செயற்கை நுண்ணறிவை (AI) இப்படியும் பயன்படுத்தலாமே?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

இன்றைய டிஜிட்டல் யுகத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு தவிர்க்கவியலாத அம்சமாக மாறியிருக்கிறது. பொழுதுபோக்கு அம்சங்களுக்காகவும், சிலர் கேடான நோக்கத்திற்காகவும்கூட செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி வரும் பின்னணியில், திருச்சியில் இயங்கிவரும் SEVAI- அமைப்பு, செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி மக்கள் நல மேம்பாட்டுத் திட்டங்களை இன்னும் எப்படி மேம்படுத்தலாம் என்பது குறித்த ஆலோசனையில் இறங்கியிருக்கிறது.

SEVAI அமைப்பின் இயக்குனர் K. கோவிந்தராஜு முன்னிலையில், எழுத்தாளர் விடியல் குகன் (எ) ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கு. கருணாநிதி அமர்வை வழிநடத்த, சேவை அமைப்பின் தகவல் தொடர்புப் பிரிவைச் சேர்ந்த அருண் குமார் பயிற்சிகளை வழங்கினார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

விடியல் குகன், சேவை கோவிந்தராஜூ
விடியல் குகன், சேவை கோவிந்தராஜூ

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

உள்ளடக்க உருவாக்கம் (content creation), தரவுப் பகுப்பாய்வு மற்றும் நிகழ்நேர அறிக்கை தயாரிப்பு ஆகியவற்றில் தகவல் தொடர்புப் பணியாளர்களுக்கு AI எவ்வாறு உதவும் என்பது குறித்தும் இந்த அமர்வில் எடுத்துரைத்தார்கள்.

சமூகங்கள் மற்றும் பங்குதாரர்களுடன் மிகவும் பயனுள்ள வகையில் தொடர்புகொள்ள வழிவகுக்கும். வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களில் திட்டமிடல், கண்காணிப்பு மற்றும் திட்டத்தின் தாக்கத்தை வெளிப்படுத்துதல் ஆகியவற்றிற்கு AI-யைப் பயன்படுத்துவது எதிர்காலப் பணிகளின் முக்கியப் பகுதியாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

ஏ.ஐ. தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, விழிப்புணர்வு காணொளிகளை இளைஞர்களுக்கே உரிய உற்சாகத்துடன் உருவாக்கி வெளியிட்டுவரும், சேவை கோவிந்தராஜூ, “களப்பணிகளின் சென்றடையும் தன்மையையும் செயல்திறனையும் மேம்படுத்த, தொழில்நுட்பத்தை அத்தகைய பணிகளுடன் ஒருங்கிணைப்பதன் முக்கியத்துவத்தை” வலியுறுத்தி உரையாற்றினார்.

—  கிருஷ்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.