அங்குசம் பார்வையில் ‘டியர்’ [ DeAr]

குடும்பத்தைவிட்டு ஓடிப்போன தலைவாசல் விஜய்யை கூட்டி வந்து வண்டி வண்டியாக செண்டிமெண்ட் சீன்களை வைத்து வாளி வாளியாக சோகத்தைப் பிழிந்து நம்மையும் லைட் குறட்டைவிட வைத்துவிட்டார் டைரக்டர்.

0

                   அங்குசம் பார்வையில் ‘டியர்’ [ DeAr]

தயாரிப்பு: ‘நட்மெக்’ புரொடக்‌ஷன்ஸ்’ வருண் த்ரிபுரனெனி, அபிஷேக் ராமிஷெட்டி, ஜி.பிருத்விராஜ். வெளியீடு: ரோமியோ பிக்சர்ஸ். டைரக்‌ஷன்: ஆனந்த் ரவிச்சந்திரன். நடிகர்—நடிகைகள்: ஜி.வி.பிரகாஷ்குமார், ஐஸ்வர்யா ராஜேஷ், காளிவெங்கட், நந்தினி, ரோகிணி—தலைவசால் விஜய், இளவரசு—கீதா கைலாசம், அப்துல் லீ, கமலேஷ், மகாலட்சுமி சுதர்சனன். டெக்னீஷியன்கள்; இசை: ஜி.வி.பிரகாஷ் குமார், ஒளிப்பதிவு: ஜெகதீஷ் சுந்தரமூர்த்தி, எடிட்டிங்: ருக்கேஷ். பி.ஆர்.ஓ.; யுவராஜ்.

 சென்னையில் தனியார் நியூஸ் சேனல் ஒன்றில் நியூஸ் ரீடராக இருக்கிறார் அரவிந்த் ( ஜி.வி.பிரகாஷ்) இவரது அம்மா ரோகிணி, அண்ணன் காளிவெங்கட், அண்ணி நந்தினி ஆகியோருடன் வசிக்கிறார். தூங்கும் போது கனவில் சின்ன சத்தம் கேட்டாலே திடுக்கிட்டு விழிப்பவர் ஜி.வி.பி`

ஊட்டி குன்னூரில் அப்பா இளவரசு, அம்மா கீதா கைலாசத்துடன் வசிக்கும் தீபிகா [ ஐஸ்வர்யா ராஜேஷ் ] தனியார் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கிறார். தூக்கத்தில் பலத்த சத்தத்துடன் குறட்டைவிடும் பழக்கம் ஐஸுக்கு. இவரின் இந்தப் பழக்கத்தால், பெண் பார்க்க வரும் பல மாப்பிள்ளைகள் தெறித்து ஓடுகிறார்கள். இந்த நிலையில் தான் ஐஸுவை பெண் பார்க்க வருகிறார்கள் ஜி.வி.பி.யும் அவரது குடும்பமும்.

- Advertisement -

பெண் பார்க்க வந்த இடத்தில் தான் தெரிகிறது, ரோகிணியும் கீதா கைலாசமும் திருச்சியில் ஒன்றாகப் படித்த தோழிகள் என்று. அதனால் இரு குடும்பமும் மேலும் நெருக்கமாகிவிடுகிறது. குறட்டை பழக்கத்தை மாப்பிள்ளையிடம் சொல்ல வேண்டாம் என ஐஸுவிடம் கீதா கைலாசம் சொல்லிவிடுகிறார். இதை மறைத்து, நிச்சயதார்த்தம் நடந்து, திருமணமும் நடந்துவிடுகிறது.

ஃபைர்ஸ்ட் நைட் அன்று ஐஸுவின் குறட்டைப் பழக்கம் அம்பலத்திற்கு வருகிறது. இதனால் அதிர்ச்சியாகிறார் ஜி.வி.பி. இருந்தாலும் இருவரும் சேர்ந்து சமாளிக்கும் திட்டத்துடன் டைம்டேபிள் போட்டு ஒருவர் முழித்திருக்க, ஒருவர் தூங்க என நாட்களை நகர்த்துகின்றனர். இந்த தூக்கமின்மையால் ஜி.வி.பி.க்கு வேலை போகிறது. இதனால் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்குப் போகிறார் ஜி.வி.பி. விவாகரத்து கிடைத்ததா? பிரச்சனை சுமூகமாகி, இருவரும் சேர்ந்து வாழ்கின்றனரா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘தீபிகா-அரவிந்த்’ தின் சுருக்கமான ‘DeAr’`

தமிழ் சினிமாவின் தொன்றுதொட்ட வழக்கப்படி ஹீரோவும் ஹீரோயினும் க்ளைமாக்சில் இணைவது தான் நியதி. அந்த நியதியை இந்த டியரிலும் கடைப்பிடித்திருக்கிறார் டைரக்டர் ஆனந்த் ரவிச்சந்திரன். நடுத்தர வர்க்கத்து இளைஞனாக ஜி.வி.பி. செம ஃபிட்டாக இருக்கிறார். இவரது முந்தைய படங்களிலிருந்து இவரது உடல் மொழியும் இதில் முற்றிலும் வேறுபட்டு கவனம் ஈர்க்கிறது. விவாகரத்து கேட்டு கோர்ட்டில் மனு கொடுத்த பின் ஐஸு கர்ப்பமாக இருப்பதைச் சொன்னதும் லேசாக அதிர்ச்சியாகி, குழந்தை பெற்றாலும் டைவர்ஸில் உறுதியாக இருப்பதாகச் சொல்லும் இடத்தில் ஜி.வி.பி.யின் சமாளிப்புகள் ஓகே ஓகே. ரகம்.

