திமுக துணைத் தலைவருக்கு ஹைடெக் அறை..!

- ஜோஸ்

0

விதிகளை காற்றில்
பறக்கவிட்ட அதிகாரிகள்..!

திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சி 24 வார்டுகள் கொண்டு இயங்கி வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 17 இடங்களை திமுகவும், 7 இடங்களை அதிமுகவும் கைப்பற்றியது. நகர்மன்ற தலைவர் பதவி பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டதால் தலைவர் தேர்தலில் செல்வராணி மலர்மன்னன் நகர்மன்ற தலைவராக தேர்வு செய்யப்பட்டார். ஏற்கனவே இரண்டு முறை நகர்மன்ற தலைவராக பதவி வகித்த முரளிக்கு தலைவருக்கான வாய்ப்பு கைநழுவிப் போனதால் இம்முறை துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு 18 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். துறையூர் நகர் மன்றத்தில் 17 திமுகவினர் மட்டுமே உள்ள நிலையில் துணைத்தலைவருக்கான தேர்தலில் முரளி 18 வாக்குகள் பெற்றது திமுகவினரிடையே உற்சாகத்தையும் அதிமுகவினரிடையே அதிர்ச்சியையும் தந்தது. எதிர்கட்சியைச் சேர்ந்த ஒருவர் முரளிக்கு வாக்களிக்கும் அளவிற்கு துணைத்தலைவர் முரளியின் செல்வாக்கு எந்தளவிற்கு உள்ளது என்பதை பறைசாற்றும் விதமாக அவரின் பதவியேற்பு வைபவம் காட்டியது.


நகர்மன்ற தலைவருக்கான அறைகளைத் தயார் நிலையில் நகராட்சி அதிகாரிகள் வைத்திருந்ததோடு, அதன் அருகிலேயே தமிழகத்தில் உள்ள நகராட்சி விதிமுறைகளை மீறி, ஹைடெக் அளவில் 2 ஏசி மற்றும் உயர்ரக இருக்கை, மேஜை என அமைக்கப்பட்டே திமுக நகரச் செயலாளரும், நகர்மன்ற துணைத் தலைவருமான மெடிக்கல் முரளி அமர வைக்கப்பட்டார். ஆளும்கட்சித் தரப்பிற்கும், நகர்ப்புற அமைச்சருக்கும் பயந்து நகராட்சி அதிகாரிகள் ஹைடெக் அளவில் துணைத்தலைவருக்கு தனி அறை ஒதுக்கி ஆடம்பரம் செய்தது திமுகவினரி டையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியதோடு, அதிமுகவினர், நகராட்சி அலுவலர்களுக்கிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.