அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘மைலாஞ்சி’

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு: அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் டாக்டர் பா.அர்ஜுன், டைரக்ஷன்: அஜயன் பாலா, ஆர்டிஸ்ட் : ஸ்ரீராம் கார்த்திக்,க்ரிஷா க்ரூப், சிங்கம் புலி, முனீஸ்காந்த், ரவி மரியா பாடல்கள் & இசை: இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு: செழியன், எடிட்டிங்: ஸ்ரீகர் பிரசாத், ஆர்ட் டைரக்டர்: லால்குடி இளையராஜா, காஸ்ட்யூம் டிசைனர்: தட்சா பிள்ளை, எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்: வேணுகோபால், பிஆர்ஓ: நிகில் முருகன்

க்ரிஷா குரூப் சிறுமியாக இருக்கும் போதே வெளிநாட்டுக்குப் போன அப்பா திரும்பி வராததால் ஊட்டியில் இருக்கும் பல கோடி சொத்துக்களுக்குச் சொந்தக்காரியாகிறார். இவரை வளர்க்கும் சித்திக்கு அந்த சொத்தின் மீது கண் என்பதால், தனது குடிகாரத் தம்பிக்கு க்ரிஷாவைக் கட்டி வைக்க முயற்சிக்கிறார். ஆனால் இதில் க்ரிஷாவுக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. அந்த நேரத்தில் அதே ஊட்டியில் மின்சாரத்துறை அலுவலகத்தில் உதவி இஞ்சினியராக இருப்பவர் மீது காதல் வயப்படுகிறார். ஆனால் அந்த இஞ்சினியருக்கு இது தெரியாது. திடீரென ஒரு நாள் அந்த ஊரிலிருந்து டிரான்ஸ்பராகி சென்னைக்குச் செல்கிறார் அந்த இஞ்சினியர்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மைலாஞ்சிஇதனால் க்ரிஷா மனசொடிந்திருக்கும் இந்த நிலையில் தான் பறவைகளை போட்டோ எடுப்பதில் ஸ்பெஷலிஸ்டான ஹீரோ ஸ்ரீராம் கார்த்திக் ஊட்டிக்கு வருகிறார். ஒரு எதேச்சையான சந்திப்பில் க்ரிஷாவைப் பார்க்கிறார். தான் போட்டோ எடுக்க  விரும்பும் பறவை பற்றிச் சொல்கிறார் ஹீரோ. அதன் பின் மெல்ல மெல்ல ஸ்ரீராம் கார்த்திக் மீது காதல் கொள்கிறார். இடையிடையே இஞ்சினியரின் நினைவும் வருகிறது க்ரிஷாவுக்கு. இஞ்சினியரா? போட்டோகிராபரா? க்ரிஷாவைக் கரம் பற்றியது யார்? யாரா இருக்கும்? கண்டிப்பா ஸ்ரீராம் கார்த்திக்காத்தான் இருக்கும். இதிலென்ன சந்தேகம் உங்களுக்கு? ஏன்னா அந்த இஞ்சினியர் தியாக மனப்பான்மைக்குச் சொந்தக்காரனாத்தான் இருக்க முடியும். இது தெரியாமலா இம்புட்டு வருசம் நீங்களும் நாமும் தமிழ் சினிமா பார்த்துக்கிட்டிருக்கோம்?

“நீ அவனைக் கூட்டிட்டு ஓடிப்போயிரு. நீ அவனை லவ் பண்ணு” என பத்து வயசுப் பய க்ரிஷாவுக்க்கு ஐடியா கொடுப்பதெல்லாம் ரொம்ப ரொம்ப டூ மச் டைரக்டரே. இரண்டு மணி நேர திரைக்கதையும் திக்கிக்திணறித் தான் நகருதுங்கிறது உங்களுக்குத் தெரியலையா டைரக்டர் அஜயன் பாலா அவர்களே?

Admission Enquiry Form

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

மைலாஞ்சிபடத்தில் மனசுக்கு ரொம்ப ரொம்ப இதமான விஷயங்கள்னா அது இசைஞானியின் ஒரு பாடலும் அனேக காட்சிகளில் மனசை இலகுவாக்கும் பின்னணி இசையும் தான். குறிப்பா சொல்லணும்னா இண்டெர்வெல் விடும் நேரத்தில் வரும் லவ்டேல் ரயில்வே ஸ்டேஷன் சீன், ஸ்ரீராம் கார்த்திக்கும் க்ரிஷாவும் தனித்தனியாக மனசை கற்பனையில் ஓடவிடும் சீனில் சில நிமிடங்கள் இசையை வாசித்து, சில வினாடிகள் நிறுத்துவதெல்லாம் இந்திய சினிமாவில்  இசைஞானியால் மட்டுமே சாத்தியம். இதற்கடுத்து இதமளிப்பவர் ஒளிப்பதிவாளர் நம்ம அண்ணன் செழியன் தான். தான் ஒரு கைதேர்ந்த வித்தைக்காரன் என்பதை பல சினிமாக்களில் நிரூபித்த செழியனுக்கு இயற்கை எழில் பூமியான ஊட்டி கிடைத்தால் சும்மாவிடுவாரா? அடடா….அடடா… அவரின் கேமரா கண்கள் நம்ம கண்களை குளுமையாக்கிவிட்டது.

ஹீரோயின் தாய்மாமாவாக முனீஸ்காந்த், இன்னொரு போட்டோகிராபர் குலாம் அலியாக சிங்கம்புலி ஆகியோரும் உள்ளனர்.

க்ரிஷாவின் வீட்டிலிருக்கும் பறவைகள் பூங்காவுக்குப் பெயர் தான் மைலாஞ்சி. ஆனால் மனசுக்குள் எந்தப் பறவையும் நிற்கவில்லை.

அங்குசம் பார்வையில் ‘மைலாஞ்சி’ 40/100

—    ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.