திருச்சியில் ஏஐடியுசி ஆர்ப்பாட்டம் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தமிழ்நாடு அரசு துப்புரவு பணியை தனியார் மையத்தில் ஒப்படைக்கும் முயற்சியை கைவிட வலியுறுத்தி திருச்சியில் ஏ ஐ டி யு சி சார்பில் கவனயீர்ப்பார்ப்பட்டம் நடைபெற்றது.

திருச்சி மாவட்ட  ஏ ஐ டி யு சி சார்பில் திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகே கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அச்சங்க மாநில பொதுச்சயலாளர் சுரேஷ் தலைமை வகித்தார், மாவட்டத் தலைவர் நடராஜா பொருளாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில்  துப்புரவு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக திடக்கழிவு சேகரிப்பு மற்றும் போக்குவரத்து பணிகளை திருச்சி மாநகராட்சி பொது தனியார் கூட்டு முறையில் செயல்படுத்துவது, திட்ட அறிக்கை தயாரிக்க தமிழ்நாடு அரசு முன் வந்துள்ளது. பொது சேவைகளை வலுப்படுத்த வேண்டிய தமிழ்நாடு அரசு அவற்றை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் பாதையில் செல்வது சமூக பொறுப்பில் இருந்து விலகுவதாகும் எனவே திடக்கழிவு மேலாண்மை பணிகளை பொது தனியார் கூட்டு முறையில் செயல்படுத்துவதை கைவிட வேண்டும்.

AITUC Protest!அதே நேரத்தில் ஒப்பந்தம் அவுட்சோர்சிங் தினக்கூலி சுய உதவி குழு போன்று துப்புரவு பணியாளர்கள் பணியாற்றி வந்தாலும் அவர்களை பணி நிரந்தரம்  செய்ய வேண்டும். தற்போதைய விலைவாசி உயர்வு மற்றும் வாழ்வாதார செலவுகளை கணக்கில் கொண்டு புதிய குறைந்தபட்ச ஊதியத்தை அவர்களுக்கு நிர்ணயித்து வழங்க வேண்டும்.

தூய்மை பணியை தனியார் மயமாக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட்டு தூய்மை பணியாளர்களுக்கு பணி நிரந்தரம் வாழ்வாதார ஊதியம் சமூக பாதுகாப்பு பாதுகாப்பான பணி சூழல் போன்றவற்றை உருவாக்கி தர இந்த ஆர்ப்பாட்டத்தின் வாயிலாக வலியுறுத்தப்பட்டது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.