சுத்தமான காற்றே மூளையின் ஆரோக்கியம்…

0

2014-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு வருடமும் ஜுலை 22 அன்று உலக மூளை தினம் (World Brain Day) அனுசரிக்கப்படுகிறது. சுற்றுப்புறத்திற்கும், மூளைக்கும் உள்ள தொடர்பை வலியுறுத்தவும், மூளையின் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும், பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக உலக மூளை தினம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சென்ற வருடம் பக்கவாதத்தைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்த வருடம் “சுத்தமான காற்றே, மூளையின் ஆரோக்கியம்” (Clean Air for Healthy Brain) என்பது தான் இந்த தினத்தின் மையக் கருத்து.

https://businesstrichy.com/the-royal-mahal/

நம்மால் உணவு மற்றும் நீர் இல்லாமல் கூட ஒரு வாரம் வரை உயிர் வாழ முடியும். ஆனால் காற்று இல்லாமல் ஐந்து நிமிடம் கூட இருக்கமுடியாது. நாம் ஒரு நாளைக்கு 22000 முறை சுவாசிக்கிறோம், 16 Kg காற்றை உள்ளிழுத்து வெளிவிடுகிறோம். நாம் சுவாசிக்கும் இந்த காற்றில் 78% நைட்ரஜனும், 21% ஆக்ஸிஜனும், மீதமுள்ள 1% கார்பன் மோனாக்ஸைடு, நைட்ரஜன் ஆக்ஸைடு, சல்ஃபர் ஆக்;சைடு, ஓசோன், மீத்தேன் என்று இன்னும் பல வாயுக்கள் கலந்துள்ளன. வளர்ந்து வரும் நாகரீகத்தாலும், வாகனங்களின் அதிகரிப்பாலும், தொழிற்சாலைகளின் தொடர் இயக்கத்தினாலும், காற்று மாசுபடுவது அதிகரித்துவருகிறது.

நச்சுத்தன்மையுள்ள வாயுக்கள் நாம் வாழும் இந்த பூமியின் காற்றை மாசுபடுத்திய வண்ணமே உள்ளன. காற்றுதானே மாசுபடுகிறது அதனால் நமக்கென்ன கவலை? என்று நாம் யாரும் ஒதுங்கிவிட முடியாது. நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள ஆக்ஸிஜனின் அளவு குறைய குறைய, நச்சுத்தன்மையுள்ள நுண்வாயுக்களின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, மனிதன் பல்வேறு நோய்களால் மரணிக்க நேரிடுகிறது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

காற்று மாசுபடுவதால் ஒரு வருடத்திற்கு 9 முதல் 12 மில்லியன் மக்கள் இறக்கிறார்கள். பக்கவாத நோய் 25 சதவிகிதமும், மாரடைப்பு வியாதி 25சதவிகிதமும், நுரையீரல் வியாதி 43 சதவிகிதமும் மற்றும் புற்றுநோய் போன்ற வியாதிகள் அதிகரித்த வண்ணமே உள்ளன. காற்று மாசுபடுவதால் நுரையீரல் வியாதி வரும் என்பது அனைவரும் அறிந்ததே.

ஆனால் காற்றும், கபாலத்தினுள் இருக்கும் மூளையும் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையதே, எப்படி? நமது மூக்கில் உள்ள ஆல்;ஃபாக்டரி எபிதீலியம் (Olfactory Epithelium), நாம் வாசனையை உணர்வதற்கு உதவி புரிகிறது. இதுவே நம் மூளையையும், காற்றையும் தொடர்பு படுத்துகிறது.

நமது மூக்கின் வழியாக உள்ளிழுக்கும் காற்றில் மாசு கலந்திருக்கும் போது, மாசின் அளவைப் பொறுத்து பாதிப்பு ஏற்படுகிறது. துகள் (Particulate Matter – PM) அளவு 10µm-க்கு அதிகமாக இருக்கும் போது, நமது மூக்கில் இருக்கும் முடியானது துகள் உள்செல்லாமல் தடுக்கிறது.

