அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

”கால் கட்டும் படங்கள் சூப்பர் ஹிட்டும்” – ’பைக்கர்’ விழாவில் டாக்டர் ராஜசேகர் செண்டிமெண்ட்!

திருச்சியில் அடகு நகையை விற்க

இந்திய சினிமாவில் முதன்முறையாக பைக் ஸ்போர்ட்ஸை மையமாக வைத்து அதில் மனிதமனங்களின் உணர்வுகள், காதலை மிக்ஸ் பண்ணி தயாராகும் படம் ‘பைக்கர்’. யுவி கிரியேஷன்ஸ் விக்ரம் ரெட்டி, வம்சி கிருஷ்ணா ரெட்டி, பிரமோத் உப்பலபாட்டி ஆகியோர் தயாரித்திருக்கும் இப்படத்தை அபிலாஷ் ரெட்டி டைரக்ட் பண்ணியுள்ளார். தெலுங்கு சினிமாவின் சார்மிங் ஸ்டாரான ஷர்வானந்த் பைக் ரேஸராக நடிக்க, ஹீரோயினாக மாளவிகா நாயர், தெலுங்கு சினிமாவின் சீனியர் நடிகர் டாக்டர் ராஜசேகர் மற்றும் அதுல்குல்கர்னி ஆகியோர் நடித்துள்ளனர். தெலுங்கில் தயாராகி, தமிழ், மலையாள மொழிகளில் ஏப்ரல்.03-ஆம் தேதி ரிலீஸ் ஆவதால் தமிழ்ப் படத்திற்கான டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் மார்ச்.23-ஆம் தேதி நடந்தது.

இதில் முதலில் பேசினார் பெண்களுக்கு பிரத்யேக ரேஸ் பைக் டிரெய்னராக இருக்கும் ரோஷிணி, “இது எனக்கு புது அனுபவமாக இருந்தாலும் மிகவும் ஆர்வமுடன் வேலை செய்தேன். இளைஞர்களுக்கும் பைக் ரேஸிங் பிரியர்களுக்கும் இப்படம் மிகவும் பிடிக்கும்”.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

புரொடக்‌ஷன் டிசைனர் ராஜீவன், “இந்தப் படத்தில் ஆர்ட் ஒர்க் அவ்வளவாக வெளியே தெரியாது. ஆனால் அதற்குப் பின்னால் இருக்கும் உழைப்பும் ரேஸ் டிராக்குகளை உருவாக்குவதில், இரண்டு காலகட்டங்களில் கதை நடப்பதால் அதற்கேற்றார்போல சில பைக்குகளை உருவாக்க ஆஸ்திரேலியா, இந்தோனேஷியா, நியூஸிலாந்து போன்ற நாடுகளில்  ஸ்பேர் பார்ட்ஸ்களை வரவழைத்து பெரிதும் உதவினார்கள் தயாரிப்பாளர்கள்:. டைரக்டர் அபிலாஷ் ரெட்டியின் உழைப்பும் அசாத்தியமாக இருந்தது”.

பைக்கர்ஒளிப்பதிவாளர் மதி, “தொடர்ந்து ஒரு மாதமாக நடைபெற்ற பைக் ரேஸ் ஷூட்டிங் மிகவும் சவாலாக இருந்தாலும் எல்லோரும் ஆர்வமுடனும் அர்ப்பணிப்புடனும் வேலை செய்தோம். எனது சினிமாப் பயணத்தில் மறக்க முடியாத படம் இது”.

முதல்வர் பிறந்தநாள்

மியூசிக் டைரக்டர் ஜிப்ரான், “இந்த மாதிரியான வேகமும் ஆழமும் கொண்ட படங்களில் வேலை செய்வது எனக்கு மிகவும் பிடிக்கும். பைக் ரேஸிங் ஒலிகளைத் துல்லியமாக கொண்டு வருவதில் சவுண்ட் டிசைனுக்கும் முக்கிய பங்கு இருக்கு”.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

டைரக்டர் அபிலாஷ் ரெட்டி, “இந்தப் படம் தமிழ் ரசிகர்களின் மனதை நிச்சயம் தொடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. அனைவரின் கடின உழைப்பால் தான் இப்படத்தை என்னால் உருவாக்க முடிந்தது”.

பைக்கர்டாக்டர் ராஜசேகர், “மேடையில் தமிழில் பேசி நீண்ட நாட்களாகவிட்டதால் நான் ஏதாவது தப்பா பேசியிருந்தா மன்னிச்சிருங்க. மூன்று மாதங்களுக்கு முன்பு ஷூட்டிங்கில் நடந்த விபத்தால் எனக்கு கால் முறிவு ஏற்பட்டது. அதனால் இங்கே மேடைக்கு என் கைப்பிடித்து அழைத்து வந்தார் ஷர்வானந்த். என்னுடைய ‘இதாண்டா போலீஸ்’ பட ரிலீசுக்கு சில நாட்களே இருந்த போது வேறொரு ஷூட்டிங்கில் எனக்கு கால் முறிவு ஏற்பட்டது. அப்பல்லோ ஆஸ்பிட்டலில் கட்டுப் போட்டு படுத்திருந்தேன். ரிலீஸ் அன்னைக்கு காலில் கட்டுடன் இதே சத்யம் தியேட்டருக்கு வந்தேன். இப்போதும் காலில் கட்டுடன் தான் சத்யம் தியேட்டருக்கு வந்திருக்கேன். எனவே இந்த ‘பைக்கர்’ படமும் ஹிட் தான். தமிழ் ரசிகர்களின் அன்பினாலும் ஆதரவினாலும் இப்படம் பெரிய ஹிட்டாகும் என நம்புகிறேன்”.

ஷர்வானந்த், “ நான் நடித்த ‘எங்கேயும் எப்போதும்’, ’கணம்’ படங்களுக்கு தமிழ் ரசிகர்கள் கொடுத்த ஆதரவை மறக்க முடியாது. அதே போல் எனது சினிமா வாழ்க்கையில் மிகவும் முக்கியமான படமான இந்த ‘பைக்கரு’க்கும் தமிழ் ரசிகர்கள் பேராதரவு தர வேண்டும். டெக்னிக்கலாகவும் ஹியூமன் ஃபீலிங்கிலும்  நல்ல முயற்சி தான் இந்தப் படம்”.

டெக்னீஷியன்கள் –ஒளிப்பதிவு : மதி & யுவராஜ், இசை : ஜிப்ரான், எடிட்டர் : அனில் பசலா, ஆர்ட் டைரக்டர் : ஏ.பன்னீர்செல்வம், ஸ்டண்ட் : திலீப் சுப்பராயன், பி.ஆர்.ஓ.: யுவராஜ்

—    ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.