‘ராவடி’ ஷூட்டிங் ஓவர்!
‘சிறை’யின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ’ எஸ்.எஸ்.லலித்குமார் தயாரித்து முடித்திருக்கும் படம் ‘ராவடி’. இந்தப் படத்தில் மலையாள ஹீரோ பாசில் ஜோசப்புடன் லலித்குமாரின் மகன் எல்.கே.அக்ஷய்குமாரும் இன்னொரு ஹீரோவாக நடிக்கிறார். தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் தயாராகும் இப்படத்தை புதுமுக இயக்குனர் விக்னேஷ் வடிவேல் இயக்கியுள்ளார். படத்தில் ஐஸ்வர்யா சர்மா, ஜான்விஜய், சத்யன், நோபிள் கே.ஜேம்ஸ், ஷாரிக்ஹசன், அருணாச்சலேஸ்வரன் ஆகியோர் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு : லியோன் பிரிட்டோ, இசை : ஜென்மார்ட்டின், எடிட்டிங் : பரத் விக்ரமன், ஆர்ட் டைரக்டர் : பி.எஸ்.ஹரிகரன், பி.ஆர்.ஓ : யுவராஜ்.
சென்னை மற்றும் ஒகேனக்கல் பகுதிகளில் ஷூட்டிங் முடிந்து இப்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகின்றன. இந்த மே மாதம் ‘ராவடி’ ரிலீஸாகலாம்.
— ஆண்டவர்
Comments are closed, but trackbacks and pingbacks are open.