இத்துகளானது 5 முதல் 10µm-க்குள் இருக்கும் போது நமது தொண்டை பகுதிவரை செல்கிறது. ஆனால் இத்துகள் நுரையீரலை சென்றடையாமல், நாம் இதை இருமல் மற்றும் தும்மல் வழியாக வெளித்தள்ளுகிறோம். இதுவே 2.5µm-க்கு குறைவாக இருக்குமேயானால் நுண்துகளானது நுரையீரல் வரை சென்று பாதிப்பை ஏற்படுத்துவதைப்போல், ஆல்ஃபாக்டரி எபிதீலியம் வழியாக சென்று மூளையில் படிந்து பாதிப்பை ஏற்படுத்துகிறது.

நாம் வாழும் இந்த பூமி நம் முன்னோர்கள் நமக்கு அளித்த வரப்பிரசாதம், அவர்கள் எல்லா வளங்களையும் நன்முறையில் நமக்கு அளித்துச் சென்றுள்ளனர்.

ஆனால் கடந்த 10 வருடங்களாக நமது AQI (Air Quality Index) பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் காற்று மாசுபடுவதில் சென்னைக்கு அடுத்தபடியாக திருச்சிராப்பள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது. எனவே ஒவ்வொரு தனிமனிதனும் நம் சந்ததிகளை, அவர்களின் ஆரோக்கியத்தை கருத்தில் கொண்டு காற்றை சுத்தமாக வைக்க முயற்சிக்க வேண்டும்.

அசுத்தமான காற்றை சுவாசிப்பதால் நச்சு தன்மையுள்ள துகள்கள் மூக்கில் ஆல்ஃபாக்டரி எபிதீலியம் வழியாக மூளையை சென்றடைந்து Blood Brain Barrier எனும் மூளையின் பாதுகாப்பு வளையத்தை சிதைத்து விடுகிறது. அதனால் சாதாரணமாக மூளைக்குள் நுழைய முடியாத பல கிருமிகள், வேதியியல் பொருட்கள் மூளையை தாக்கி Immune dysregulation என்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் Multiple Sclerosis எனப்படும் கொடிய வியாதி மூளையை தாக்கி பல உயிர்கள் இறக்கின்றன. மூளையில் ஞாபகதிறன் குறைந்து மூளை தன்நிலை இழந்து நிற்கிறது. எனவே காற்றை சுத்தமாக வைக்க முயற்சிப்போம்.

குழந்தைகளின் மூளையானது முதல் 1000 நாட்களில் தான் (அதாவது 2¾ வயதுக்குள்) 90% வளர்ச்சியை பெறுகிறது. இந்த நாட்களில் குழந்தை மாசுபட்ட காற்றை சுவாசிப்பதால், இந்த நச்சுப் பொருட்கள் மூளையில் உள்ள வெள்ளை படலத்தை பாதிக்கிறது. இதனால் குழந்தையின் Verbal / Non Verbal IQ அதாவது குழந்தையின் அறிவுத்திறன் பாதிக்கிறது. அதுமட்டுமல்லாமல் குழந்தையின் (Behaviour) நடவடிக்கையில் மாறுதலை ஏற்படுத்துகிறது. அக்குழந்தையிடம் கோபம் மற்றும் Anti Social Behaviour அதிகரிக்கிறது.

காற்று மாசுப்படுவதால் அதிலுள்ள நச்சு துகள்கள் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் மூளையில் Oxidative Stress எனப்படும் விஷத்தன்மை அழுத்தத்தை அதிகரிக்கிறது. நச்சு துகள்களின் அளவுக் குறைய குறைய அதன் விஷத்தன்மை அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் உருவாகும் Peroxide என்ற நச்சுப்பொருள் DNA எனப்படும் நமது மரபணுவையே பாதிக்கும் தன்மை கொண்டது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இதனால் நாம், கற்பனை கூட செய்து பார்க்க முடியாத அளவிற்கு நமது உடலில் பாதிப்புகள் ஏற்படுகின்றன.
புற்றுநோய், நுரையீரல் நோய், பக்கவாதம், மாரடைப்பு, ஞாபகமறதி வியாதி, நடுக்குவாதம் ஆகிய நோய்கள் சிறுவயதிலேயே வருவதற்கு இந்த காற்று மாசுப்படுவதே முக்கிய காரணமாக உள்ளது.

