அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி 9 தொகுதியில் 1.17 லட்சம் பேர் ஓட்டுப்பதிவு !

திருச்சியில் அடகு நகையை விற்க

கடந்த சட்டசபை தேர்தலைவிட 1.19 லட்சம் வாக்காளர்கள் குறைவாக இருந்தாலும், 1.17 லட்சம் வாக்காளர்கள் கூடுதலாக ஓட்டளித்துள்ளனர். 

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டசபை தொகுதிகளிலும் நேற்று முன்தினம் சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு நடந்தது. இதில் மொத்தம் 85.42 சதவீதம் ஓட்டுகள் பதிவானது. திருச்சி மாவட்டத் தில் 9 தொகுதிகளிலும் கடந்தாண்டு நவம்பர் மாதம் முதல் வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப்பணி (எஸ்ஐஆர்) மேற்கொள்ளப்பட்டு, இறந்தவர்கள், இரட்டைப் பதிவு, வெளியூர் சென்றவர்கள் கணக்கிடப்பட்டு 3.31 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதேசமயம், 1.1.2026 தகுதி நாளாக கொண்டும், விடுபட்டவர்கள் என ஒரு லட்சத்து 24 ஆயிரத்து 237 புதிய வாக்காளர்களும் சேர்க்கப்பட்டனர். நீக்கம், சேர்த்தல் என அனைத்துப் பணிகளுக்குப்பிறகு, 9 தொகுதிகளில் சேர்த்து 2021 தேர்தலின் போது பட்டிய லில்இருந்த வாக்காளர் களை விட, ஒருலட்சத்து 91 ஆயிரத்து 694 வாக்கா ளர்கள் குறைந்து, 21 லட் சத்து 47 ஆயிரத்து 51 பேர் மட்டுமே இருந்தனர்.

இந்த ஓட்டுப்பதிவின் போது, 9 தொகுதிகளில், 21 லட்சத்து 47 ஆயிரத்து 51 வாக்காளர்களில், 18 லட்சத்து 33 ஆயிரத்து 949 பேர் ஓட்டளித்துள்ளனர். 14 ஆயிரத்து 971 பேர்தபால் ஓட்டும் அளித்துள்ளனர். இதே, 2021 தேர்தலில் 17 லட்சத்து 31 ஆயிரத்து 171 பேர் மட்டுமே ஓட்டளித்திருந்தனர். கடந்த தேர்தலைவிட, இத்தேர்தலில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 749 பேர் கூடுதலாக ஓட்டளித்துள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.