நியோமேக்ஸ் மோசடி செய்தது எப்படி ? அம்பலப்படுத்தும் வாடிக்கையாளர்கள் ! exclusive

0
dear movie banner

நியோமேக்ஸ் மோசடி செய்தது எப்படி ? – அம்பலப்படுத்தும் வாடிக்கையாளர்கள் –

நியோமேக்ஸ் நில நிதி நிறுவனத்தின் மோசடி தொடர்பாக, அங்குசம் இதழில் தொடர்ந்து பல்வேறு செய்திகளை வெளியிட்டு வந்திருக்கிறோம். இவையெல்லாம், பாதிக்கப்பட்டவர்கள் தரப்பிலிருந்தும், நம்பகமான சோர்ஸ்களிடமிருந்து கிடைக்கப்பெறும் தகவல்களை ஒருமுறைக்கு இருமுறை உறுதிபடுத்துவதோடு, போதுமான ஆதாரங்களை கைவசம் வைத்துக்கொண்டும்தான் துணிச்சலாக உங்கள் அங்குசம் இதழ் அம்பலப்படுத்தி வருகிறது.

Happy homes

இணையத்தில் மெயில் ஐ.டி.களுக்குப் பின்னால் மறுமொழியிடுபவர்கள் தொடங்கி, ”மற்ற பத்திரிகைகாரர்களையெல்லாம் சரிகட்டிவிட்டோம். அங்குசம் மட்டும் பெரிய சூட்கேஸாக எதிர்பார்க்கிறது.” என்ற கிசுகிசு பாணியிலான விஷம பிரச்சாரம் செய்பவது வரையில் திருடனுக்குத் தேள் கொட்டிய கதையாக, “வெளியில் சொல்லவும் முடியாமல்; அழவும் முடியாமல்” தவித்து வருகின்றனர்.

- Advertisement -

- Advertisement -

இதுபோன்ற நபர்களுக்கெல்லாம், அங்குசம் தனது சொந்த மொழியில் பதில் தருவதைவிட, நியோமேக்ஸ் நிறுவனத்தை நம்பி பணத்தைப் போட்டு ஏமாந்த முதலீட்டாளர்களின் வார்த்தைகளிலிருந்தே உரிய பதிலை வழங்குவதே பொருத்தமானதாக இருக்கும்.

நியோமேக்ஸ் குறித்து அங்குசம் செய்தி வெளியிட்ட அட்டை பட கட்டுரைகள்.
நியோமேக்ஸ் குறித்து அங்குசம் செய்தி வெளியிட்ட அட்டை பட கட்டுரைகள்.

இதோ, திருச்சியை சேர்ந்த நியோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான Neosco developers pvt Ltd company என்ற நிறுவனத்தில் பணத்தைப் போட்டு ஏமாந்த முதலீட்டாளர்கள் தங்களுக்குள் ஓர் ஒருங்கிணைப்பு உருவாக்கிக் கொண்டு பேசத் தொடங்கியிருக்கின்றனர்.

3 kavi national

நியோமேக்ஸ் நிறுவனத்தால் பாதிக்கப்பட்டவர்களின் ஒப்புதல் வாக்குமூலமாக மட்டுமன்றி, நியோமேக்ஸ் தொடர்பாக இதுவரை அங்குசம் வெளியிட்ட அனைத்து செய்திகளுக்குமான ”ஒற்றை ஆதாரமாகவும்” இது அமைந்துவிட்டது யாரும் எதிர்பார்க்காத ஒன்று!
அவர்களின் வார்த்தைகளிலேயே கேளுங்களேன் …

7 bismi bise almathina

”நியோமேக்ஸ் மற்றும் அதன் துனை நிறுவனங்கள் அந்தந்தக் காலகட்டத்திற்கேற்ப குறிப்பிட்ட நடுத்தர மற்றும் மேல்மட்ட வர்க்கப் பிரிவினரை இலக்கு வைத்து கவர்ச்சியான முதலீட்டு திட்டங்களை முன் வைத்து கொள்ளையடித்த நிலையில் திருச்சி மண்டலத்தில் களம் இறங்கிய நிறுவனம் தான் Neosco developers pvt Ltd company.