4 bismi svs

ஆனால் ஜி.வி.பி.யின் பெர்ஃபாமென்ஸைவிட ஐஸ்வர்யா ராஜேஷின் பெர்ஃபாமென்ஸ் தான் ஒரு ஸ்டெப் கூடுதலாக இருக்கு என்பதையும் மறுப்பதற்கில்லை. குன்னூருக்கு பெண் பார்க்க வரும் ஜி.வி.பியிடம், “சென்னை ரொம்ப ஹீட்டா இருக்கும். அதனாலேயே அங்கு வசிப்பவர்களுக்கு இயற்கையிலேயே கோபம் அதிகமா இருக்கும்” என பாலிஸாக பேசும் சீன், “குழந்தை வளர்ந்த பிறகு அவனுக்கோ அல்லது அவளுக்கோ இந்த குறட்டைப் பழக்கம் இருந்தா என்ன செய்வ” என ஜிவிபி.யிடம் கோபம் காட்டும் சீன், முப்பது வருடங்களுக்கு முன்பு குடும்பத்தைத் தவிக்கவிட்டுவிட்டுப் போன ரோகிணியின் கணவரும் ஜி.வி.பி.யின் அப்பாவுமான தலைவாசல் விஜய்யைத் தேடிப் போகும் சீனிலும் அநாயசமாக நடித்து அசத்தியுள்ளார்.

என்ன ஒண்ணு ஜி.வி.பி—ஐஸ்வர்யா ராஜேஷ் ஜோடிப் பொருத்தம் தான் கொஞ்சம் ஒட்டமாட்டேங்குது.

அதே போல் காளிவெங்கட்டின் கேரக்டர் அவுட்புட் ஓகே என்றாலும் அதன் பேஸிக் மெண்டாலிட்டி சரியாக ஒர்க்—அவுட் ஆகவில்லை. இவரது அப்பாவி மனைவி கல்பனாவாக வரும் நந்தினி தான் பல சீன்களில் ரொம்பவே கவனம் ஈர்க்கும் நடிப்பை வெளிப்படுத்தி அசத்தியிருக்கிறார். ஜி.வி.பி.யின் அம்மாவாக வரும் ரோகிணி, தான் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் ஆர்ட்டிஸ்ட் என்பதை பல சீன்களில் புரூஃப் பண்ணினாலும் க்ளைமாக்ஸ் ஆஸ்பத்திரி சீனில் அவர் பேசும் டயலாக் மாடுலேஷனும் பாடி லாங்குவேஜும் அப்படியே கண்ணுக்குள் நிற்கிறது. ஐஸுவின் அம்மா-அப்பாவாக வரும் கீதா கைலாசமும் இளவரசுவும் கேரக்டரை கச்சிதமாக வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

இரண்டு பாடல்களில் கவனம் ஈர்க்கும் ஜி.வி.பி., பின்னணி இசையிலும் பாஸ் மார்க் வாங்கிவிட்டார். முக்கால்வாசி சீன்களில் எல்லா கேரக்டர்களுக்குமே ‘மிட் ஆஃப் அல்லது டைட் குளோசப் ஷாட் வைத்து ஆர்ட்டிஸ்டுகளின் ஆக்டிங் பெர்ஃபாமென்ஸை செமத்தியாக படம் பிடித்திருக்கிறார் கேமராமேன் ஜெகதீஷ் சுந்தர மூர்த்தி.

குறட்டைப் பழக்கத்தால் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்குப் போவதுடன் இடைவேளை விடுகிறார்கள். அதன் பின் அதை மையமாக வைத்துத் தான் இடைவேளைக்குப் பின்னர் திரைக்கதை பயணிக்கும் என நம்பி, தெம்பாக ஒரு டீ சாப்பிட்டுவிட்டு உட்கார்ந்தோம்.

ஆனால் குடும்பத்தைவிட்டு ஓடிப்போன தலைவாசல் விஜய்யை கூட்டி வந்து வண்டி வண்டியாக செண்டிமெண்ட் சீன்களை வைத்து வாளி வாளியாக சோகத்தைப் பிழிந்து நம்மையும் லைட் குறட்டைவிட வைத்துவிட்டார் டைரக்டர்.

இருந்தாலும் இந்த ‘டியர்’ அன்பிற்குரியவர்கள் தான்.

மதுரை மாறன்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.