சூப்பர் ஸ்டார் ரஜினியை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனா ! ரஜினி ரசிகர்கள் ஆவேசம்….
சூப்பர் ஸ்டார் ரஜினியை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனாநாவை அடக்கிக் கொள்ள வேண்டும் த.வெ.க.கட்சித்தலைவர் விஜய் அவர்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மீறினால் வரும் சட்டமன்றத் தேர்தலில் ஆதவ் அர்ஜுனா போட்டியிடும் தொகுதியில் சாதாரண ஒரு ரஜினி ரசிகனை நிறுத்தி அவரை தோற்கடிக்கச் செய்வோம். இதே நிலை நீடித்தால் தமிழகம் முழுவதும் விஜய் கட்சி பங்கேற்கும் கூட்டணியை எதிர்த்து ரஜினி ரசிகர்கள் தேர்தல் பணிபுரியும் நிலைக்குத் தள்ளப்படுவார்கள்.
1996ஆம் ஆண்டு வெறும் ஏழு நிமிட பேட்டியில் தமிழ் மாநில காங்கிரஸ் என்ற கட்சியை உருவாக்கி 40சட்டமன்ற தொகுதியை கைப்பற்ற செய்தவர் தலைவர் ரஜினி வாய்ஸ் அப்போதைய ஆட்சி அமைவதற்கு காரணமாக இருந்த வரும் ரஜினிரஜினியின் புகழுக்கு களங்கம் விளைவிக்க நினைத்தால் லாட்டரி சீட்டு வியாபாரியை கசக்கி பிழிந்து விடுவோம் என மதுரையில் ரஜினி ரசிகர்கள் ஆவேச பேட்டி.
காக்கா குஞ்சுகளுக்கும் கள்ளச் சீட்டுக்கும் பதில் சொல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டோம் தலைவா வேதனை வெட்கம் அவமானம் காலம் பேசாது நிச்சயம் பதில் சொல்லும் களத்தில் சந்திப்போம் கதம் கதம் என்ற வாசகங்களோடு ரஜினிகாந்தை அவதூறாக பேசிய ஆதவ் அர்ஜுனாவை கண்டித்து மதுரையில் மதுரை மாநகர் மாவட்ட ரஜினிகாந்த் தலைமை ரசிகர் மன்றம் சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. அந்த கண்டனபோஸ்டர்களை அடித்த ரஜினிரசிகர்கள் ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி மதுரை மாநகர் மாவட்ட ரஜினி மன்ற துணைச்செயலாளர் மன்ற நிர்வாகி திருப்பரங்குன்றம் மன்ற பொறுப்பாளர் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது விஜய் ஆதவ்அர்ஜுனாவை கண்டித்து அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனஆவேசத்தோடு தெரிவித்தார்கள்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்







Comments are closed, but trackbacks and pingbacks are open.