இதன் இயக்குநர்களில் முதன்மையானவர் ராஜ்குமார் என்பவர் . இவரின் பினாமி சபரிநாதன். நியோமேக்ஸ் பெயரை பயன்படுத்தி முதலீட்டாளர்கள் முதலீட்டை இழுத்து Neosco developers pvt Ltd company – க்கு பணத்தை மடை மாற்றியவர் சபரிநாதன்.

ராஜ்குமார் ஏற்கனவே 2013 -இல் இருந்து நியோமேக்ஸ் இயக்குநராக இருந்து தற்போதைய நியோமேக்ஸ் இயக்குநர்கள் பட்டியலில் உள்ள துரைக்கண்ணு வீரசக்தியுடன் (Neomax director) இணைந்து திருச்சி மண்டலத்தில் அடுத்தடுத்து துணை நிறுவனங்கள் பலவற்றை உருவாக்கியவர்.
Centrio group நிறுவன இயக்குநர்கள் வேங்கடசாமி சஞ்சீவ்குமார் ( Centrio director) மற்றும் இரத்தினம் பிள்ளை நடேஷ்பாபு (Centrio director) உடன் இணைந்து பல துணை நிறுவனங்கள் உருவாக்கி முதலீட்டாளர்கள் முதலீட்டை ஈர்த்துள்ளனர்.

அவற்றில் திருச்சி மண்டலத்தில் பிரதானமாக கோடிக்கணக்கில் முதலீட்டை ஈர்த்த நிறுவனம் Neosco developers pvt Ltd company. புது துணை நிறுவனங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு இல்லாத நிலையில் நியோமேக்ஸ் தரப்பில் உள்ள Regional head சபரிநாதன் உதவியுடன் அவருக்கு கீழ் உள்ள 50 ஏஜெண்ட் களை வைத்து ரொக்கமாக பணங்களை வசூலித்து ராஜ்குமார் நிறுவனங்கள் மூலம் மடை மாற்றி Neosco developers pvt Ltd, Livpride, Exubera company,Skylalmall retail pvt Ltd, பெயர்களில் Booking advance முதலீட்டு பாண்டுகளை வழங்கியுள்ளனர்.

இவர்கள் நிலத்தில் முதலீடு செய்வது போல, முதலீட்டு ரொக்கப் பணங்களை கோடி கோடியாக பெற்று நிலங்களையும் பதிவு செய்து குறித்த காலத்தில் கொடுக்காமல், நிதி நிறுவனம் போல மாத வட்டி வழங்குவதற்கான கவர்ச்சிகரமான திட்டங்களை உருவாக்கி மக்களை வசீகரம் செய்கின்றனர்.

பெறும் முதலீட்டாளர்கள் பணத்தில்,
10% ஏஜெண்ட் கமிசன் ( sector head);
20% துணை நிறுவன இயக்குநர்கள் கமிஷன் ( Regional head);
30% நியோமேக்ஸ் இயக்குநர்கள் கமிஷன் (Sub directors & directors)
மீதம் 40% தொகையை நிலங்களில் அல்லது தொழில்களில் முதலீடு செய்வது இவர்களின் டெக்னிக்.
அலை அலையாக திரட்டப்படும் முதலீட்டாளர்கள் நிதியை வைத்தே, அவர்களுக்கே அவற்றை வட்டியாக மட்டுமே கொடுப்பது இவர்களது வாடிக்கை . அசல் தொகையை கொடுக்காமல் திரும்பவும் மறு முதலீடு செய்ய மூளைச் சலவை செய்து மாத வட்டி வீதம் 15% முதல் 30% கொடுப்பதற்கு சதுரங்க வேட்டை பட பாணியில் ஆசையைத் தூண்டி வீழ்த்துவது .

முதலீட்டு அசல் தொகை அவர்களிடம் முடக்கப்பட்ட நிலையிலேயே இருக்கும். இப்படித்தான் துணை நிறுவனங்கள் டெபாசிட் திட்டங்களை நடைமுறையில் வைத்து உள்ளனர்.

