சூப்பர் ஸ்டார் ரஜினி கடந்த இருபது வருடங்களாக ஒரு பாலிஸியை விடாப்பிடியாக கடைப்பிடித்து வருகிறார். அதாவது, அவரது ஒவ்வொரு புதிய படத்தின் அறிவிப்புக்கு முன்பாக அரசியல் எண்ட்ரி குறித்து, மீடியாக்களில் பரபரப்பாக நியூஸ் கிளம்பும்படியாக பார்த்துக் கொள்வார். அல்லது ராகவேந்திரா மண்டபத்திலோ, தனது போயஸ்கார்டன் வீட்டிலோ ரசிகர்களைச் சந்தித்து அரசியலுக்கு வருவது பற்றி தீவிரமாக டிஷ்கஷன் பண்ணுவார். அந்தப் படத்தின் ஷூட்டிங் ஆரம்பித்ததும் பரபரப்பும் டிஷ்கஷனும் அடங்கி, பட ரிலீஸ் சமயத்தில் மீண்டும் அரசியல் எண்ட்ரி பரபரப்பு கிளம்பும்.
விஜய்யும் இதே ரகம் தான் என்றாலும் கொஞ்சம் அட்வான்சாக யோசித்து, தனது படத்திலேயே அரசியல் அட்டாக்கை வைத்து பரபரப்பு கிளப்புவார்கள். ஆட்சியாளர்களின் எதிர்ப்பும் கடுப்பும் கிளம்பினால் சரண்டராகிவிடுவார் விஜய். ஆனால் அஜித்தோ இந்த மாதிரி ஷாட்கட் டெக்னிக்குகளை விரும்பவேமாட்டார். தன் மேல் உயிரையே வைத்திருக்கும் ரசிகர்களை மட்டும் நம்பி நடிப்பார். இன்னும் சொல்லப் போனால் அஜித் படங்களின் புரொமோ நிகழ்ச்சிகள் கூட நடப்பதேயில்லை. அப்படிப்பட்ட நல்குணாதிசயம் கொண்ட அஜித்தா கடந்த பிப்ரவரி மாதம் தனது ‘வலிமை’ படத்தின் ரிலீசுக்காவும் ரிசல்ட்டுக்காகவும் சில வேலைகளைச் செய்தார்? என கோலிவுட் முழுவதும் கூடிக்கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
பொதுவாக எல்லாத் தமிழ் சினிமாக்களும் வெள்ளிக்கிழமை தான் ரிலீசாகும். ஆனால் அஜித்தின் ‘வலிமை’யோ வியாழக்கிழமையன்று, அதுவும் ஜெயலலிதா பிறந்த நாளான பிப்.24-ஆம் தேதி ரிலீசானது. ‘சதுரங்கவேட்டை’, ‘நேர்கொண்ட பார்வை’ என வலுவான கதையுள்ள படங்களை டைரக்ட் பண்ணிய எச்.வினோத், ‘வலிமை’யில் அஜித்தை மட்டுமே நம்பி டைரக்ட் பண்ணியிருப்பார் போல. வலுவான கதையோ, வேகமான திரைக்கதையோ இல்லாததால் வெறித்தனமான அஜித் ரசிகர்களைக்கூட படம் திருப்திப்படுத்தவில்லை. ஆனால் படத்தில் தனது உயிரைப் பணயம் வைத்து பைக் சேசிங் சண்டைக் காட்சிகளில் அஜித் தூள் பறத்தியிருந்ததை ரசிகர்களும் கொண்டாடினார்கள், பத்திரிகையாளர்களும் மெச்சினார்கள்.
மற்றபடி படத்தில் அஜித்தின் நடிப்பு என்பது ரொம்பவே கம்மிதான். இதனால் படம் ரிலீசாகி மூன்றாவாது நாளே தியேட்டர்களில் பாதி சீட்டுகள் காலியாகவே இருந்தன. ஆனாலும் அஜித்தோ தனது குடும்பத்துடன் மகிழ்ச்சியான நேரங்களை செலவழித்துவிட்டு, மீண்டும் எச்.வினோத்-போனிகபூர் காம்பினேஷ னில் அடுத்த படத்தில் நடிப்பதற்குத் தயாராகி விட்டார். இந்த நிலையில் அஜித்துக்கே தெரியாமல், அவரது பி.ஆர்.ஓ.வான சுரேஷ் சந்திரா, ஒரு திருகுஜால வேலையை ஆரம்பித்தார். அதாவது, தனக்குத் தெரிந்த டி.வி.சேனலின் நிருபர் ஒருவர், மற்றும் சில ‘கட்டிங்’ யூடியூப் பேர்வழிகள் மூலம் ”அரசியலில் எண்ட்ரியாகிறார் அஜித்” என்ற வதந்தியை வலிமை யாகக் கிளப்பிவிட்டார்.
அதுவும் என்னைக்குன்னா முதல்வர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச்.01-ஆம் தேதி யன்று. சுரேஷ்சந்திராவின் இந்த தில்லாலங்கடி வேலையைத் தனக்கு நெருக்கமானவர்கள் மூலம் தெரிந்து கொண்ட அஜித், அவரைக் கூப்பிட்டுக் கடித்ததும், “அஜித்துக்கு அரசியலில் நுழையும் எண்ணம் சிறிதுமில்லை. அவரது கவனம் முழுவதும் சினிமாவில் தான்” என தனது ட்விட்டரில் போட்டு, அதை பிரஸ் ரிலீசும் பண்ணினார் சுரேஷ் சந்திரா.
சமீபத்தில் அஜித் உடல் பரிசோத னைக்காக அப்பல்லோ ஆஸ்பிடல் சென்ற போது, ஆர்வம் மிகுதியால் அஜித்தை செல்போனில் படம் பிடித்தார் ஒரு நர்ஸ். இதுபற்றி அஜித் புகார் எதுவும் ஆஸ்பத்திரி நிர்வாகத் திடம் கொடுக்காத போது, அந்த நர்ஸை பணியிலிருந்து நீக்கியது அப்பல்லோ. அந்த நர்ஸை மீண்டும் அப்பல்லோவில் அஜித் மூலமாகவே சேர்த்துவிடுவதாகச் சொல்லி பேரம் பேசினார் சுரேஷ் சந்திரா. அதன் பின்னும் பல மாதங்கள் வேலையில் சேரமுடியாததால், சுரேஷ் சந்திராவின் யோக்கியதையை அம்பலப்படுத்த அஜித் வீட்டு முன்பாகவே தரையில் அழுது புரண்டு ஆர்ப்பாட்டம் பண்ணினார் அந்த நர்ஸ். எந்த வம்புதும்புக்கும் போகாத, யாரைப் பத்தியும் பொரணி பேசாத நல்ல மனுசனான அஜித்தை ஏன்யா வீதிக்கு இழுக்குறீக?