அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

குத்தாட்டம் போடுவது அமைச்சரின் மாண்புக்கு அழகல்ல !

திறந்த மடல் - 25

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

திறந்த மடல் – 25
குத்தாட்டம் போடுவது அமைச்சரின் மாண்புக்கு அழகல்ல !
மாண்புமிகு உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் அவர்களுக்கு,
வணக்கம். சமீபத்தில் முதல் அமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு, உங்கள் தொகுதியான மேலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற விழாவில், ஒரு பொது நிகழ்ச்சியில் அதுவும் அரசு நிகழ்ச்சியில், தவெக மாவட்டத் துணைச்செயலாளர் பொறுப்பில் உள்ள பெண் ஒருவரோடு, “வாடி… வாடி….. கைப்படாத சிடி” என்ற ஆபாசப் பாடலுக்கு விழாவில் அமைச்சர் பொறுப்பில் உள்ள நீங்கள் குத்தாட்டம் போட்டது சர்ச்சையாகியிருக்கிறது. கல்வியாளர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
“முதல்வரின் பிறந்தநாளில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக ஆடியதில் என்ன தவறு” என்று கேள்வியெழுப்பிய பத்திரிகையாளர்களிடமே, எதிர்க்கேள்வி எழுப்பியிருக்கிறீர்கள்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாளில், “நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி நாடே இருக்கது தம்பி” என்ற பாடல் ஒலிப்பதை கேட்டிருக்கிறோம். அதேபோல, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளில், “கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே” என்ற பாடல் ஒலிப்பதையும் கேட்டிருக்கிறோம். ஆனால், நீங்கள் நடனமாடியது இதுபோன்றதொரு தத்துவப் பாடலுக்கா? “வாடி… வாடி….. கைப்படாத சிடி” என்ற பாடல் வரிகளில் என்ன கொள்கை பொதிந்திருக்கிறது? என்ன தத்துவத்தை அது போதிக்கிறது? அதுவும் பள்ளி மாணவர்கள் மத்தியில், இத்தகைய குத்துப்பாடலுக்கு, குத்தாட்டம் போட்டதை எப்படி உங்களால் நியாயப்படுத்த முடிகிறது? அதுவும் பொறுப்புமிக்க ஒரு உயர்கல்வித்துறை அமைச்சராக, இப்படி ஒரு செயலை செய்வதற்கு எப்படி உங்கள் மனம் ஒப்புக் கொண்டது? அதைவிட அதுசரிதான் என்று நியாயப்படுத்தும் உங்கள் மனதைரியத்தை தமிழக மக்களாகிய நாங்கள் எவ்வாறு புரிந்து கொள்வது?

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

அமைச்சர் விஸ்வநாதன்
அமைச்சர் விஸ்வநாதன்

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

தமிழகத்தில் தங்களுக்கு பிடித்தமான நடிகர்களின் பிறந்தநாளை அவர்களது ரசிகர்கள் விமர்சையாக கொண்டாடுவது வழக்கமான ஒன்றுதான். அவரவர்களின் தராதரத்திற்கேற்ப, அவர்களின் கொண்டாட்ட மனநிலை அமைந்திருக்கும். காவிரி நீர் பொய்த்துபோனதால் டெல்டா விவசாயிகள் எலிக்கறியை தின்னும் அவலத்தை எதிர்கொண்டபோது; நெசவாளர்கள் கஞ்சித்தொட்டி வரிசையில் நின்று கொண்டிருந்தபோதும்கூட, நடிகர்களின் கட்அவுட்டுக்கு பாலாபிக்ஷேகம் செய்ததையும், மண் சோறு சாப்பிட்டதையும்கூட தமிழகம் கண்டிருக்கிறது.
நடிகர் விஜயின் ரசிகராக இதை செய்திருந்தாலோ, அல்லது த.வெ.க. கட்சியின் தீவிர தொண்டரின் ஆர்வமிகுதி என்றிருந்தாலோ, அவர்களின் தரம் அவ்வளவுதான் என கடந்து போயிருக்கலாம். ஆனால், நீங்கள் காங்கிரசு பேரியக்கத்தை சேர்ந்தவராயிற்றே?

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

அதிமுகவின் கோட்டையாக கருதப்பட்ட மேலூர் சட்டமன்ற தொகுதியில், தொகுதிக்கு சற்றும் தொடர்பில்லாத, அதுவும் பொதுத்தொகுதியில் பட்டியலின வேட்பாளராக களமிறங்கி, வெற்றி கண்டீர்கள். “இந்த ஆட்சியைக் காமராசர் ஆட்சியாகவே காங்கிரஸ் கட்சி பார்க்கிறது. 50 ஆண்டுகள் கழித்து அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றிருப்பது வரலாற்று சாதனையாகும்” என்று குறிப்பிட்டு அகம்மிக மகிழ்ந்தீர்கள்.
இந்த வரலாற்று சாதனையின் தொடர்ச்சிதான், இந்த குத்தாட்ட நடனமா? இப்படி ஒரு பின்னணியில், அதுவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற கூடுதல் தகுதிகளோடு, உயர்கல்வித்துறை அமைச்சர் என்ற பொறுப்பிலும் உள்ள உங்களுக்கு மாண்புகள் மறந்துபோனதா?
உயர்கல்வி அமைச்சராக, தற்போது உயர்கல்வித்துறை எதிர்கொண்டு வரும் சிக்கல்கள், அவலங்களை நீங்கள் அறிவீர்கள்தானே? எவ்வளவு பிரச்சினைகள்?
தமிழ்நாட்டில் 2015-க்குப் பின் அரசு கல்லூரிகளில் ஆசிரியர் நியமனம் நடைபெறவில்லை. திமுக ஆட்சிக் காலத்தில் சுமார் 4000 கல்லூரி ஆசிரியர்களுக்குத் தேர்வுகள் நடத்தப்பட்டு முடிவுகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

2025ஆம் கல்வியாண்டில் அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் சுமார் 10ஆயிரத்தைத் தொட்டு நிற்கின்றன. குறைந்த ஊதியத்தில் பல ஆண்டுகளாக நிரந்தரம் இல்லாமல் ஒரு தலைமுறை கல்வியைப் பயிற்றுவித்து வருகின்ற அவலம் தொடர்கின்றது.
தாழ்த்தப்பட்ட மாணவர்களின் உயர்கல்வி உரிமையை நிலைநாட்டும் அரசாணை 91-ஐ, தனியார் உயர்கல்வி நிறுவனங்கள் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றன. கலை, அறிவியல் கல்லூரி மாணவர் சேர்க்கைக்கும் ஒற்றைச் சாளர முறை தேவை என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக முன்வைக்கப்பட்டு வருகிறது. அரசு உதவி பெறும் கல்லூரிகளில் ஆசிரியர் பணியிட நியமனங்களுக்குக் கல்லூரி நிர்வாகங்கள் இலட்சம் கோடிகளில் இலஞ்சம் கேட்கும் விவகாரங்களை ஆசிரியர் சங்கங்களே குற்றஞ்சாட்டியிருக்கின்றன.
இத்தகையதொரு பின்னணியில், புதிய அரசு மாற்றத்திற்கான அரசு என்று எல்லாரும் மாற்றங்களை எதிர்நோக்கி உள்ள நிலையில், குத்தாட்ட சர்ச்சையில் சிக்கியிருப்பதை எப்படி புரிந்து கொள்வது அமைச்சரே?
தமிழன்புடன், ஆதவன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.