அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

எல்ஃபின் மோசடி : போலீசார் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

திருச்சி மன்னார்புரத்தை தலைமையிடமாகக் கொண்டு, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பல்வேறு பெயர்களில் புது புது கம்பெனிகளை தொடங்கி பெரும் மோசடியில் ஈடுபட்ட எல்ஃபின் நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டவர்கள், அவர்களுக்கான இழப்பீட்டை பெற்றுக்கொள்வதற்கு பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசை அணுகுமாறு அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

இந்த மோசடியில் மூளையாக செயல்பட்ட எல்ஃபின் ராஜா (எ) அழகர்சாமி மற்றும் அவரது சகோதரர் ரமேஷ் ஆகியோர் உள்ளிட்டு இவர்களுக்கு உடந்தையாக இருந்த 50-க்கும் மேற்பட்ட ஏஜெண்டுகளுக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் 19 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்குகள் அனைத்தும் ஒருங்கிணைக்கப்பட்டு, திருச்சி மாவட்ட பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசு டி.எஸ்.பி. லில்லிகிரேஸ் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழுவினர் விசாரணையை தொடர்ந்து வருகின்றனர்.

யாவரும் கேளீர்

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

எல்ஃபின் ராஜா
எல்ஃபின் ராஜா

இவற்றுள் சில வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு அவர்களது சொத்துக்கள் அரசுடமையாக்கப்பட்டிருக்கும் நிலையில், அடுத்தகட்டமாக பொது ஏலத்தில் சொத்துக்களை விற்று பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு நிவாரணத்தை வழங்க போலீசார் நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

டி.எஸ்.பி. லில்லிகிரேஸ்
டி.எஸ்.பி. லில்லிகிரேஸ்

இந்நிலையில், “ இந்த மோசடியில் பாதிக்கப்பட்டதாக 8441 பேர்கள் புகார் கொடுத்துள்ள நிலையில், அவற்றுள் 3942 பேர் மட்டுமே திருச்சி பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு நிலையத்தில் ஆஜராகி  வாக்குமூலம் மற்றும் வழக்கு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்திருப்பதாகவும், இதுவரை வாக்குமூலம் வழங்காதவர்கள் திருச்சி மன்னார்புரம்,  காஜாநகரில் அமைந்துள்ள பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசு அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் ஆஜராகி வாக்குமூலத்தை பதிவு செய்ய அழைப்பு விடுத்திருக்கிறார்கள்.

—   ஆதிரன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.