ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் இலவச வீட்டுமனைப் பட்டா சிறப்பு முகாம் மாவட்ட ஆட்சித்தலைவா் அறிவிப்பு
“திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் பல்வேறு காலகட்டங்களில் நிலம் கையகம் செய்யப்பட்டு வீடற்ற ஆதிதிராவிடர் சமூக மக்களுக்கு இலவச வீட்டுமனை ஒப்படை வழங்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் அறிவிப்பிற்கிணங்க, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் முதற்கட்டமாக இதுவரை 6919 பயனாளிகளுக்கு இ-பட்டா வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டாம் கட்டமாக, திருச்சிராப்பள்ளி மாவட்டத்தின் பல்வேறு கிராமங்களில் உள்ள, ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க நிலஎடுப்பு செய்யப்பட்ட நிலங்களில் காலியாக உள்ள மனைகளில் இலவச வீட்டுமனைப் பட்டா வழங்க ஏதுவாக எதிர்வரும் 05.11.2024, 06.11.2024 மற்றும் 07.11.2024 ஆகிய தேதிகளில் அனைத்து கிராம நிருவாக அலுவலகங்களிலும் காலை 10.00 மணிமுதல்மதியம் 2.00 மணிவரைசிறப்புமுகாம்நடைபெறஉள்ளது.
மேற்படி சிறப்பு முகாமில் வீடற்ற, ஆண்டு வருமானம் ரூ.1,00,000 ற்கும் குறைவாக உள்ள ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், ஆதார்அட்டை நகல், குடும்பஅட்டை நகல், சாதிச்சான்றிதல் மற்றும் வருமானச்சான்றிதல் ஆகிய ஆவணங்களுடன் கலந்து கொண்டு விண்ணப்பம் செய்து பயனையுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.