அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அறத்தமிழன் பேரியக்க மாநில நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

அறத்தமிழன் பேரியக்க மாநில நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் இன்று திருச்சியில் நடந்தது. அதன் தலைவர் விஜய் சீத்தாராமன் தலைமை தாங்கி ஆலோசனை வழங்கி பேசியதாவது;-
தமிழகம் எத்தனையோ சித்தாந்தங்களை கண்டுள்ளது. பொதுவுடமை , திராவிடம், கம்யூனிசம், இந்துத்துவா என இங்கு பல கோட்பாடுகள் உள்ளன. இவை எல்லாவற்றையும் விட அறம் தான் முதன்மையானது. அதனால்தான் நாம் அறமும் அறம் சார்ந்த வாழ்வியல் மரபியலை சொல்கிறோம்.
அறம் சார்ந்த ஒரு புதுவிதமான கோட்பாட்டை தத்துவத்தை அறத்தமிழன் பேரியக்கம் முன்னெடுத்து தன்னுடைய அரசியல் முன்னெடுப்பை நகர்த்தப் போகிறது.
அறத்தை மறந்ததால்தான் அநீதிகளும், அட்டூழியங்களும் , போதை கலாச்சாரமும் தலை விரித்தாடுகின்றன. யார் ஆட்சி செய்தால் என்ன என்று கடந்து செல்வது முட்டாள்தனம். உங்கள் வாழ்வியலையும் உங்கள் குழந்தைகளின் எதிர்காலத்தையும் தீர்மானிப்பது இந்த ஆட்சியாளர்கள் தான். ஆகவே
சரியான அரசியல் தலைவர்களை நாம் தான் தேர்வு செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் அந்த தலைவர்கள் அறத்துடன் கூடிய தன் ஒழுக்கம் உள்ள தலைவராக இருக்க வேண்டும் என்பதும் முக்கியமானது.

2026 June 11 - 17 Angusam Book

இந்த கலந்தாய்வுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை மாநில வளர்ச்சி குழு செயலாளர் கரிகாலன் த. செல்வராஜ் செய்திருந்தார்.
பின்னர் நடந்த கலந்தாய்வு கூட்ட முடிவில், அறத்தமிழன் பேரியக்கமானது அரசியல் கட்சியாக ஜூன் மாதம் அறிவிக்கப்பட உள்ள செய்தியையும் தலைவர் தெரிவித்தார்.
மேலும் நிர்வாகிகள் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஓவியர் கஸ்பர்,இரா பாரி மன்னன், தலைமகன், வெங்கடேஸ்வரா, சிங்கை ராமு,
சண்முகம், குமார் , அருண் வெங்கடேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.