திருச்சி வேளாண் கல்லூரி ஆசிரியை சந்தேக தற்கொலை..!
திருச்சி வேளாண் கல்லூரி ஆசிரியை சந்தேக தற்கொலை..!
திருச்சி மாவட்டம் துறையூரிலிருந்து முசிறி செல்லும் சாலையில் அமைந்துள்ள முக்கிய தனியார் கல்லூரி ஒன்றில் 04/11/2020 காலை வேளாண் துறை ஆசிரியை ஒருவர் தனது அறையிலேயே ஜன்னலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக ஜம்பு நாதபுரம் போலீசார் விசாரணை தொடங்கியதில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுக்கா அம்மாபேட்டை தெற்கு தில்லை விநாயகபுரம் பகுதியை சேர்ந்த செல்வமணி மகள் சௌமியா (29/2020) என்பவர் கடந்த ஒரு வருடமாக இக் தனியார் கல்லூரியில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும், மேலும் கொரோனா காலத்தில் தனது சொந்த ஊரில் சௌமியா இருந்ததாகவும் அப்போது அவருக்கு வீட்டில் மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்ய பெற்றோர்கள் இருந்ததாகவும் திருமணம் வேண்டாம் என்று மறுத்து விட்டு தற்போது கல்லூரிகளில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறுவதால் அதற்காக புறப்பட்டு கடந்த 2/11/2020 அன்று திருச்சி வந்துள்ளார்.
இதனிடையே 4/11/2020 காலை ஆன்லைன் வகுப்புகள் எடுப்பதற்காக சௌமியாவுடன் விடுதியில் தங்கியுள்ள சக ஆசிரியை தோழிகள் கல்லூரிக்கு கிளம்பி செல்ல தனியாக இருந்த சௌமியா வெகுநேரமாகியும் வகுப்பு எடுப்பதற்கு வராததால் தோழிகள் மூன்றாவது மாடியில் உள்ள ஆசிரியை விடுதிக்கு சென்று பார்த்தபோது சௌமியா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு கிடந்துள்ளார்.
இதனை கண்ட சக ஆசிரியர்கள் பயந்து போய் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்துள்ளனர் பின்னர் கல்லூரி நிர்வாகத்தின் மூலம் ஜம்முநாதபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அதன்பின் முசிறி காவல் உதவி கண்காணிப்பாளர் ப்ரம்மானந்தம் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார் . அதன்பின் உடலை கைப்பற்றி போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இவ்வழக்கில் முசிறி காவல் உதவி கண்காணிப்பாளர் ப்ரம்மானந்தம் ஆசிரியை சௌமியா தற்கொலையில் வேறு ஏதும் மர்மம் இருக்கிறதா என்றும் ஏற்கனவே இக்கல்லூரியில் விடுதி வார்டன் ஒருவரை மாணவன் ஒருவன் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவத்தை அடுத்து இதுபோன்ற சம்பவம் நடைபெற்றுள்ளது இது தற்கொலை தானா இல்லை இதற்குப் பின் வேறு ஏதும் மர்மம் இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் தனது அடுத்த கட்ட விசாரணையை துவக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-ஜித்தன்