நியோமேக்ஸ் + Centrio + Neosco developers pvt Ltd company கூட்டுத் திட்டங்களாகவே இவை திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் அறிவிக்கப்பட்டு தமிழகத்தில் பல மாவட்ட மக்களை ஈர்த்துள்ளனர். (149 Annexed documents having all the investment details & brokers list )
தற்பொழுது மாத வட்டியும் இல்லை… முதலீட்டை திரும்ப தருவதும் இல்லை…. முதிர்வு தேதி வந்தவுடன் முதலீட்டை வழங்காமலே வேறு ஒரு கவர்ச்சியான மாதாந்திர மாதவட்டி திட்டங்களை முன்னிறுத்தி சேர நிர்ப்பந்தம் செய்து முதலீட்டாளர்கள் பணத்தை கபளீகரம் செய்வது வாடிக்கை.
“நீங்க போடுற பணம் மூன்றிலிருந்து ஐந்து வருசத்துல டபுளாகிரும். மூணு வருசம், அஞ்சு வருசம்னு ஸ்கீம்ஸ் இருக்கு. அதுல மாசமாசம் 12% வட்டி வாங்கிக்கலாம். மாசமாசம் வட்டி வாங்காம குறைந்த வருச ஸ்கீம்ல இரட்டிப்பாவும் வாங்கிக்கலாம். திருச்சி ஏர்போர்ட் பக்கத்துல மொராய்ஸ் சிட்டி நம்ம ப்ராஜக்ட் தான்.

இன்னும் விருதுநகர், தஞ்சாவூர் பக்கத்துல வல்லம் உட்பட பல இடங்களில் நம்ம ப்ராஜக்ட் போட்டிருக்கோம்; அப்போ உங்க பேர்ல இருக்கற பிளாட்ட திருப்பி எங்க கிட்ட குடுத்துட்டு, உங்க பணத்த ரெட்டிப்பா வாங்கிக்கலாம்; அல்லது பிளாட்டையே நீங்க வச்சுக்கலாம்”

இவையெல்லாம் நியோமேக்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனம் என்ற centrio group companies என அடையாளம் காட்டப்பட்டு கடந்த 2020 முதல் Neosco developers pvt Ltd company தொடங்கப்பட்ட போது அள்ளி வீசப்பட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள். அதில் ஆரம்பக் கட்டத்தில் இணைந்த நடுத்தர வர்க்கத்தினரும் இதே பிரச்சாரத்தை தமது நண்பர்கள் – உறவினர்கள் வட்டாரத்தில் முன்னெடுத்தனர்.

நியோமேக்ஸ் ZooM ஆடியோ லீக்
நியோமேக்ஸ் ZooM ஆடியோ லீக்

அடுத்தடுத்த கட்டங்களில் ஆட்களைச் சேர்க்கச் சேர்க்க, குறிப்பிட்ட சதவீத கமிஷனும் இந்த ஏஜெண்ட்டுகளுக்கு அள்ளி வீசப்படுவதால், தன்னையும் அறியாமல் தனது சொந்த சித்தப்பா, பெரியப்பா, மாமன், மச்சான் என அனைவரையும் சில இலட்சங்களை இதில் முதலீடு செய்ய வைத்தனர் இந்த ஏஜெண்ட்டுகள்.இதுவல்லாமல் இவர்களுக்கு தாய்லாந்து டூர், புதிய கார் என இன்னபிற சலுகைகளும் ஏராளம்.

