அங்குசம் பார்வையில் ‘காளிதாஸ்-2’
தயாரிப்பு : ‘ஸ்கை பிக்சர்ஸ்’ & ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ்’ டாக்டர் என்.யோகேஷ்வரன், கே.செந்தில். டைரக்டர் : ஸ்ரீசெந்தில், திரைக்கதை : அரவிந்தன் ஆனந்த், ஆர்ட்டிஸ்ட் : பரத், அஜய் கார்த்தி, பவானி ஸ்ரீ, பிரகாஷ் ராஜ், அபர்னதி, ‘பூவே உனக்காக’ சங்கீதா, அனந்த் நாக், கிஷோர், ஒளிப்பதிவு : சுரேஷ் பாலா, இசை : சாம் சி.எஸ்., எடிட்டிங் : புவன் ஸ்ரீனிவாசன், ஸ்டண்ட் : ஓம் பிரகாஷ், சவுண்ட் டிசைன் : தபஸ் நாயக், தயாரிப்பு வடிவமைப்பாளர் : ஜி.துரைராஜ், காஸ்ட்யூம் டிசைனர் : டோரத்தி ஜெய், பி.ஆர்.ஓ : யுவராஜ்.
வரிசையாக சில ஆண்கள் கொலை செய்யப்படுகிறார்கள். இதில் துப்புக்கிடைக்காமல் திணறுகிறார் இன்ஸ்பெக்டர் காளிதாஸ்[ பரத்] இந்த நேரத்தில் 350 வீடுகள் கொண்ட மிகப்பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்றில் டிச.31-ஆம் தேதி இரவு அனந்தநாக்-அபர்னதியின் குழந்தை மிஸ்ஸிங் என்ற தகவல் கிடைத்து ஸ்பாட்டுக்கு வருகிறார் பரத்.
அப்பார்ட்மெண்ட் வாசிகளை தீவிரமாக விசாரிக்கிறார். அங்குள்ள குழந்தைகளை விசாரிக்கும் போது அங்கு வருகிறார் ஏ.சி.வைஷ்ணவி[பவானி ஸ்ரீ]. புத்தாண்டு விடியும் நேரம் அப்பார்ட்மெண்ட்டின் அருகே இருக்கும் புல்வெளியில் டிராவல் சூட்கேஸில் திணிக்கப்பட்டு சடலமாக கிடக்கிறது குழந்தை.
குழந்தையைக் கொன்றது யார்? ஆரம்பத்தில் வரிசையாக நடந்த கொலைகளைச் செய்தது யார்? இதற்கான, பார்வையாளர்கள் கணிக்கவே முடியாத, திடுக்கிடும் க்ளைமாக்ஸ் தான் ‘காளிதாஸ்-2.
இன்ஸ்பெக்டர் காளிதாஸாக பரத். பாடி ஃபிட்டிங்கிலும் இன்ஸ்பெக்டருக்கான லிமிட்டிலும் கனகச்சிதமாக பொருந்தி ஸ்கிரிப்ட்டின் டெம்ப்டேஷனுக்கு பெரிதும் சப்போர்ட்டாக இருக்கிறார். டைட்டில் ரோலில் நடித்திருந்தாலும் டைரக்ட் ஐபிஎஸ்ஸான ஏசி பவானி ஸ்ரீயிடம் காட்டும் பவ்யம், அவரின் ஆர்டர்படி நடப்பது என காவல்துறையின் நிஜ நடைமுறைகளையும் பிரதிபலிக்கிறார். சில கொலை ஸ்பாட்டில் பரத் தரையில் படுத்து வலது பக்கம் சாய்ந்து பார்க்கும் விதத்தை நுணுக்கமாக செதுக்கியிருக்கார் டைரக்டர் செந்தில்.
படம் ஆரம்பித்த சில நிமிடங்களிலேயே சிலுவை முன்பு அஜய்கார்த்தியை ஒரு டைப்பான ஆளாக காட்டி, அதன் பின் அந்த குழந்தை கொலையிலும் ஸ்ட்ராங்காக சந்தேகப்பட வைத்து, பின்னர் அதை உடைத்து, விசாரணையை வேறு நபர்களை நோக்கி சந்தேகப்பட வைத்து கடைசியில் வேறு ஒருவருடன் கனெக்ட் பண்ணி, பக்கா இன்வெஸ்டிகேஷன் த்ரில்லராக ஸ்கிரிப்டை வடிவமைத்துள்ளார் அரவிந்தன் ஆனந்த்.
