டாஸ்மாக் : கல்லா கட்டும் லேடி இன்ஸ் !

நெற்களஞ்சிய மாவட்டத்தில்  வெற்றிலைக்கு பெயர் போன ஊரில் ஈஸ்வரமான காவல் நிலையம் அமைந்துள்ளது. இதில், இரண்டெழுத்தைக் கொண்ட பிரபல திரைப்பட நடிகையின் பெயரை கொண்டவர் நிலைய பொறுப்பதிகாரியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் அம்மணியின் காவல் நிலைய வரம்பில், சமீபத்தில் புதிதாக மதுபானக்கடை ஒன்று இடம் மாறி வந்துள்ளதாம். இதனால் அம்மணிக்கு சந்தோஷம் ஒருபக்கம் பொங்க… மற்றொருபுறம் டார்கெட் வைத்து வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளாராம். இதுப்போக, மதுபானக்கடை அமைந்துள்ள பகுதிக்கு மாலையில் அவரே நேரில் சென்று, மதுபானம் வாங்கிச் செல்வோரை வழுக்கட்டாயமாக பிடித்து கல்லா கட்டுகிறாராம். அப்படி பூந்தி தராதவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து எடுத்து வருவதுடன், மீண்டும் வாகனங்களை கேட்டு செல்வோரை பேப்பர் கட்டு வாங்கித்தரச் சொல்லி கல்லாவை கச்சிதமாக கட்டுகிறாராம்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.