திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் அதிபரும், முதல்வரும், செயலாளருமான அருள் முனைவர் ஜான் பிரிட்டோ காலமானார் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் முன்னாள் அதிபரும், முதல்வரும், செயலாளருமான அருள் முனைவர் ஜான் பிரிட்டோ (78) இன்று மாலை மருத்துவமனையில் காலமானார்.

கடந்த சில நாட்களாக வயது முதிர்வின் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போது, இன்று மாலை 5 15 மணி அளவில் மாரடைப்பின் காரணமாக இறைவனடி சேர்ந்தார்.

உடனுக்குடன் அங்குசம் வாட்சப் சேனலில்.. சேர.....

தாவரவியல் வல்லுனரான அருட்தந்தை பல்வேறு ஆண்டுகள் கல்லூரியின் தாவரவியல் துறை பேராசிரியராகவும், கல்லூரியின் முதல்வராகவும், செயலாளராகவும், மற்றும் ,பல பொறுப்புகளில் இருந்து கல்லூரியை வழிநடத்தி இருக்கிறார். கல்லூரியில் உள்ள மிகவும் பழமையான அருங்காட்சியகம் மற்றும் தாவர பதப்படுத்தும் ஆய்வகம் ஆகியன ஏற்படுத்தி திறம்பட நடத்தி தாவரவியல் ஆய்வினை ஊக்கப்படுத்தி இருக்கிறார். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் முன்னாள் சிண்டிகேட் குழு உறுப்பினராகவும் சிறப்பாக பணியாற்றி இருக்கிறார். கல்லூரியில் ஏழை எளிய மாணவர்களை அனுமதித்து தேவையான உதவிகளையும் செய்து, வேலை வாய்ப்பும் பெற்று தந்திருக்கிறார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

அவர்களில் பலர் மேலை நாடுகளில் பல்வேறு நிறுவனங்களில் உயர் பதவிகளில் பணியாற்றி வருகின்றனர். தந்தை அவர்கள் முதல்வராக இருந்த காலத்தில் விளையாட்டு மாணவர்களை உற்சாகப்படுத்தி பல்வேறு சாதனைகளை படைக்க ஊக்கப்படுத்தி இருக்கிறார். அவர்களில் ஒருவரான முன்னாள் மத்திய அமைச்சர் மாண்புமிகு நெப்போலியன் அவர்களும் ஒருவர். தற்போது அமெரிக்காவில் வசிக்கும் மாண்புமிகு நெப்போலியன் அவர்கள் தற்போதைய முதல்வர் அருள் முனைவர் சேவியர் ஆரோக்கியசாமி அவர்களை தொடர்பு கொண்டு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொண்டார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

அவர் தன் இரங்கல் செய்தியில், திருச்சி வரும் பொழுதெல்லாம் தந்தையை சந்தித்து ஆசி பெற்று செல்வேன் என்றும், தந்தையை இழந்து வாடும் சேசு சபை தந்தையர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு தன்னுடைய அனுதாபங்களை முதல்வர் தந்தையிடம் தெரிவித்துக் கொண்டார். மேலும் பல்வேறு முன்னாள் மாணவ மாணவியர் இணைய வழியாகவும், குறுஞ்செய்தி மூலமாகவும், புலனம் மூலமாகவும் தங்களது இதய அஞ்சலியை அருள் தந்தைக்கு செலுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தந்தையின் திருஉடல் முன்னாள் இந்நாள் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் சேசு சபை தந்தையர்கள் இல்லத்தில் வைக்கப்பட்டு மாலை 3 மணி அளவில் திருச்சி கல்லூரியின் லூர்தன்னை ஆலயத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு இறுதிச்சடங்கானது ஆலயத்தின் பின்புறமுள்ள கல்லறையில் நடைபெறும் என்று கல்லூரியின் அதிபர் அருள் தந்தை பவுல் ராஜ் கல்லூரி மற்றும் முதல்வர் அருள் தந்தை ஆரோக்கியசாமி சேவியர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்

அங்குசம் இதழ் - இலவசமாக படிக்க -

Leave A Reply

Your email address will not be published.