நாம் சுவாசிக்கும் காற்றில் கார்பன் மோனாக்ஸைடின் அளவு அதிகரிக்க, அதிகரிக்க நமக்கு தலைவலி, கண் எரிச்சல், அதிகமாக வரவாய்ப்புள்ளது. தொடர்ந்து மாசுபட்ட காற்றை சுவாசிப்பதின் மூலம் நமது அறிவுத்திறனும், சிந்திக்கும் திறனும் குறைகிறது.

பெரும்பாலான மக்கள் Body Spray, Car Spray, Room Spray என்று பலவித வாசனை திரவியங்களை பயன்படுத்துகிறார்கள். இதனாலும் காற்று மாசுபடுகிறது. இதில் உள்ள நுண் துகள்கள் நுரையீரல், மூளை, தோல் ஆகியவற்றை பாதித்து Auto Immune Disease வருகிறது. அதாவது நமது எதிர்ப்பாற்றல் நமக்கு எதிராகவே வேலை செய்யத் தொடங்குகிறது.

இந்த Auto Immune Disease நமக்கு வர நேரிட்டால் வாழ்நாள் முழுவதும் மாத்திரைகளை உட்கொள்ளும் நிலை ஏற்படுகிறது. அப்படி உட்கொண்டாலும் இந்த வியாதி முழுமையாக குணமாவதில்லை.எனவே காற்று மாசுபடுவதை தடுக்க நாம் ஒவ்வொருவரும் முயற்சி செய்ய வேண்டும்.

வாகனங்களில் இருந்து வரும் புகை மாசுக்கட்டுப்பாட்டில் உள்ளதா என்று மூன்று மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதிக்க வேண்டும்.
வீட்டு உபயோக கழிவுகளை குறைக்க வேண்டும்.

தேவைக்கு அதிகமாக எந்தப்பொருளையும் பயன்படுத்தக் கூடாது.
தெருவில் சேரும் குப்பைகளை தீ மூட்டக் கூடாது.
கழிவுகளை தரம்பிரித்து மாநகராட்சி ஊழியர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

சைக்கிள் பயன்பாட்டை அதிகரித்து, எரிபொருள் மூலம் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும்.

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

புகைப் பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.

நம் வீட்டில் காற்றை சுத்தப்படுத்த தொட்டிச் செடிகளை வளர்க்கலாம். துளசி, கற்றாழை, மஞ்சள், மணி ப்ளான்ட், ஓமவல்லி, புதினா ஆகிய சிறியச் செடிகள் காற்றை சுத்தப்படுத்தும் தன்மை வாய்ந்தது.

நமது வீட்டிற்கு வெளியில் சாலை ஓரங்களில் வேப்பமரம் மற்றும் புங்கமரம் ஆகிய இரண்டையும் வளர்ப்பதால் நமது சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும். வருங்கால சந்ததிகளும் தூய்மையான காற்றை சுவாசித்து, ஆரோக்கியமாக வாழ்வார்கள்.

காற்று மாசுபடுவது ஒரு கண்ணுக்குத் தெரியாத உயிர்க்கொல்லி (Invisible Killer) என்பதை நாம் மனதில் நிறுத்த வேண்டும். நாம் சேர்த்து வைக்கும் வீடு, காசு, பணம் இவை எல்லாம் எந்த உயிரையும் வாழவைக்க முடியாது.

சுத்தமான காற்றே நம் குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப் பெரிய சொத்து என்பதை உணருங்கள். சுத்தமான காற்றே மூளையின் ஆரோக்கியம் என்பதை வருங்கால சந்ததியர்களுக்கு புரியவையுங்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.