அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கொடைக்கானலில் ஓய்வெடுக்க குடும்பத்துடன் புறப்பட்டார் முதல்வர் …

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழக சட்டசபைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடைக்கானல் சென்று ஓய்வு எடுக்க திட்டமிட்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து இன்று காலை 10 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்ட முதல்வர் தற்போது மதுரை வந்தடைந்தார்.  இங்கிருந்து அவர் சாலை மார்க்கமாக கொடைக்கானல் செல்கிறார். அங்கு 3 அல்லது 4 நாட்கள் தங்கி ஓய்வெடுக்க இருப்பதாக தெரிய வருகிறது.

தீவிர பிரசாரத்தில் ஈடுபட்ட முதல்வர் ஸ்டாலின் ஓட்டு பதிவிற்கு பின் வழக்கமாக கொடைக்கானல் சொல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். அங்கு வழக்கமாக தங்கும் தனியார் நட்சத்திர விடுதியில் இம்முறையும் தங்குகிறார். கடந்த 2019, 2021, 2024 தேர்தலில் வெற்றியை தொடர்ந்து கொடைக்கானல் பயணத்தை முதல்வர் தொடர்ந்து வருகிறார்.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

தமிழக சட்டசபைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. 234 தொகுதிகளில் மொத்தமாக 85.15% வாக்குகள் பதிவாகியது. மொத்தமாக 4.88 கோடி வாக்குகள்பதிவாகி இருக்கிறது. அதேபோல் தேர்தலின் போது எவ்வித அசம்பாவிதங்களும் நடக்கவில்லை.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தமிழ்நாடு முழுவதும் அமைதியான முறையில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்தது தேர்தல் முடிவடைந்த இரவே துணைமுதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது குடும்பத்துடன் துபாய்க்கு சுற்றுலா சென்று விட்டார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

இந்தநிலையில் தான் கொடைக்கானல் செல்வதற்காக சென்னையிலிருந்து தனி விமான மூலம் மதுரை சர்வதேச விமான நிலையம் வந்த முதல்வர் இங்கிருந்து கொடைக்கானல் புறப்பட்டார். முதல்வரின் வருகைக்காக போலீசாரால் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

—   ஷாகுல், படங்கள் : ஆனந்தன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.