அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘அனோமி’

திருச்சியில் அடகு நகையை விற்க

தயாரிப்பு : குமார் மங்கத், அபிஷேக் மங்கத், பாவனா, ஆதித் பிரசன்னகுமார், டைரக்டர் : ரியாஸ் மரத், ஆர்ட்டிஸ்ட் : பாவனா, ரஹ்மான், ஷெபின் பென்சன், விஷ்ணு அகஸ்தியா, பினு பப்பு, ஒளிப்பதிவு : சுஜித் சாரங், இசை : ஹர்ஷவர்த்தன் ரமேஷ்வர், எடிட்டிங் : கிரண் தாஸ், தமிழ்நாடு ரிலீஸ் : ட்ரைடண்ட் ஆர்ட்ஸ், பி.ஆர்.ஓ.ஸ்ரீவெங்கடேஷ்.

இருவாரங்களுக்கு முன்பு மலையாளத்தில் ரிலீசான இந்த ‘அனோமி’ இப்போது தமிழ் பேச வந்திருக்கிறது. இரு இளைஞர்கள், ஒரு இளம் பெண், ஆகிய மூவரும் கொலை செய்யப்படுகிறார்கள். கொலையான இளைஞர்களில் ஒருவன் பாவனாவின் தம்பி ஷெபின் பென்சன். கண்டிப்பாக இது சைக்கோ கில்லரின் வேலையாகத் தான் இருக்கும் என முடிவுக்கு வருகிறது போலீஸ். கொலை வழக்கை விசாரிக்க களம் இறங்குகிறார் போலீஸ் அதிகாரி ரஹ்மான். தனது தம்பியைக் கொன்றவனை பலி வாங்க, பாவனாவும் களத்தில் இறங்குகிறார். ரைட்டு… இதுவும் சைக்கோ கில்லர் கதை தான். இடைவேளை வரை அந்த சைக்கோ யாருன்னே காட்டாம இருப்பாய்ங்க. அதுக்கப்புறமும் க்ளைமாக்ஸ் வரை இழுஇழுன்னு இழுத்து படத்தை முடிப்பாய்ங்க. இதையெல்லாம் எம்புட்டு வருசமா பார்த்துக்கிட்டிருக்கோம்னு நினைச்சு இடைவேளை வரை உட்கார்ந்துட்டு, ஒரு டீ சாப்பிட்டுட்டு உள்ளே போனோம்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

அனோமிஇந்த நினைப்போடு உள்ளே போனால் டோட்டலாக கதை-திரைக்கதையில் மிரட்டிவிட்டார் டைரக்டர் ரியாஸ் மரத். கொலையாளி என நினைத்து ஒருவனை ரஹ்மான் பிடித்து லாடம் கட்டிவிசாரிக்கும் போது கதையின் போக்கு திகிலூட்டிவிட்டது. டைரக்டர் ரியாஸ் மரத்துக்கு இது முதல் படமாம்….நம்பவே முடியல… நல்ல அனுபவசாலி போல, டிஃபெரெண்டான கதையை செலக்ட் பண்ணி, பக்காவாக ஸ்கிரிப்ட் எழுதி அதை ஸ்கிரீனில் கொண்டு வர மிகவும் கடினமாக உழைத்துள்ளார். சயின்ஸ் விஷயங்களை நிறைய பேரின் ஆலோசனையுடன் காட்சிப்படுத்தி மிரட்டியுள்ளார்.

அதிலும் கடைசி அரை மணிநேரம் ஹாலிவுட் டைரக்டர்களுக்கே சவால்விட்டு சாதித்துள்ளார் ரியாஸ் மரத். சபாஷ்…சபாஷ் …டைரக்டரே.

முதல்வர் பிறந்தநாள்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அனோமிகொல்லப்பட்ட இளைஞனின் அக்காவாக பாவனா. நீண்ட இடைவெளிக்குப்பிறகு திரையில் பார்க்கும் போது ரொம்ப ரொம்ப அழகு. நடிப்பிலும் டாப். அதே போல் போலீஸ் அதிகாரியாக ரஹ்மானும் சூப்பர் பெர்ஃபாமென்ஸ் பண்ணியுள்ளார். கோர்ட்டில் போலீசுக்கு எதிராக பாவனா வழக்குப் போட்டு, நீதிபதி முன்பு தலைகுனிந்து நின்று வெளியே வந்ததும் பாவனாவும் இவரும் உஷ்ணமாக பார்க்கும் சீனில் இருவருமே ஸ்கோர் பண்ணிவிட்டார்கள்.

இந்த ‘அனோமி’யின் ஆகப்பெரிய பலம் மியூசிக் டைரக்டர் ஹர்ஷவர்த்தன் ரமேஷ்வர் தான். படம் முழுக்க பின்னணி இசையில்..அதுவும் க்ளைமாக்ஸில்  மனுஷன் நம்ம மனசுக்குள்ள என்னென்னவோ பண்ணிட்டார். இந்த மாதிரி சினிமாக்களுக்கு எடிட்டரும் கேமராமேனும் முக்கியத் தூண்கள். அந்த வகையில் சுஜித் சாரங்கும் கிரண் தாஸும் போட்டிபோட்டு தாங்கியிருக்கிறார்கள்.

‘அனோமி’ நல்ல சினிமா ரசிகர்களுக்கு சூப்பர் விருந்து.

அங்குசம் பார்வையில் ‘அனோமி’ 68/100

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.