‘அன்பே டயானா’ தேங்க்ஸ் கிவிங் மீட் நியூஸ்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

‘நியோ கேஸ்ட்ல் கிரியேஷன்ஸ்’ சத்யா கரிகாலன் & ‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்து, பாரி இளவழகன் டைரக்‌ஷனில் கடந்த ஜூலை 17-ஆம் தேதி ரிலீசானது ‘அன்பே டயானா’. இரண்டாவது வாரமும் தொடர்ந்து பல தியேட்டர்களில் ஹவுஸ்ஃபுல்லாக ‘அன்பே டயானா’ ஓடிக் கொண்டிருப்பதால் மகிழ்ந்த படக்குழுவினர், மீடியாக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வை சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் ஜூலை.27-ஆம் தேதி நடத்தினார்கள்.

யுவராஜ் கணேசன்
யுவராஜ் கணேசன்

இந்த வார அங்குசம் வார இதழில்…

இதில் பாடலாசிரியர்கள் மோகன்ராஜன், முத்தமிழ், பாக்கியம் சங்கர், இசையமைப்பாளர் பரத் சங்கர், கேமராமேன் ஷெல்லி காலிஸ்ட், எடிட்டர் பார்த்தா, ஆர்ட் டைரக்டர் மகேந்திரன், காஸ்ட்யூம் டிசைனர் அபி நந்தினி, ஹீரோயின் ரம்யா ரங்கநாதன், நடிகர் பரிதாபங்கள் கோபி ஆகியோர் வழக்கம் போல, “என் மீது நம்பிக்கை வைத்து வாய்ப்பளித்த இயக்குனருக்கும் தயாரிப்பாளர்களுக்கும் படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த மீடியாக்களுக்கும் படத்தில் பணிபுரிந்த நடிகர்-நடிகைகள், டெக்னீஷியன்களுக்கும் நன்றி” என அனைவரின் பேர்களையும் மறக்காமல் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

தயாரிப்பாளர் சத்யா கரிகாலன், “இந்த வெற்றியின் பின்னணியில் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் இருக்கிறார்கள். எங்களது முதல் தயாரிப்பில் கைகோர்த்த யுவராஜ் கணேசனுக்கும் டைரக்டர் பாரி இளவழகனுக்கும் நன்றி. இனிமேல் தொடர்ந்து நல்ல படங்களைத் தயாரிப்போம்” என்றார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

யுவராஜ் கணேசன், “அர்ப்பணிப்புடன் உழைத்த அனைவரின் உழைப்புக்கு கிடைத்த அங்கீகாரம் தான் இந்த வெற்றி”.

பாரி இளவழகன்
பாரி இளவழகன்

சென்னை வினியோகஸ்தர் வம்சி, “இருபது வருடங்களாக ஷிப்பிங் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் தொழிலில் இருக்கும் எனக்கு இது முதல் சினிமா வினியோகம். இரண்டாவது வாரத்திலேயே எனது முதலீடு முழுமையாக கிடைத்ததில் மகிழ்ச்சி. இந்த வாய்ப்பை எனக்கு வழங்கிய யுவராஜ் கணேசனுக்கு நன்றி”.

பாரி இளவழகன், “இந்தப் படத்தை நான் டைரக்ட் பண்ணி ஹீரோவாக நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த யுவராஜ் கணேசன் சாருக்கு நன்றிகளை சொல்லிக் கொண்டே இருக்கலாம். அதே போல் எங்களின் பி.ஆர்.ஓ.யுவராஜ் அண்ணன், எப்போது கூப்பிட்டாலும் ஓடோடி வருவார். படத்தின் புரமோஷனுக்கு பல வழிகளில் உதவினார்”.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.