விஜய்யின் பெயர் காந்தி! ‘கோட்’ டிரைலர் டெரர் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

விஜய்யின் பெயர் காந்தி! ‘கோட்’ டிரைலர் டெரர்! – ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 25வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ள, வெங்கட் பிரபு இயக்கியுள்ள ‘கோட்’ திரைப்படம் இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக திகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

முற்றிலும் மாறுபட்ட இரண்டு வேடங்களில் விஜய் நடிக்கும் ‘கோட்’, தமிழ் சினிமாவில் இந்த ஆண்டின் மிக அதிக பட்ஜெட்டில் உருவாகியுள்ள திரைப்படம் ஆகும். அதிரடி ஆக்ஷன் படமான இதில் விஜய் யுடன் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா முதல்முறையாக நடித்துள்ளனர். படத்தின் மீதான எதிர்பார்ப்பை இது இன்னும் அதிகரித்துள்ளது.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

மேலும் மைக் மோகன், அஜ்மல் அமீர், மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, வைபவ், யோகி பாபு, பிரேம்ஜி அமரன், யுகேந்திரன், வி டி வி கணேஷ் மற்றும் அரவிந்த் ஆகாஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சென்னை பிரசாத் லேப்பில் ஆக.17-ஆம் தேதி ‘கோட்’ டிரைலரை வெளியிட்ட பின் படம் குறித்து பேசிய ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தலைமைச் செயல் அதிகாரி அர்ச்சனா கல்பாத்தி பேசும் போது, “தளபதி விஜய், இயக்குநர் வெங்கட் பிரபு, இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா மற்றும் குழுவினருடன் இணைந்து ‘கோட்’ திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குவதில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் பெருமிதம் அடைகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

வெங்கட் மாணிக்கம், அர்ச்சனா கல்பாத்தி, வெங்கட் பிரபு, ஐஸ்வர்யா கல்பாத்தி.
வெங்கட் மாணிக்கம், அர்ச்சனா கல்பாத்தி, வெங்கட் பிரபு, ஐஸ்வர்யா கல்பாத்தி.

தற்போது வெளியிடப்பட்டுள்ள டிரைலர் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்ட காட்சிகளின் ஒரு சிறு துளியே தான்.. இந்த ப்படத்தை உருவாக்குவதில் நாங்கள் எவ்வளவு மகிழ்ச்சி அடைந்தோமோ அதே மகிழ்ச்சியை ‘கோட்’ படத்தை திரையில் காணும் போது ரசிகர்களும் அடைவார்கள் என்று நம்புகிறோம்,” என்றார் .

இயக்குநர் வெங்கட் பிரபு, பேசும் போது”இது கற்பனைக் கதை என்ற போதிலும் உண்மைக்கு நெருக்கமாக ‘கோட்’ திரைப்படத்தை நாங்கள் உருவாக்கியுள்ளோம். இந்திய உளவு அமைப்பானரா-வின் ஒரு பிரிவான தீவிரவாத எதிர்ப்பு படையில் விஜய் மற்றும் அவரது குழுவினர் பணியாற்றுகிறார்கள்.

கடந்த காலத்தில் அவர்கள் செய்த செயல் ஒன்று தற்போது ஒரு பிரச்சினையாக வெடிக்கிறது. விஜய்யும் அவரது குழுவினரும் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதே கதை. நான்கு ரா அதிகாரிகளைச் சுற்றி நடக்கும் இந்தக் கதை சாகசம் நிறைந்த சண்டைக் காட்சிகளோடு உருவாகியுள்ளது. விஜய்யின் அதிரடி நடிப்பு படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாக இருக்கும்,” என்றார்.

யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்களும் பின்னணி இசையும் படத்தின் மிகப்பெரிய பக்கபலமாக இருக்கும். ஐமேக்ஸ் தொழில்நுட்பத்தில் செப்டம்பர் 5 அன்று தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் உலகெங்கும் ‘கோட்’ ரிலீஸ்.
இப்படத்தில் விஜய்யின் பெயர் காந்தி. நல்லாருக்குல்ல…!?

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.