அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

குலதெய்வ கோயிலுக்கு வந்த நடிகர் தனுஷ் … எங்களையெல்லாம் கண்டுக்கல கிராம மக்கள் ஆதங்கம் !

திருச்சியில் அடகு நகையை விற்க

நடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் நிலையில், ஆண்டிப்பட்டி அருகே உள்ள குலதெய்வம் கோவிலில் நடிகர் தனுஷ், அவரது அண்ணன் செல்வராகவன், தந்தை கஸ்தூரிராஜா ஆகியோர் குடும்பத்தோடு சாமி தரிசனம் செய்திருக்கிறார்கள்.

அடிக்கடி குலதெய்வம் கோவிலுக்காக சொந்த ஊருக்கு வரும் தனுஷ் சொந்த ஊர் மக்களை  சந்தித்து பேசுவதோ, அவர்களுடன் ஒரு செல்பி எடுத்துகொள்வதோ இல்லை என்றும் இன்றும் அவரது வருகைக்காக காலையிலிருந்து நீண்ட நேரம் காத்திருந்தும் கண்டுகொள்ளாமல் வேகமாக சென்றதால் ஏமாற்றம் என்றும் பொதுமக்கள், ரசிகர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இனிவரும் நாட்களில் சொந்த ஊருக்கு வந்தால் நிச்சயமாக சொந்த ஊர் மக்களை பார்த்து, எங்களுடன் செல்பி ஆவது எடுத்துவிட்டு செல்ல வேண்டுமென அன்பு கோரிக்கை விடுத்திருக்கிறார்கள்.

குலதெய்வ வழிபாடுநடிகர் தனுஷ் இயக்கி நடித்த இட்லி கடை  திரைப்படத்தில் நித்யா மேனன், சத்யராஜ், அருண் விஜய், ராஜ்கிரண், சமுத்திரக்கனி உள்ளிட்ட ஏராளமான முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.இந்த திரைப்படமானது கடந்த  அக்டோபர் 1 ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.இந்த திரைப்படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே  முத்துரெங்கபுரம் கிராமத்தில் உள்ள அவரது குலதெய்வம் கோவிலில் நடிகர் தனுஷ் மற்றும் குடும்பத்தினர்கள் வழிபட்டு சென்றனர்.

https://www.livyashree.com/

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இட்லி கடை திரைப்படம் வெளியாகி வெற்றிகரமாக திரையரங்குகளில்  ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இயக்குனரும் நடிகர் தனுசின் தந்தையுமான கஸ்தூரிராஜா அவருடைய மனைவி விஜயலட்சுமி நடிகர் தனுஷ் அவரது மகன்கள் யாத்ரா லிங்கா மற்றும் செல்வராகவன் குடும்பத்தினர்கள் அனைவரும் முத்துரெங்கபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் கஸ்தூரி அம்மாள், மங்கம்மாள் குலதெய்வம் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து விட்டு புறப்பட்டு சென்றனர்.

குலதெய்வ வழிபாடுஇந்நிலையில் நடிகர் தனுஷ் வருவதை அறிந்து காலை முதலே அவரை பார்ப்பதற்காக கிராம மக்களும் , சிறுவர்களும், ரசிகர்களும் காத்திருந்த நிலையில் நடிகர் தனுஷ் வரும்போதும், திரும்பி செல்லும் போதும் ரசிகர்களையோ கிராம மக்களையோ கண்டு கொள்ளவே இல்லை  என கூறப்படுகிறது.

இது குறித்து அந்த கிராமத்தை சேர்ந்த பெண்கள் கூறும் போது குலதெய்வம் கோவிலுக்காக அடிக்கடி சொந்த ஊருக்கு வரும் நடிகர் தனுஷ் சொந்த ஊர் மக்களையும் , கூடியிருக்கும் ரசிகர்களையும் கண்டும் காணாமலுமே சென்று விடுவதாகவும் இது தங்களுக்கு மிகவும் ஏமாற்றத்தை தருவதாகவும் வழக்கம் போல இன்றும் அவரது வருகைக்காக காலை முதலே காத்திருந்த நிலையில் கோவிலுக்கு வந்துவிட்டு சென்ற தங்களை கண்டு கொள்ளவே இல்லை என்றும் வருத்தம் தெரிவித்தனர்.இனிவரும் நாட்களில் நடிகர் தனுஷ் சொந்த ஊருக்கு வந்தால் சிறிது நேரம் தங்களுடன் பேசிவிட்டோ அல்லது ஒரு செல்பி புகைப்படமாவது எடுத்து விட்டோ செல்ல வேண்டுமென தனுசுக்கு அன்பு கோரிக்கையும் வைத்துள்ளனர்.தனது தந்தையின் சொந்த ஊருக்கு குலதெய்வம் கோவிலுக்காக வந்திருந்த நடிகர் தனுஷ் அந்த கிராமத்தை சேர்ந்த மக்களையே சந்திக்காமல் சென்றது  அப்பகுதி மக்களிடையே பேசுபொருளாகி உள்ளது.

 

—   ஜெய்ஸ்ரீராம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.