மாற்றுத்திறனல்ல; மாற்றத்துக்கான திறன் – திருச்சி ராஜா சொல்லும் சூட்சுமம் !
வாழ்க்கையில் சிறு தடைகள் வந்தாலே மனம் தளர்ந்து விடும் இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார் திருச்சி மேலப்புதூரைச் சேர்ந்த ராஜா. மாற்றுத்திறனாளியான இவர், மற்றவர்களை சார்ந்து வாழாமல், தனக்கென ஒரு தொழிலை உருவாக்கி கடந்த 13 ஆண்டுகளாக சீட்டு மற்றும் கவர் தயாரிக்கும் கடையை நடத்தி வருகிறார்.
8-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ராஜா, முதலில் மற்றொரு கடையில் சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவத்தில் தனியே கடையை தொடங்கி நடத்தி வருகிறார். காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியின் முழுமையான ஆதரவும் தனது முன்னேற்றத்திற்கு முக்கிய காரணம் என்கிறார் ராஜா.
“எந்த சூழ்நிலையிலும் வீட்டுக்குள் முடங்கிவிடாதீர்கள்; ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்ளுங்கள். அது வாழ்க்கையில் நிச்சயம் கைகொடுக்கும்” என இளைஞர்களுக்கு அவர் கூறும் ஊக்கமளிக்கும் வார்த்தைகளை முழுமையாகக் கேட்க வீடியோவைப் பாருங்கள்!
மாற்றுத்திறனாளி அல்ல… தன்னம்பிக்கையின் அரசன்!
– தமிழி விமலா & நியா






Comments are closed, but trackbacks and pingbacks are open.