மகளிர் குழுக்களை நள்ளிரவில் கந்து வட்டி கும்பல் போல் மிரட்டும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் !

0

கந்து வட்டி கும்பல் போல் மகளிர் குழுகளை நள்ளிரவில் மிரட்டும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள்

தேனி மாவட்டம், பழனிச் செட்டிபட்டி பகுதியில் 20 சேர்ந்து மகளிர் குழு நடத்தி வருகின்றனர். இவர்கள் 20 பேருக்கும் எல்என்டி தனியார் நிதி நிறுவனத்தில், ஒவ்வொரு நபரும் 30 ஆயிரம் கடன் பெற்றனர். இந்த மகளிர் குருவினர் வார வாரம் 2 ஆயிரம் ரூபாய் தவறாமல் கட்டி வருகின்றனர். இந்நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக ஏராளமான பெண்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களின் ஒப்புதல் இல்லாமலே கடன் பெற்று விடுகின்றனர்.

https://businesstrichy.com/the-royal-mahal/

ஆனால் கடன் கட்டும் போது ஒரு நபர் பணம் கட்டவில்லை என்றால் வசூல் செய்ய வரும் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அலுவலக நேரம் முடிந்த பின்பும் இரவு நேரங்களில் வசூல் என்ற பெயரில் கும்பலாக வந்து கடன் பெற்றவர்கள் வீட்டின் முன்பு கந்து வட்டி கும்பலை மிஞ்சும் அளவிற்கு தகாத வார்த்தைகளால் திட்டி வருகின்றனர். இதனால் ஏராளமான குடும்பங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு சண்டை சச்சரவுகள் வன்முறையாக மாறிவிடுகின்றது.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மன உளைச்சலுக்கு ஆளாகி சில பெண்கள் தற்கொலை செய்யும் அளவிற்கு கும்பலால் பாதிக்கப்படுகின்றனர். இந்த சூழ்நிலைக்கு தனியார் நிதி நிறுவனங்களே காரணமாக இருக்கின்றன . மேலும் கடன் பெற்றவர்களிடம் கடன் வசூலிக்கும் முறை குறித்து ஆர்பிஐ விதிமுறைகளை ஏராளமான நிறுவனங்கள் பின்பற்றுவது கிடையாது.

இது போன்ற சூழல் இருக்கும் பட்சத்தில் தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடன் பெற்ற பெண்களிடம் அளவுக்கு அதிகமாக தகாத வார்த்தைகளை பயன்படுத்தி மிரட்டி இரவு நேரங்கள் என்றும் பாராமலும் கடன் வசூல் செய்து வருகின்றனர்.

நேற்று 08.01.2023  இரவு வேலையில் எல்என்டி தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மீறி தொடர் வசூலில் ஈடுபட்டு ரவுடிசம் செய்வது வேதனையாக உள்ளதாக பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

எனவே மகளிர் குழுகளுக்கு கடன் கொடுக்கும் தனியார் நிதி நிறுவனங்கள் அரசு விதிமுறையை பின்பற்றி கடன் வசூலில் ஈடுபட வேண்டும். மேலும் விதிமுறைகளை மீறுபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று பாதிக்கப்பட்ட பெண்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.