அங்குசம் பார்வையில் ‘ரோமியோ’

விஜய் ஆண்டனி பேசும் டயலாக் மாடுலேஷன் நச்சு.... ‘பிச்சைக்காரன்’ முதல் பாகத்திற்கு அடுத்து, விஜய் ஆண்டனிக்கு இது நல்ல படம்.

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

  அங்குசம் பார்வையில் ‘ரோமியோ’

 

தயாரிப்பு: ‘விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன்’ மீரா விஜய் ஆண்டனி. தமிழ்நாடு ரிலீஸ்: ரெட் ஜெயண்ட் மூவிஸ். டைரக்‌ஷன்: விநாயக் வைத்தியநாதன். நடிகர்—நடிகைகள்: விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி, வி.டி.வி.கணேஷ், யோகிபாபு, இளவரசு—சுதா, தலைவசால் விஜய்—ஸ்ரீஜா ரவி, ரோஜு, ஷா ரா. டெக்னீஷியன்கள்—ஒளிப்பதிவு: ஃபாரூக் ஜே.பாஷா, இசை: பரத் தனசேகர் & ரவிராய்ஸ்டர், எடிட்டிங்: விஜய் ஆண்டனி, காஸ்ட்யூம் டிசைனர்: ஷிமோனா ஸ்டாலின், ஆர்ட் டைரக்டர்: எஸ்.கமலநாதன். பி.ஆர்.ஓ: ரேகா.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

மலேசியாவில் கைநிறைய சம்பாரித்துவிட்டு, சொந்த ஊரான தென்காசிக்கு வருகிறார் அறிவழகன்( விஜய் ஆண்டனி). 35 வயதாகும் இவருக்கு பெண் பார்க்கிறார்கள் அம்மா விஜயா [சுதா]வும் அப்பா பழனியப்பனும் [இளவரசு] தாய்மாமனான முருகனும் {விடிவி கணேஷ்} கல்யாணம் பண்ணிக் கொள்ளும்படி அறிவுக்கு ஆலோசனை சொல்கிறார்.

அதே தென்காசியைச் சேர்ந்த மூர்த்தி—சாரதா[ தலைவசால் விஜய்—ஸ்ரீஜா ரவி] தம்பதிகளின் மகள்  லீலா [ மிருணாளினி ரவி }, சென்னையில் நண்பர்களுடன் தங்கியிருந்து, ஐடி கம்பெனியில் வேலை பார்ப்பதாக பெத்தவர்களிடம்  பொய் சொல்லிவிட்டு, சினிமாவில் ஹீரோயினாக வேண்டும் என்பதற்காக போராடுகிறார். இவருக்கு சப்போர்ட்டாக இருக்கிறார்கள் லீலாவின் நண்பர்களான ஷா ரா மற்றும் ரோஜு. அப்பப்ப சரக்கடித்து ஜாலி ரகளை பண்ணுகிறார்கள்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

தாத்தா செத்துவிட்டதாக தகவல் வந்ததும் தென்காசிக்கு வருகிறார் லீலா. சாவு வீட்டில் லீலாவைப் பார்த்ததும் அறிவுக்கு காதல் பிறக்கிறது. லீலாவுக்கும் அவருக்கும் திடீர் கல்யாணமும் நடக்கிறது. வேண்டா வெறுப்பாக தாலியை ஏற்றுக் கொள்கிறார் லீலா. தம்பதிகள் சென்னை திரும்பியதும் தான் லீலாவின் ஆக்டிவிட்டீஸ் தெரிந்து அதிர்ச்சியாகிறார் அறிவு. இருந்தாலும் சமாளித்துக் கொண்டு, மனைவியை ஹீரோயினாக்க வேண்டும் என்பதற்காகவே ‘ரோமியோ’ என்ற பெயரில் சினிமா தயாரித்து, ஹீரோவாகவும் நடிக்க ஆரம்பிக்கிறார் அறிவு. இதற்கிடையே பார் மேனேஜரான விக்ரம்[ யோகிபாபு ] பெயரில் லீலாவின் ரசிகராக அவரிடமே பேசி மோடிவேட் பண்ணுகிறார் அறிவு.

