அறுவை சிகிச்சை தேவையில்லை … வந்தாச்சு புதுக்கருவி ! அசத்தும் திருச்சி ஜி.எச்!
திருச்சி அரசு மருத்துவமனையில் எண்டோஸ்கோபிக் அல்ட்ராசவுண்ட் கருவி மூலம் கணையத்தில் இருந்த 16 செ.மீ. அளவிலான கட்டியை அறுவை சிகிச்சையில்லாமல் அகற்றி அசத்தியிருக்கிறார்கள். சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான இந்த கருவியின் மூலம், கணையம், கல்லீரல், பித்தப்பை மற்றும் பித்தநீர் குழாய் தொடர்பான பல்வேறு பிரச்சினைகளை கண்டறிந்து அவற்றிற்கு அறுவை சிகிச்சை இன்றி தீர்வு காணவும் முடியும் என்கிறார்கள். வெற்றிகரமாக நடத்தி முடித்த அறுவைசிகிச்சை குறித்தும், பொதுவில் மதுப்பழக்கம், துரித உணவு, ஒழுங்கற்ற உணவு மற்றும் மனஅழுத்தம் ஆகியவை கல்லீரலை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பது குறித்தும் விவரிக்கிறார்கள் குடல்நோய் மருத்துவ துறை மருத்துவர்கள் ஷஃபிக் மற்றும் கிஸ்வந்த்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.