ஆசிய டிரக் சைக்கிள் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற திருச்சி மாணவர்!
திருச்சி வயலூர் அமிர்த ராஜா நல்லூரை சேர்ந்தவர் பிரதீப் சங்கரா. சர்வதேச சைக்கிள் வீரர். இவர் தேசியக் கல்லூரியில் உடற்கல்வித்துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.
இவர் பள்ளிகளில் படிக்கும் போதே பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் கலந்து கொண்டு பல வெற்றிகளை பெற்றுள்ளார். இந்த நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பரிந்துரையின் பேரில் சர்வதேச அளவில் பங்கு கொள்ள உலக தரம் வாய்ந்த சைக்கிளை தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். தற்போது தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சி பெற்று வருகிறார். தேசிய அளவிலான போட்டியில் தங்கப்பதக்கம் வென்று உள்ளார் . கடந்த மாதம் நடந்த ஆசிய டிரக் சைக்கிள் பந்தயத்தில் வெண்கல பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். தற்போது வெளிநாட்டு பயிற்சிக்கு தமிழக அரசு ஏற்பாடு செய்து கொடுத்தால் சர்வதேச அளவில் தங்கப்பதக்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்ப்பேன்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் (எஸ்.டி.ஏ.டி.) வெளிநாட்டு பயிற்சியும், அதற்கு தேவைப்படும் ரோடு சைக்கிளும் தமிழக அரசு ஏற்பாடு செய்து தர வேண்டும் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கு பிரபல சர்வதேச சைக்கிள் வீரர் பிரதீப் சங்கரா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதற்கிடையில் திருச்சியை ஜமால் முகமது கல்லூரியில் நேற்று முன்தினம் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு விளையாட்டு உபகரணங்களை வழங்கி பேசும்போது,
திராவிட மாடல் ஆட்சியில் விளையாட்டு மேம்பாட்டுத் துறை மிகப்பெரிய வளர்ச்சி அடைந்துள்ளது. விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு கொடுத்த முக்கியத்துவத்தால் பல்வேறு விளையாட்டு வீரர்கள் தேசிய மற்றும் சர்வதேச அளவில் சாதனைப் படைத்து வருகின்றனர். இதற்கு உதாரணமாக இந்த மேடையில் ஆசிய சைக்கிள் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற வீரர் பிரதீப் சங்கரா, பாரா அத்லெடிக் விளையாட்டு வீரர் மணிகண்டன் ஆகியோர் உள்ளனர். இதில், பிரதீப் சங்கரா விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் தயாரிப்பு என்பது நமக்கு பெருமை. இதுபோல் உங்களிலிருந்தும் நிறைய விளையாட்டு வீரர்கள் உருவாக வேண்டும் என்று பேசி,பிரதீப் சங்கராவை நினைத்து புகழ்ந்து பெருமிதம் கொண்டது குறிப்பிடத்தக்கது.








Comments are closed, but trackbacks and pingbacks are open.