திமுகவில் சீட் மறுக்கப்பட்ட சிட்டிங் எம்.எல்.ஏ.க்கள் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் எந்தவிதமான பரிந்துரைகளுக்கும் இடமில்லை. மக்கள் விரும்பும் வேட்பாளர்தான் தேர்வு செய்யப்படுவார்கள் என்று திமுகவின் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்தபோதே, கட்சியினர் மத்தியில் பதற்றம் தொற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது. எப்படியாவது சீட் வாங்கித்தருகிறேன் என்று சொல்லி, பேரம் பேசியிருந்த பலருக்கோ வயிற்றில் புளியை கரைத்தது போலாயிற்று.

சிட்டிங் எம்.எல்.ஏ.க்களுக்கு மட்டுமின்றி அமைச்சர்களுக்கே கூட மீண்டும் போட்டியிடுவதற்கான சீட் மறுக்கப்பட்டிருப்பதுதான் விவாதத்தை கிளப்பியிருக்கிறது.

இந்த வார அங்குசம் வார இதழில்…

1) கன்னியாகுமரி மாவட்டத்தின் பத்மநாபபுரம் தொகுதியில், சிட்டிங் எம்எல்ஏவும், அமைச்சருமான மனோ தங்கராஜுக்கு சீட் மறுக்கப்பட்டிருக்கிறது. அவரின் பத்மநாபபுரம் தொகுதி கூட்டணி கட்சியான சிபிஎம் தொகுதிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது.

2) தாம்பரம்: எஸ்.ஆர். ராஜாவுக்குப் பதில் டாக்டர் ஆர்.எஸ். கிருத்திகா தேவி.

3) அண்ணா நகர்: எம்.கே. மோகனுக்குப் பதில் நே. சிற்றரசு.

4) எழும்பூர்: இ. பரந்தாமனுக்குப் பதில் தமிழன் பிரசன்னா

5) தியாகராய நகர்: ஜெ. கருணாநிதிக்குப் பதில் ராஜா அன்பழகன்

6)  அம்பத்தூர்: ஜோசப் சாமுவேலுக்குப் பதில் டாக்டர் அ.பு. பூர்ணிமா

7) ராயபுரம்: ஐடீம் ஆர்.மூர்த்திக்கு பதில் டாக்டர சுபேர்கான்

8)  திரு.வி.க.நகர்: சிவகுமாருக்கு பதில், கே.எஸ்.ரவிச்சந்திரன்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

9)  வில்லிவாக்கம்: வெற்றியழகனுக்கு பதில், கார்த்திக் மோகன்

10) காஞ்சிபுரம்: சி.வி.எம்.பி. எழிலரசனுக்குப் பதில் நித்யா சுகுமார்

11)  ஸ்ரீரங்கம்: எம். பழனியாண்டிக்கு பதில் எஸ். துரைராஜ்,

12) முசிறியில் காடுவெட்டி தியாகராஜானுக்கு பதில் கருணை ராஜா

13) லால்குடி சௌந்தரபாண்டியனுக்கு பதில் பாரிவள்ளல்

14) திருப்பூர் தெற்கு: க. செல்வராஜ்க்கு

15) என். தினேஷ் குமார்

16) நாமக்கல்: பெ. ராமலிங்கத்திற்கு பதில் பி. ரமணி

17) விக்கிரவாண்டி: அன்னியூர் சிவாவுக்கு பதில் என். புகழேந்தி

—   அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.