மிகப்பிரபலமான வக்கீலாக சீனியர் நடிகர் பிரகாஷ் ராஜ் எப்பவுமே சூப்பர் தான். இரண்டே சீன்கள் தான் என்றாலும் செம கெத்தாக வந்து போகிறார். ‘நம்மில் பலபேர் அறிவுப்பூர்வமா யோசிக்காம உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுக்குறதால தான் பல தப்புகள் நடக்குது” என கோர்ட்டில் வாதாடும் சீனில் சூப்பர் தோழர் பிரகாஷ் ராஜ்.
இவரின் ஜூனியராக அஜய் கார்த்தி. வசனங்கள் ரொம்ப குறைவு என்றாலும் குழந்தையை குறுகுறுவென பார்ப்பது, ஒரு கொலையை அசால்டாக செய்துவிட்டு, பரத்துக்கே போன் பண்ணுவது, பின் அவருடனேயே சில சீன்களில் டிராவல் பண்ணுவது, என பாடிலாங்குவேஜ் மூலம் கவனம் ஈர்க்கிறார். ஆளும் ஆஜானுபாகுவாகத் தான் இருக்கிறார். அடுத்தடுத்த படங்களில் இன்னும் நல்ல பெர்ஃபாமென்ஸை எதிர்பார்க்கலாம்.
குழந்தையின் அம்மாவாக அபர்னதி, அப்பாவாக அனந்த்நாக் வருகிறார்கள். ஸ்கிரிப்டின் மெயின் ஸ்விட்சுக்கு உதவியிருக்கிறது அபர்னதியின் ஃப்ளாஷ்பேக். ஏசியாக வரும் பவானிஸ்ரீயின் கேரக்டரும் அதன் குணாதிசியங்களும் போலீஸ் டிபார்மெண்டில் இருக்கும் மேலதிகாரிகளின் குடைசலையும் ஈகோ மோதலையும் காட்டுகிறது. ஹை அத்தாரிட்டி அதிகாரி என்ற தோரணையில் பரத்திடம் கடுகடுக்கும் சீன்களில் நச்சுன்னு பொருந்திப் போகிறார் பவானி ஸ்ரீ.
நீண்ட இடைவேளைக்குப் பிறகு ‘பூவே உனக்காக’ சங்கீதா. முகச் சுருக்கங்களை மறைக்க அளவாக மேக்கப் போட்டு அசத்தலாக வருகிறார். கதையின் மெயின் ட்விஸ்டே இவரை வைத்துத் தான்.
இன்வெஸ்டிகேஷ் த்ரில்லருக்கு சுரேஷ்பாலாவின் ஒளிப்பதிவு கூடுதல் சிறப்பு. சாம் சி.எஸ்.சின் பேக்ரவுண்ட் ஸ்கோர் தான் கூடுதல் டெம்போ ஏற்றுகிறது. உண்மையிலேயே இந்தப் படத்துல தான் மனுஷன் அடக்கி வாசிச்சிருக்காரு.
மெயின் லைன், அந்த லைனுக்குள் சப் லைன், அதற்குள் பல ட்விஸ்டுகள், என இரண்டரை மணி நேரமும் திரையிலிருந்து பார்வையை விலக்க முடியாத அளவுக்கு, இன்னும் சொல்லப் போனால் பரத்துக்கு ஃப்ளாஷ்பேக் வைக்க வழியிலிருந்தும் அதைத் தவிர்த்துவிட்டு, சில டயலாக்குகள் மூலமே அதைச் சொல்லியிருப்பது டைரக்டர் ஸ்ரீசெந்திலின் பிரிலியண்ட்டுக்கு சாட்சி.
என்ன ஒண்ணு படம் முழுக்க காளிதாஸை செம பிரிலியண்டாகவும் பிரிஸ்க்காகவும் காட்டிவிட்டு, க்ளைமாக்ஸில் சொதப்பவைத்ததும் சற்றே நெருடலாகிவிட்டது. ஒருவேளை காளிதாஸ்-3’க்கு பேஸ்மெண்ட் போட்ருக்காரோ என்னவோ?
மத்தபடி ‘காளிதாஸ்-2’ டபுள் ஓகே.
அங்குசம் பார்வையில் ‘காளிதாஸ்-2’ 65/100
— ஆண்டவர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.