அங்குசம் பார்வையில் ‘சான்றிதழ்’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 அங்குசம் பார்வையில் ‘சான்றிதழ்’

தயாரிப்பு: வெற்றிவேல் சினிமாஸ்’ எஸ்.ஜே.எஸ்.சுந்தரம் & ஜே.வி.ஆர். டைரக்‌ஷன்: ஜே.வி.ஆர். நடிகர்—நடிகைகள்: ஹரிகுமார், ராதாரவி, அருள்தாஸ், ரோஷன் பஷீர், ரவிமரியா, மனோபலா, கெளசல்யா, அபுகான், ஆஷிகா அசோகன், காஜல் பசுபதி, உமாஸ்ரீ. தொழில்நுட்பக் கலைஞர்கள்: ஒளிப்பதிவு: எஸ்.எஸ்.ரவிமாறன் ஷிவன், இசை: பைஜு ஜேக்கப். பி.ஆர்.ஓ. நிகில் முருகன்.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

திண்டுக்கல் மாவட்டத்தில் கருவறை அப்படிங்கிற கிராமம். அந்த கிராமத்திற்கு எண்ட்ரி கேட், எக்ஸிட் கேட்டெல்லாம் இருக்கு. அந்த ரெண்டு கேட்லயும் ஆரவல்லி, சூரவல்லின்னு கையில் வேல்கம்புடன் இரண்டு லேடி செக்யூரிட்டிகள். கேட்டில் ‘ஐ ஸ்கேனரெல்லாம்’ இருக்கு. இந்த கிராமத்திற்குள் அத்துமீறி நுழைபவர்கள் அரெஸ்ட் பண்ணப்பட்டு, அங்கிருக்கும் தனி அறையில் அடைக்கப்படுவார்கள்.

அந்தக் கிராமத்துப் பெண்கள் யாரும் மாலை ஆறு மணிக்கு மேல் டி.வி.பார்க்கக் கூடாது. எல்லாரும் ஒற்றுமைக் கூடத்தில் கூட வேண்டும். அங்க தான் சாப்டணும், தூங்கணும். இப்படியாங்கொந்த கிராமத்திற்கு ஜனாதிபதியின் சிறந்த கிராம விருது கிடைக்கிறது. ஆனால் அதை வாங்க மறுக்கிறார்கள் அந்த மக்கள்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

“ஏண்டா இப்படி பண்றீக”ன்னு கேட்க மாநில அமைச்சர் ‘கண்ட்ரோல்’ கந்தசாமி( ராதாரவி) அங்க வர்றாரு. ஆனா அவரையும் கிராமத்துக்குள்ள விட மறுக்கிறார்கள் மக்கள். “என்னையவே பகைச்சுட்டுகீங்கள்ல உங்கள என்ன பண்றேன் பாருங்கடா”ன்னு சவால் விட்டுட்டு விருட்டுன்னு கிளம்புறாரு ராதாரவி. ( அவரு எதுவுமே பண்ணலேங்கிறது படம் முடிஞ்ச பிறகு தான் நமக்கே தெரிஞ்சது)

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இப்படியாப்பட்ட கிராமத்துக்குள்ள மீடியா பொண்ணு, மீன் விக்குறவன், ஜல்சா பார்ட்டி, சரக்குப் பார்ட்டி இப்படி நாலு பேரு சிக்கிக் கொள்கிறார்கள். இடைவேளை வரைக்கும் இப்படியே குந்தாங்கூறா படம் போய்க்கிட்டே இருந்துச்சு. சரி, இடைவேளைக்குப் பிறகாவது படத்தை கூறுபாடா கொண்டு போவாய்ங்கன்னு பார்த்தா, அதுக்குப் பிறகு தான் கொலையா கொல்றாய்ங்க.

ஏற்கனவே தறுதலைங்கிற பேர்ல இருந்த கிராமம், எப்படி கருவறையா மாறுச்சுன்னு ஒரு ஃப்ளாஷ்பேக் வச்சிருக்காய்ங்க பாருங்க.. அடி ஆத்தீ… நாமெல்லாம் கனவுலயும் கற்பனைலயும் கூட யோசிக்க முடியாது. அம்புட்டு அக்கப்போர்.

ராதாரவி, ரவிமரியா, அருள்தாஸ், மனோபாலா, ஹரிகுமார் ஆகியோரெல்லாம் இதுல நடிச்சிருக்காகன்னா, அவர்களோட ‘தில்’லுக்கு செம ‘துட்டு’ போல.

‘சான்றிதழ்’. இதுக்கு எந்த மாதிரியான சர்டிபிகேட் கொடுக்க்குறதுன்னு நமக்குத் தெரியல சாமீயோவ்…

-மதுரை மாறன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.