்கை அதிகரிக்கிறது. குடும்ப பிரச்சினை 30%, உடல் நலக் கோளாறுகள் 18% என தற்கொலைக்கான காரணங்கள் உள்ளன. அதேபோன்று ஒரு பிரச்சனைதான் என்று நம் குறிப்பிட்டு சொல்ல முடியாது. பல்வேறு பிரச்சனைகளின் வாயிலாக தற்கொலை நிகழ்வுகள் நடைபெறுவதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. மேலும், காதல் தோல்வி, வருமானப் பிரச்சனை, வேலையின்மை, போன்றவையும் தற்கொலைகளுக்கு காரணமாக உள்ளன. இதற்கு சமூக பங்களிப்பு மிக மிக அவசியம். குறிப்பாக ஒவ்வொரு தனிநபரின் பங்களிப்பு தவிர்க்க இயலாதது ஆகும். ஒவ்வொருவரும் எவ்வாறு தங்களது பங்களிப்பை செய்ய முடியும் என்பதை பார்க்கும்போது தற்கொலை எண்ணத்தை தடுப்பதை ஒரு சமூக இயக்கமாக மாற்ற முடியும்” என்றார்.

 

—    ஷாகுல், படங்கள் : ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.