அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அடிச்சவன் சொல்ல மாட்டான்… அடி வாங்குனவனாவது சொல்லணும்ல… – இயக்குநா் அமீர்

திருச்சியில் அடகு நகையை விற்க

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மதுரை மண்டல JAQH அமைப்பின் சார்பில் ரமலான் சிறப்பு தொழுகையில் நடைபெற்றது. தமுக்கம் மைதான திடல் பகுதியில் நடைபெற்ற இந்த சிறப்பு தொழுகையில்  பெண்கள், சிறுவர்கள், ஆண்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதேபோல் நெல்பேட்டை, வில்லாபுரம், தெற்குவாசல், ஆகிய பகுதிகளில் உள்ள திடல்களில்  JAQH ஜாக் அமைப்பினர் சார்பில் ஏராளமான இஸ்லாமியர்கள் பெருநாள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

இதேபோன்று புறநகர் பகுதிகளிலும் ஏராளமான இஸ்லாமியர்கள் பெருநாள் திடல் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.  மதுரை தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற ரமலான் திடல் சிறப்பு தொழுகையில் இயக்குனர் அமீர் கலந்து கொண்டு தொழுகையில் ஈடுபட்டார்.

முதல்வர் பிறந்தநாள்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய இயக்குனர் அமீர் ரமலான் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன் உலக மக்கள் சகோரதத்துவுடன் மத நல்லிணக்கத்தோடு அனைவரும் வாழ வேண்டும் என பிராத்தித்துள்ளேன்.

ஜனநாயகன் திரைப்படம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பபட்டது தொடர்பாக….

தேர்தல் ஆணையம் உச்சபட்ச அதிகாரம் கொண்டது அது ஒரு முடிவை எடுத்திருக்கும் போது அதற்கு கட்டுப்பட வேண்டியது அனைவருக்குமான பொறுப்பு இருக்கிறது. ஆனால் இதற்கு முன்பு வரை தேர்தல் ஆணையத்தால் தேர்தல் நேரத்தில் எந்த படமும் நிறுத்தப்பட்டதாக எனக்கு நினைவில்லை. முதல் முறையாக தமிழகத்தில் இப்படி ஒரு சூழல் நடந்திருக்கிறது. த.வெ.க தலைவரின் திரைப்படம் தடை செய்யப்பட்டிருக்கிறது. அதற்கான காரணத்தை தணிக்கை துறையும் சொல்லவில்லை அவர்களும் சொல்லவில்லை அந்த படத்தில் என்னதான் பிரச்சனைஇருக்கிறது என சொல்லவில்லை விஸ்வரூபம் திரைப்படத்தில் சிறுபான்மையினரை மனம் பாதிக்கப்படும் காட்சிகள் இருந்ததாக படம் பார்த்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்தார்கள்.

இயக்குனர் அமீர் பேட்டி...ஆனால் ஜனநாயகனில் என்ன இருக்கிறது என யாருக்குமே தெரியாது அது மறைமுக அஜெண்டாவாகதான் இருக்கிறது. ஜனநாயகன் ரீமேக் பிலிம் தெலுங்கில் இருந்து மொழிமாற்றம் செய்யப்பட்ட படம் அந்த படத்தில் என்ன காட்சிகள் இருந்தது வரம்பு மீறிய காட்சிகள் இருக்கிறதா, வசனங்கள் இருக்கிறதா என 2 தரப்புமே சொல்லாதது தான் இதில் ஒரு பெரிய கேள்விக்குறியாக உள்ளது. ஒன்று தணிக்கை வாரியம் சொல்ல வேண்டும் இந்த காட்சிகள் இருக்கிறது இதனை கட் பண்ண வேண்டும். காட்சிகளைகத் நிரகரிப்பதற்கான அதிகாரம் தணிக்கை துறைக்கு கிடையாது தகுதிச் சான்று தான் கொடுக்கும். சிகரெட் குடிக்கும் காட்சிகளுக்கு தமிழ் சினிமாவில் சப்டைட்டில் போட வேண்டும். ஹிந்தி படங்களுக்கு மது அருந்துக்கூடிய காட்சிகளுக்கு எதுவும் இருக்காது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஆனால் அது சென்சார் போர்டு மத்திய அரசாங்கத்தினுடையது  ஆனால் மாநிலத்திற்கு ஒரு விதி வட இந்தியாவில் ஒரு விதி உள்ளது. இங்குள்ள திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் இது குறித்து கேட்டார்கள் என தெரியவில்லை. இதில் ஒரு அரசியல் நடவடிக்கை இருக்கிறது என்று தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.

துரந்தர்-2  படத்தில் மோடி பதவி ஏற்பது உள்ளிட்ட காட்சிகள் இடம்பெற்றது தொடர்பான கேள்விக்கு ..

2014-ல் இருந்து பாஜக ஆட்சிக்கு வந்ததற்கு பின்பாக பாஜக ஆதரவு திரைப்படங்கள் நிறைய வந்து கொண்டே இருக்கிறது. காஷ்மீர் பைல்ஸ் தொடங்கி கேரளா ஸ்டோரி வரைக்கும் இதனை அரசாங்கமே ஊக்குவிக்கிறது. அதிகாரத்தில் இருக்கிறவர்களை ஊக்குவிக்கிறார்கள்.

ஜனநாயகன் படத்தில் இருக்கிற காட்சிகள் எதாவது அவர்களுக்கு எதிராக இருந்திருக்கலாம். அதனை அவர்கள்தான் சொல்ல வேண்டும் அந்தப் படத்தில் என்ன பிரச்சனை இருக்கிறது என சொல்ல மறுப்பதுதான் பிரச்சனை அடிச்சவன் சொல்ல மாட்டான். அடிவாங்குனவனாவது சொல்லணும்ல எதற்காக அடிக்கிறார்கள் என சொல்ல வேண்டும். அவர்களும் சொல்ல மாட்டார்கள் அதனால் யூகத்தில் பேச முடியாது.

மத சார்புடைய கூட்டணியில் செல்ல மாட்டேன் என விஜய் கூறியது குறித்த கேள்விக்கு ..

மறைவான அவருடைய உள்ளத்தில் இருந்த நிகழ்வுகளை சொல்ல முடியாது மறைவாக என்ன நடந்தது என்பதையும் விவரிக்க முடியாது. அவர் எடுத்திருக்கிறது சரியானது என்றால் சரியானதுதான் வரவேற்றாக வேண்டும். த.வெ.க தலைவர்களுடைய நிலைப்பாடுதான் பெரிய கேள்விக்குறியாக உருவாக்கிறது ஏனென்றால் ஒருவர் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்கிறார் ஒருவர் 90 சீட்டுகள் துணை முதலமைச்சர் என்கிறார். அவர்களிடம் தான் முரண் உள்ளது.

விஜயின் பேச்சு நம்பிக்கையானதா என்றால், சந்தேகப்பட வேண்டியது இல்லை அரசியல் களத்தில் மக்களுக்கு நன்மை செய்ய வரவேண்டும் எனவருபவர்களை முதல் பார்வையிலே சந்தேக பார்வை வைக்க வேண்டும் காலப்போக்கில் தெரிந்து கொள்ளலாம்.

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.