திருச்சி மக்களின் மிக முக்கிய நெருக்கடியான பிரச்சனைகள் !
பஞ்சப்பூர் புதிய பேருந்து நிலையத்தால் மக்கள் படும் அவதி அதிகம் ..எனவே பழைய மத்திய பேருந்து நிலையமும் பயன்பாட்டில் வேண்டும்..
நீண்ட காலமாக கட்டபட்டு வரும் மாரீஸ் மேம்பாலம் விரைந்து முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரனும்..
கோர்ட் அருகே உள்ள எம்ஜீஆர் சிலை அமைந்துள்ள மிக பெரிய ரவுண்டானா சிறியதாக திருத்தி அமைக்கப்பட்டு போக்குவரத்துக்கு வசதியாக சிக்னல் அமைக்கபட வேண்டும்..
போக்குவரத்து அதிகம் உள்ள வயலூர் சாலைக்கு மாற்று சாலை கண்டிப்பாக வேண்டும்.
அரியமங்கலம் குப்பை கிடங்கு நிரந்தர தீர்வு வேண்டும்.
காந்தி மார்கெட் பால்பண்னை போக்குவரத்தை சீர்படுத்த நடவடிக்கை மற்றும் அந்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான சர்வீஸ் சாலை.
தில்லை நகரில் முன்னாள் அமைச்சர் நேரு வீடு அலுவலகத்தை சுற்றி சுற்றி அமைந்துள்ள அருமையான சாலை போல மற்ற பகுதிகளுக்கும் சாலை வசதி.
போக்குவரத்துக்கு மாற்றுபாதை இல்லாத காசிவிளங்கி மீன் சந்தை பஞ்சப்பூருக்கு இடமாற்றம் செய்யப்பட வேண்டும்..
நகரின் முக்கிய கல்லூரிகள் அருகே விற்கப்படுவதாக சொல்லப்படும் போதை பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும்…
மாநகரின் விடுபட்ட வார்டுகளுக்கு பாதாள சாக்கடை வசதி செய்து தரப்பட வேண்டும்…
ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திலிருந்து அம்மாமண்டபம் வரையிலான போக்குவரத்துக்கு இடையூறான சாலை நடுவில் உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றபட வேண்டும..
பேலஸ் தியேட்டரில் தொடங்கி காவேரி தியேட்டர் வரை முழுமையான சென்டர் மீடியன் அமைத்து சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றி போக்குவரத்து நெரிசலை சரி செய்ய வேண்டும்.
– தொகுப்பு – புகழ்மகேந்திரன்





Comments are closed, but trackbacks and pingbacks are open.