பூரி ஜெகன் நாத்+ விஜய் சேதுபதி காம்போவுடன் இணைந்தார் தபு!

0

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தெலுங்கு சினிமாவின் கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், தனது அடுத்த கனவுப்படமாக உருவாகும், பான்-இந்தியா படம் குறித்து உகாதி திருநாளில்  அறிவித்தார். இப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரின் தயாரிப்பு நிறுவனமான ‘பூரி கனெக்ட்ஸ்’ பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

விஜய் சேதுபதிக்காகவே இயக்குநர்  பூரி ஜெகன்நாத் மிகவும் தனித்துவமான ஒரு கதையை  வடிவமைத்துள்ளார். இந்தக் கதை, அழுத்தமான கேரக்டர், விஜய் சேதுபதியின் புதிய அடையாளத்தை திரையுலகிற்கு வெளிப்படுத்துவதாக இருக்கும்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

பான் இந்தியா படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க சீனியர் நடிகை தபு இப்போது ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தில் தனது கேரக்டர் மற்றும் அழுத்தமான கதைக்களத்தாலும் உடனடியாக ஈர்க்கப்பட்டு இப்படத்தில் நடிக்க, உடனடியாக ஒப்புக்கொண்டுள்ளார் தபு.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம்,  இந்தி ஆகிய மொழிகளில் தயாராகும் பான் இந்தியா படமான இதன் ஷூட்டிங் ஜூன் மாதம் ஆரம்பம்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இப்படத்தின் மற்ற நடிகர்கள் தொழில் நுட்பக் கலைஞர்கள் பற்றிய விவரம் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

பூரி கனெக்ட்ஸ்

சி.இ.ஓ: விசு ரெட்டி

மக்கள் தொடர்பு : யுவராஜ்

மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.