அரசு தொழிற்பயிற்சி நிலையம் நேரடி மாணவா்கள் சேர்க்கை அறிவிப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையம், திருவெறும்பூரில் 2025 ஆம் ஆண்டின் சேர்க்கையில்  காலியிடங்கள் உள்ள தொழிற் பிரிவுகளில்  சேர நேரடி சேர்க்கை (spot Admission)  23.06.2025  முதல் நடைபெற்று கொண்டிருக்கிறது.

நேரடி சேர்க்கைக்கு வரும்பொழுது அசல் மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிசான்றிதழ்,பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கைபேசி எண், E-mail Id மற்றும்  ஆதார் கார்டுஆகியவற்றை எடுத்து வரவேண்டும்.  விண்ணப்பக் கட்டணம் ரூ50/-. மேலும் சேர்க்கைக் கட்டணம் ஓர் ஆண்டு தொழிற் பிரிவுக்கு ரூ.185/- மற்றும் இரண்டுஆண்டு தொழிற்பிரிவுக்கு ரூ195/- செலுத்த வேண்டும்.

Sri Kumaran Mini HAll Trichy

அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர்ந்து பயிற்சி பெறும் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள், விலையில்லா சீருடை, விலையில்லா பாடப்புத்தகங்கள், விலையில்லா வரைபடக் கருவிகள், விலையில்லா காலணி, விலையில்லா பேருந்து பயண அட்டை வழங்கப்படும். அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் ஒவ்வொரு பயிற்சியாளர்களுக்கும்  மாதாந்திர உதவித்தொகை ரூ.750/- வழங்கப்படும்.

Flats in Trichy for Sale

மேலும் சேர்க்கை செய்யப்பட்ட பயிற்சியாளர்களில்  10ம் வகுப்பு, 12 ஆம் வகுப்புவரை அரசு பள்ளிகள் மற்றும்  அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ்வழியில் பயின்ற மாணவர்களுக்கு தமிழ்ப்புதல்வன்  திட்டத்திலும், மாணவியர்களுக்கு  புதுமை பெண் திட்டத்திலும் மாதந்தோறும் ரூ.1000/- உதவித்தொகை பயிற்சி முடியும் வரை வழங்கப்படும்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

மேலும், பயிற்சி முடித்த பின் வளாக நேர்காணல் மூலம்  வேலைவாய்ப்பும் பெற்றுத் தரப்படும். முன்னணி நிறுவனங்களில் On the Job பயிற்சி வழங்கப்படும். நேரடி சேர்க்கைக்கு கடைசி தேதி: 31.07.2025.

மேலும் தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் –  8508476230 எனவும் , இந்த வாய்ப்பினை மாணவா்கள் பயன்படுத்தி கொள்ளுமாறு திருச்சிராப்பள்ளி மாவட்டஆட்சித்தலைவர் வே.சரவணன்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.