எல்லையில் நின்று நாட்டை காக்கிறோம் … கல்குவாரி கும்பலிடமிருந்து ஊரை காக்க முடியல …
நாட்டை காக்கும் எங்களால் எங்க கிராமத்தை காப்பற்ற முடியவில்லை குவாரியை மூட நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணித்து கல்குவாரி குழிக்குள் இறங்கியும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடுவோம். கல்குவாரிக்கு எதிராக மாவட்ட ஆட்சியரிடம்மனு அளிக்க ராணுவ உடையுடன் வந்த வந்த ராணுவ வீரர்கள் …
சமூக நீதிகாக்கும் என கூறும் அரசு பஞ்சமி நிலத்தையும் ஏழை மக்களுக்கு வழங்கிய நிலத்தையும் அழித்து சட்டவிரோதமாக குவாரி அனுமதி அளித்துள்ளதாக ராணுவ வீரர்கள் குற்றச்சாட்டு.
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் கல்லணை அச்சங்குளம், தூம்பகுளம்புதூர், நெடுங்குளம், உலகாணி ஊராட்சியில் செயல்படும் கல்குவாரிகள் அரசு புறம்போக்கு நிலங்கள், ஆற்று கண்மாய் நீர்நிலைகள், பஞ்சமி நிலங்கள், நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட ஒப்படை நிலங்ளை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்தும் அனுமதியின்றி கற்களை வெட்டியெடுத்தும் அரசுக்கு பல கோடி மதிப்பில் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருவதாககூறி அக்கிராம மக்கள் கல்குவாரிக்கு எதிராக 100 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் அக்கிராமங்களை சேர்ந்த ராணுவ வீர்ர்கள் மற்றும் எல்கை பாதுகாப்பு படையை சேர்ந்த வீரர்கள் கல்லணை சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள கல்குவாரிகளுக்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும் எனவும், தாழ்த்தப்பட்டோர் மட்டும் பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்பட்ட நிலத்தினை மிரட்டி அபகரித்து கல்குவாரிகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், கல்லணை, அச்சங்குளம், நெடுங்குளம், உலகாணி கிராமங்களில் செயல்படும் கல்குவாரிகள் நில ஒப்படை செய்த நிலங்களை திரும்ப பெற்றுத் தரக் கோரியும் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராணுவ உடையுடன் கிராமத்தினருடன் வந்த ராணுவ வீரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது குறித்து பேசிய ராணுவ வீரர் …
கிராமத்தோடு விவசாயம் அழியுறது பார்த்து எல்கையிலே இருக்க முடியல கிராமத்த காக்க சாதி மத வேறுபாடின்றி ராணுவத்தில் இருந்து வந்து நிற்கிறோம் எனவும், தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்களுக்காக கொடுத்த நிலத்தை அபகரித்து குவாரிகள் அமைக்கப்பட்டுள்ளன. குவாரிகளுக்காக குண்டாறு வழிப்பாதையை அடைத்து விவசாயத்தை அழிக்கிறார்கள்.
நாட்டை காக்கும் எங்களால் எங்க கிராமத்தை காப்பற்ற முடியவில்லை, குவாரியை மூட நடவடிக்கை எடுக்காவிட்டால் தேர்தலை புறக்கணித்து கல்குவாரி குழிக்குள் இறங்கியும், டெல்லியில் போராட்டத்தில் ஈடுபடுவோம், சமூக நீதி காப்பதாக கூறும் திராவிட மாடல் அரசு பஞ்சமி நிலத்தையும், ஏழைமக்களுக்கு வழங்கிய நிலத்தையும் அழித்து சட்டவிரோதமாக குவாரிக்கு அனுமதி அளித்துள்ளதாக ராணுவ வீரர்கள் குற்றம் சாட்டினர்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.