உங்கள் எடை என்ன?

விழிக்கும் நியூரான்கள் -12

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பக்கவாத நோயை ஏற்படுத்தும் காரணிகளில் ஒன்றான உடல்பருமன் பற்றி பார்ப்போம்.

நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், உடல் எடையானது அளவோடு இருக்க வேண்டும். உடல் எடை அளவோடு இருக்கிறதா?… என்பதை நாம் எப்படி தெரிந்து கொள்வது என்று தானே யோசிக்கிறீர்கள்?

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

இதற்கு மூன்று முறைகள் உள்ளன.

  1. ஆரோக்கியமான உடல் எடை = உயரம் – 100
  2. இடை – இடுப்பு விகிதம் (Waist – Hip Ratio) = இடை அளவு / இடுப்பு அளவு (cm)
  3. உடல் எடை குறியீட்டெண் (Body Mass Index) = எடை (கி.கி)/ [உயரம்(மீ)]2

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

நமது உடல் எடையானது அவரவரின் உயரத்திற்கு ஏற்றவாறு வேறுபடுகிறது. உதாரணத்திற்கு 155செ.மீ உயரம் உள்ள ஒருவரின் எடை (155 செ.மீ – 100 = 55 கி.கி) என்ற அளவில் இருக்க வேண்டும்.

உடல் எடை மட்டுமல்லாமல், இடை – இடுப்பு விகிதம் (Waist – Hip Ratio) சரியாக இருக்க வேண்டும். இந்த இடை – இடுப்பு விகிதம் மிகவும் முக்கியமான ஒன்றாக இந்தியர்களுக்கு கருதப்படுகிறது. இந்த விகிதமானது பெண்களுக்கு 0.8-ஐ விடக் குறைவாகவும், ஆண்களுக்கு 0.9-ஐ விடக் குறைவாகவும் இருக்க வேண்டும். இந்த விகிதமானது 0.8-ஐ விடக் குறைவாக இருக்கும்போது, நம் உடலில் இன்சுலின் மற்றும் ஈஸ்ட்ரோஜன் என்னும் நொதி அதிக அளவில் சுரக்கும். அதிக உடல் எடை கொண்டவர்களுக்கு இந்த விகிதமானது அதிகரிக்கும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

Dr. அ.வேணி MD., DM (NEURO)

மூளை நரம்பியல் நிபுணர்.

நமது உடலிலுள்ள கொழுப்பின் அளவை இந்த விகிதத்தின் அளவைக் கொண்டு தெரிந்து கொள்ளலாம். இந்த விகிதம் அதிகரிக்கும் போது பல்வேறு வியாதிகள் வருவதற்கான சாத்தியக்கூறுகளும் அதிகரிக்கின்றன. உடல் பருமனாக இருப்பதினால் ஏற்படும் வியாதிகள் கணக்கில் அடங்காதவை. அவற்றில் முக்கியமானவை சர்க்கரை வியாதி, உயர் இரத்த அழுத்தம், மாரடைப்பு, பித்தப்பை கற்கள், எலும்பு தேய்மானம், மூச்சடைப்பு, குறட்டை, புற்று நோய், மன அழுத்த நோய், தாங்காத உடல் வலி மற்றும் எந்த வேலையிலும் நாட்டமில்லாமல் அடிக்கடி சோர்ந்து விடுதல் ஆகியவைகள் அடங்கும்.

 

இதைத் தவிர உடல்எடை குறியீட்டெண் (BMI) என்ற ஒன்றும் உள்ளது. நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதற்கு இந்த BMI-ஆனது 19 முதல் 24 வரை இருக்கலாம். உங்கள் ஆரோக்கியத்தை கணிப்போமா இப்போது?…

இதைப்படிக்கும் அனைவரும் ஆள் உயர கண்ணாடி முன் நில்லுங்கள். அளவு நாடா (Inch tape)-ஐ கையில் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் விலா எலும்புக்கும், இடுப்பு எலும்புக்கும் இடையே உள்ள சுற்றளவை அளந்தால் அதுதான் உங்கள் இடை அளவு.

சற்றே அளவு நாடாவை கீழே இறக்குங்கள். உங்கள் இடுப்பின் அதிகபட்ச சுற்றளவு உள்ள இடத்தை அளந்து கொள்ளுங்கள். இது தான் உங்கள் இடுப்பின் அளவு. மேற்கூறிய இரண்டாவது சூத்திரத்தின் உதவியோடு இடை இடுப்பின் விகிதத்தை கணித்துக் கொள்ளுங்கள். நீங்கள் பெண் என்றால் 0.8-ற்குக் கீழும்; ஆண் என்றால் 0.9-ற்குக் கீழும் இருக்க வேண்டும். அப்படி இருந்தால் உங்களுக்கு நீங்களே ஒரு சபாஷ் சொல்லிக் கொள்ளுங்கள். இந்த விகிதத்தின் அளவு அதிகமாக இருந்தால் வாழ்வியல் மாற்றத்தை இந்த நிமிடம் முதல் தொடங்க தயாராகுங்கள். என்ன மாற்றங்கள் செய்ய வேண்டும் என்பதனை கடந்த வாரங்களில் கூறியிருக்கிறேன்.

பக்கவாதத்தை ஏற்படுத்தும் வாழ்வியல் முறை காரணிகளைப் பற்றி கடந்தவாரங்களில் முழுமையாகப் பார்த்தோம். இது மட்டுமல்லாமல் சராசரி மனிதனுக்கு இருக்கின்ற பல்வேறு நோய்களும் பக்கவாதத்தை விளைவிக்க கூடியவையே!…

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.