நியோமேக்ஸ் : புகார்தாரர்கள் பட்டியலை சரிபார்ப்பது எப்படி ?
நியோமேக்ஸ் மோசடி வழக்கில், இதுவரையில் அடையாளம் காணப்பட்டு அரசுடமையாக்கப்பட்ட சொத்துக்களை முதற்கட்டமாக ஏலம் விட்டு, பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விகிதாச்சார அடிப்படையில் பிரித்துக் கொடுப்பதற்கான முன்னெடுப்பை நீதியரசர் பரதசக்ரவர்த்தியின் வழிகாட்டலில் பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
இது தொடர்பான, ஏல அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது இதுவரை புகார் அளித்தவர்களின் முழுமையான பட்டியலை பொருளாதாரக்குற்றப்பிரிவு போலீசார் வெளியிட்டுள்ளனர்.
2025, அக்-08 ஆம் தேதி வரையில் புகார் அளித்தவர்கள் மட்டுமே இந்த முதற்கட்ட நிவாரணத்தை பெற தகுதியுடையவர் என்பதாக நீதிமன்றம் வரம்பிட்டுள்ள நிலையில், தங்களது புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்ற குழப்பத்தில் பெரும்பாலான முதலீட்டாளர்கள் தவித்து வருகிறார்கள். இவர்கள் தங்களது புகார் பதிவாகியிருக்கிறதா? என்பதை சரிபார்ப்பதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக விளக்குகிறது இந்த காணொளி.
முழுமையான காணொளியை காண
நியோமேக்ஸ் ! புகார்தாரர்கள் பட்டியலை சரிபார்ப்பது எப்படி ?
Comments are closed, but trackbacks and pingbacks are open.