அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் விறுவிறு !

0

அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன

தமிழர் திருநாள்பொங்கலை முன்னிட்டு உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகிற ஜன 16ல்அரசு வழிகாட்டுதல்படி நடைபெற உள்ளது

இன்னும் சில நாட்களே உள்ள நிலையில் பாலமேடு பேரூராட்சி மேற்பார்வையில் ஜே.சி.பி. எந்திரம் மூலம் மஞ்சமலை ஆற்று திடல், வாடிவாசல் பகுதி சீரமைக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறதுமேலும் வாடிவாசல் முன்பகுதி, பின்பகுதி பார்வையாளகள் அமரும் காலரி புதிதாக வண்ணம் தீட்டப்படுகிறது.

மேலும்கால்நடைகளுக்கு தண்ணீர் தொட்டி அமைப்பது, கழிப்பறை வசதி உள்ளிட்ட பல பணிகளும்நடைபெற்று வருகிறது. வழக்கத்தை விட இம்முறை பரிசுகளும் அதிகம் வழங்க விழா குழுவினரால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் கிராம பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நீச்சல், மண் குத்தும் பயிற்சி, நடைபயிற்சி அளித்து தயார்படுத்தி வருகின்றனர். காலை வளர்ப்பவர்கள்இதேபோல் மாடுபிடி வீரர்களும் தினந்தோறும் பயிற்சி பெற்று வருகின்றனர்இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை விழா குழுவினர் மும்முரமாக கவனித்து வருகின்றனர்.

ஷாகுல்.
படங்கள்: ஆனந்த்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.