ஸ்டாலினுக்கு ஸ்வீட் கொடுக்கப் போறேன் ஸ்வீட் கடை ஊழியர்களுடன் அசத்திய ராகுல்… வைரல் வீடியோ

0

 

கோவை இனிப்பகத்தில் ஸ்டாலிக்காக ஸ்வீட் வாங்கிய வீடியோவை ராகுல்காந்தி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ இப்போது டிரெண்டிங் ஆகியுள்ளது.

ராகுல் காந்தி தமிழ்நாடு வரும்போதெல்லாம் அவர் செய்யும் செயல்கள் எல்லோரையும் ஆச்சரியப்பட வைக்கின்றன. அந்தவகையில் கோவை ரோட்டில் உள்ள செண்டர் மீடியனை தாவி குதித்துச் சென்று ஸ்வீட்கடைக்கு சென்று ஸ்டாலினுக்கு ஸ்வீட் வாங்கிய ராகுலின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வரும் 19ஆம் தேதி தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கடந்த மார்ச் மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்ட பிறகு, பிரதமர் மோடி அவர்கள் தமிழ்நாட்டிற்கு நான்கு முறை வருகை தந்து கோவை,திருநெல்வேலி, தூத்துக்குடி, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இன்னும் சில தினங்களில் அவர் மீண்டும் தமிழகம் வருகை தர உள்ளார்.

- Advertisement -

இப்படியிருக்க, ராகுல் காந்தி முதல் முறையாக நேற்று தமிழகம் வந்தார். திருநெல்வேலி மற்றும் கோவையில் நேற்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.

கோயமுத்தூர் செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொள்ள வந்தார் ராகுல்காந்தி.  இந்த கூட்டத்திற்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் சென்னையில் இருந்து கோவை வந்திருந்தார். அவரை சந்திப்பதற்காக காங்கிரஸ் மாநில தலைவர் செல்வ பெருந்தகை மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் காரில் சென்ற ராகுல் காந்தி திடீரென சிங்காநல்லூர் பகுதியில் காரை நிறுத்தச் சொன்னார்.

சட்டென காரில் இருந்து இறங்கிய ராகுல் காந்தி சாலை நடுவே இருந்த தடுப்புச் சுவரை தாண்டிச்சென்று அருகில் இருந்த ஸ்வீட் ஸ்டாலுக்குள் நுழைந்தார்.

இனிப்பகத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் உரிமையாளர் ஆகியோர் அவரை வரவேற்கிறார்கள்.
உடன் இருக்கும் செல்வபெருந்தொகை மைசூர் பாகு கொடுங்க எனக் கேட்க, ஊழியர் ராகுலிடம், யாருக்கு ஸ்வீட் வாங்குறீங்க எனக் கேட்க, சட்டென அவர்,  “என் பிரதர் ஸ்டாலினுக்காக” என்கிறார்.

4 bismi svs
ஸ்வீட் வாங்கிய ராகுல்

ஸ்வீட் வாங்கிய ராகுல், கடை ஊழியர்களை கூப்பிட்டு, தன்னுடன் நிறுத்தி போட்டோ எடுத்துக்கொண்டு கிளம்ப ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்..

கடையில் வாங்கிய ஸ்வீட்டை ஸ்டாலினுக்கு கொடுத்து அசத்தியுள்ளார்.

இந்த வீடியோவை பதிவிட்டுள்ள ராகுல்காந்தி,

தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்துக்கு கூடுதலாக கொஞ்சம் இனிமை சேர்க்கிறேன், எனது சகோதரர் திரு. ஸ்டாலினுக்காக சிறிது மைசூர் பாக் வாங்கினேன்” என பதிவு போட்டுள்ளார்.
கூடவே, ராகுல் மேடையில், ஸ்டாலினை தவிர யாரையும் பிரதர் என அழைப்பதில்லை என உரிமையோடு பேசினார்.

கூட்டணிக்கட்சி தலைவரை தனது சகோதரராக பார்க்கும் ராகுல்காந்தியை பலரும் பாராட்டி வருகிறார்கள்..

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், நேருவின் மகளே வருக நல்லாட்சி தருக என்ற
தனது தந்தை கருணாநிதி பாணியில் ,  டியர் ராகுலே வருக! புதிய இந்தியாவுக்கு விடியல்தருக என பேசி அசர வைத்தார்.

ராகுலில் பாசிட்டிவ் அப்ரோச் தேசிய அரசியலில் பெரும் வைபை ஏற்படுத்தியுள்ளது.

 

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.