விக்ரம் யார் என்பது லீலாவுக்குத் தெரிந்ததா? என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘ரோமியோ’.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

சும்மா சொல்லக்கூடாது, உண்மையிலேயே இந்த அறிவு கேரக்டருக்கு அட்டகாசமாக மேட்ச் ஆகியிருக்கார் விஜய் ஆண்டனி. 35 வயதாகியும் திருமணமாகாத இளைஞனாக, ஆனாலும் காதலிக்கும் ஆசை உள்ள டீன் ஏஜராக ஸ்லிம் & ஃபிட் பாடியுடன் அழகாக இருக்கிறார் விஜய் ஆண்டனி. மனைவிக்குள் இருக்கும் ஹீரோயின் கனவு தெரிந்ததும், அவருக்கு ஆறுதலாக, கனிவாக விஜய் ஆண்டனி பேசும் டயலாக் மாடுலேஷன் நச்சுன்னு இருக்கு. ‘பிச்சைக்காரன்’ முதல் பாகத்திற்கு அடுத்து, விஜய் ஆண்டனிக்கு இது நல்ல படம்.

கணவன் மீது வெறுப்பு, ஹீரோயினாக வேண்டும் என்ற துடிப்பு என மிருணாளினி ரவியின் நடிப்பும் சபாஷ் போட வைக்கிறது. அதிலும் க்ளைமாக்சில் சினிமா கோர்ட் சீனில் அவர் உள்ளத்தில் இருக்கும் உண்மையை கண்ணீர் மல்க பேசும் போது, டைட் குளோசப்பில் மிருணாளினியின் முகபாவனை அசத்தலோ அசத்தல். இதற்காவே கேமராமேன் ஃபாரூக் ஜே.பாஷாவுக்கு “ஜே” போடலாம்.

ரோமியோவுக்கான அனைத்து உணர்வுகளையும் இசையால் நமக்குள் புகுத்துகிறார்கள் பரத் தனசேகரும் ரவி ராய்ஸ்டரும். சினிமாவுக்குள் சினிமாவுக்கான செட் போட்டு அசத்திவிட்டார் ஆர்ட் டைரக்டர் கமலநாதன். விஜய் ஆண்டனியே எடிட்டர் என்பதால் கத்திரியைக் கச்சிதமாகப் போட்டு, சீன் சீக்வென்சை விறுவிறுப்பாக்கியிருக்கிறார்.

மிருணாளினியின் நண்பர்களாக வரும் ஷா ராவும் ரோஜுவும் கவனிக்க வைக்கிறார்கள். அதிலும் டைரக்டர் கனவுடன் இருக்கும் ரோஜுவின் பெர்ஃபாமென்சும் விஜய் ஆண்டனியை “அண்ணா” என அழைக்கும் அந்த பப்ளிமாஷ் பொண்ணும் டபுள் ஓகே.

கூடுமானவரை லாஜிக் மீறாமல், திரைக்கதையில் தொய்வு இல்லாமல், ஆர்ட்டிஸ்டுகள் மிகை நடிப்பு இல்லாமல் ஸ்கிரிப்ட்டை நேர்த்தியாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர் விநாயக் வைத்தியநாதன். விஜய் ஆண்டனியின் தங்கை செண்டிமெண்டையும் கரெக்டான இடத்தில் வைத்து கண்கலங்க வைத்துவிட்டார். ஹீரோயினாக வேண்டும் என்றாலே தயாரிப்பாளரின் காமப்பசிக்கு இரையாக வேண்டியிருக்கும் என்ற உண்மையையும் தைரியமாக சொன்ன டைரக்டருக்கு சபாஷ் போடலாம்.

இந்த ‘ரோமியோ’வை அனைவரும் ரசிக்கலாம்.

மதுரை மாறன்   

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.