அங்குசம் பார்வையில் ‘குட் பேட் அக்லி’
தயாரிப்பு: ‘மைத்ரி மூவி மேக்கர்ஸ்’& ‘டி சீரிஸ்’ . டைரக்டர்: ஆதிக் ரவிச்சந்திரன். ஆர்ட்டிஸ்ட்ஸ்: அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன் தாஸ், சுனில், பிரசன்னா, பிரபு, ஜாக்கி ஷெராப், கார்த்திகேயன், பிரியா வாரியர், சிம்ரன், ஷாயாஜி ஷிண்டே, ரெடின் கிங்ஸ்லி, யோகி பாபு, டினு ஆனந்த். ஒளிப்பதிவு: அபிநந்தன் ராமானுஜம், எடிட்டிங்: விஜய் வேலுக்குட்டி, ஸ்டண்ட்: சுப்ரீம் சுந்தர், காஸ்ட்யூம்: அனுவர்தன். தமிழ்நாடு ரிலீஸ்: ரோமியோ பிக்சர்ஸ், பி.ஆர்.ஓ.: சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்.
பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பே தனது ரசிகர் மன்றத்தைக் கலைத்து விட்டார் அஜித். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ‘தல’ பட்டமும் வேணாம் என சொல்லிட்டார். “இனிமேல் வெறும் அஜித் குமார் அல்லது ஏகே, இது ஓகேன்னு டிக்ளேர் பண்ணினார். இதையெல்லாம் ரொம்பவே ‘அப்செர்வ்’ பண்ணிருப்பார் போல டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரன்.
இதுக்காகவே ஒரு கதை எழுதுறோம், கண்டமேனிக்கு கதைவிடுறோம், தாறுமாறு தக்காளிச் சோறு கிண்ட்றோம், ஒன் & ஒன்லி அஜித் ரசிகர்களை ஃபுல் எண்டெர்டெயின் பண்றோம் என்ற முடிவுடன் ஆதிக் இறங்கியிருக்கும் அதிரி புதிரி ஆக்ஷன் ரணகளம் தான் இந்த ‘குட் பேட் அக்லி’. அதுக்காக கதைக்கு ரொம்ப மெனக்கெட்டு உழைச்சிருப்பாரோன்னு நீங்க நினைச்சா…. ஸாரி யூ ஆர் வெரி பேட் மேன்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் ‘பாட்ஷா’+ ‘கபாலி’+ ‘அண்ணாத்தே’ =’குட் பேட் அக்லி’. சரி ஓரளவாவது இந்த கதையை சொல்லிருவோம். தனது கணவன் ஏகே மும்பையில் பெரிய கேங்ஸ்டர் என்பது தெரிந்ததும் பிறந்த ஆண் குழந்தையுடன் ஸ்பெயின் நாட்டுக்கு போய்விடுகிறார் த்ரிஷா. ஜெயிலுக்கு போய் திருந்தி 18 வருசம் கழிச்சு வந்தா என் பிள்ளையைப் பார்க்கலாம் என்கிறார். ஏகேவும் ஜெயிலுக்கு போகிறார். ஆனால் ஸ்பெயினில் இருக்கும் மகனை இன்னொரு கும்பல் கடத்தி விடுகிறது. இதனால் டென்ஷனாகும் ஏகே ஸ்பெஷல் ஆர்டரில் மும்பை ஜெயிலில் இருந்து ரிலீஸ் ஆகி ஸ்பெயினுக்குப் போகிறார்.
அதன் பிறகு நடக்கும் அஜித்தின் அதிரடி ஆட்டம் தான் படம். எல்லாப் படங்களிலும் வழக்கம் போல கோட் – சூட் கூலிங் கிளாஸுடன் ‘ரேம்ப் வாக்’ வருவார் அஜித். இதில் கொஞ்சம் சேஞ்சாக மலேசியாவின் டிரேட் மார்க் பூப்போட்ட டிசைன் சட்டையுடன் வருகிறார். மெயின் வில்லன் அர்ஜுன் தாஸ் உட்பட அடியாள் படை வீரர்கள் அம்புட்டுப் பேரையும் அதே காஸ்ட்யூமில் இறக்கி கதிகலங்க வச்சுட்டார் ஆதிக்.
“ஏய்….என்னடா ஏகே பேரைச் சொன்னதும் உங்க முகத்துல பயம் தெரியுது. அந்த ஏகே யாருன்னு தெரியுமா? சாதா டிராகனா இருந்த அவரு ரெட் டிராகனா எப்படி மாறுனாரு தெரியுமா? அவரோட ‘வரலாறு’ தெரியுமா? அவரு எவ்வளவு பெரிய ‘வில்லன்’ தெரியுமா? ‘ ‘பில்லா’ மாதிரி தில்லா நிப்பாரு தெரியுமா? எனக்கு கூட்டம் வேணாம்னு அவரு சொன்னாலும் அவரு பின்னால பெரிய கூட்டம் நிக்கும் தெரியுமா?” இதெல்லாம் யாரு பேசுற டயலாக் தெரியுமா? எல்லாமே வில்லன்கள் பேசுறது.
அதிலும் ஜாக்கி ஷெராப்பும் டினு ஆனந்த்தும் மெண்டல் ஆஸ்பத்திரியில் இருந்து எஸ்கேப்பாகி வந்த கேஸ்கள் மாதிரியே இருக்காய்ங்க. அர்ஜுன் தாஸ் மட்டும் தான் டபுள்ஸா வந்து அஜித்துக்கு டஃப் கொடுக்கிறார். ஸ்பெயின் நாட்டு ஜெயிலுக்குள் இருக்கும் அஜித் மகனை ( கார்த்திகேயன்) காப்பாற்ற மும்பை ஜெயிலில் இருக்கும் கைதி ரெடின் கிங்ஸ்லிய டெபுடேஷன்ல் ஸ்பெயின் ஜெயிலுக்கு அனுப்பிய கொடுமை பத்தாதுன்னு அங்கே இருக்கும் பிரசன்னாவும் சுனிலும் கைதியா உள்ளே போய் சாகசம் பண்றதெல்லாம் வெரி வெரி அக்லி மேட்டர்ஸ்ப்பா.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ஏம்பா ஆதிக் ஏம்பா இப்படி? சிம்ரன் எண்ட்ரிலாம் வெரி பேட் சமாச்சாரம். அப்புறம் ரொம்ப முக்கியமான சங்கதி என்னன்னா…. இதயம் பலவீனமான நிலையில் இருப்பவர்கள், காதுகளில் கெட்டியாக பஞ்ச்சை அடைத்துக் கொண்டு படம் பார்த்தால் ஜி.வி.பிரகாஷின் கர்ண கொடூர இசை இம்சையிலிருந்து தப்பிக்கலாம். 2 மணி நேரம் 19 நிமிடமும் ஒரே காட்டுக்கத்தல் தான். ஹலோ ஜி.வி.பி. தம்பி என்னாச்சு உங்களுக்கு? நாம் விமர்சனத்தின் ஆரம்பத்தில் சொன்னது போல அஜித் ரசிகர்களுக்கு மட்டுமே ‘குட்’. மற்றவர்களுக்கு ‘பேட் & அக்லி ‘.
— மதுரை மாறன்.