நடுத்தர வர்க்கத்தினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்தச் சதுரங்க வேட்டையில் அரசு ஊழியர்கள், பொதுத்துறை ஊழியர்கள், அரசு மற்றும் பொதுத்துறைகளிலிருந்து ஓய்வுபெற்ற ஊழியர்கள் என பல தரப்பு நடுத்தர மக்களும் சில இலட்சங்கள் முதல் கோடி ரூபாய் முதலீடு செய்தனர்.
படுத்துக் கிடந்த ரியல் எஸ்டேட் துறையில் அற்புதங்கள் நிகழ்த்தி, பலமடங்கு இலாபம் கொட்டுவது போன்ற பிம்பத்தை கட்டியமைத்து, அதனால் பலமடங்கு வட்டி கொடுப்பதாக தனது சதுரங்க வேட்டையைத் தொடர்ந்து நடத்தி வந்தது நியோமேக்ஸ் நிறுவனம்.

Tycoons, எல்பின், UTS, FINE FUTURE, செந்தூர் பைனான்ஸ், பஜாஜ் அல்லையன்ஸ் INSURANCE, ஆருத்ரா போன்ற நிறுவனங்களால் ஏற்கனவே மக்கள் ஏமாற்றப்பட்டு இருக்கும் நிலையில், நியோமேக்ஸ் அந்த பித்தலாட்டத்தையே வேறு விதமாக முன்னெடுத்தது. மேற்கண்ட நிறுவனங்களெல்லாம் முதலீடு செய்யும் பணத்திற்கு எந்த உத்திரவாதமும் தராத போது, நியோமேக்ஸ் நிறுவனம் வீட்டுமனையை பணத்திற்கு ஈடாக அக்ரிமென்ட் போட்டுத்தருவதாக நம்ப வைத்தது; ‘பணம் போனாலும் பிளாட் இருக்கே’ என்று நம்பினர் முதலீட்டாளர்கள். ஆனால், இவர்களால் போடப்படும் அக்ரிமென்ட், பதிவு அலுவலகத்தில் பத்திரப் பதிவு செய்யப்படுவதில்லை. முதலீடு செய்யும் பணமும் அரசு சொல்லும் வரைமுறைகளுக்கு உட்பட்டு பரிவர்த்தனை செய்யப்படுவதில்லை.

முதலீட்டாளர்கள் கொடுத்த பணத்திற்கு வெறும் 20 ரூபாய் பத்திரத்தில் நிலத்தின் சர்வே எண்ணைக் குறிப்பிட்டு உத்திரவாத பத்திரம் அளித்துள்ளனர். அதில் சர்வே எண்ணின் உட்பிரிவு எண் கூட குறிப்பிடப்படவில்லை.

Neosco developers pvt Ltd company பெயரில் இலட்சக்கணக்கான போலி பாண்டுகளை உருவாக்கி வழங்கி மோசடிகளை அரங்கேற்றம் செய்து உள்ளனர்.
மாதாமாதம் பெரும் தொகையை வட்டியாக கொடுப்பதால், பலரும் தான் முதலீடு செய்த பணத்திற்கு நியோமேக்ஸ் கொடுத்த இந்த அற்ப உத்திரவாதங்களையே பெரிதும் நம்பினர்.

இன்று மாதாமாதம் வரும் வட்டியும் வரவில்லை; முதலீடு செய்த இலட்சக்கணக்கான பணமும் வரவில்லை. இவர்கள் கொடுத்த பத்திரத்தின் மூலம், பாண்டின் மூலமும் முதலீட்டை திரும்பப் பெற கட்டாய சூழலுக்கு முதலீட்டாளர்கள் தள்ளப்பட்டு உள்ளனர்.

Neomas
Neomas

Neosco developers pvt Ltd என்ற இந்த நிறுவனம் திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கினாலும், தமிழகத்தில் பல்வேறு மாவட்டத்தில் உள்ளவர்கள் மட்டும் அல்லாமல் திருச்சி பகுதி மக்களும் பெருமளவில் முதலீடு செய்துள்ளார்கள். குறிப்பாக திருச்சி பகுதியில் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான BHEL -இல் பணிபுரியும் ஊழியர்கள் பெல் ஊழியர்கள் கூட்டுறவு வங்கியில் இலட்சக்கணக்கில் கடன் வாங்கி இதில் முதலீடு செய்துவிட்டு இப்போது கையைப் பிசைந்து கொண்டு நிற்கின்றனர். ஓய்வு பெற்ற BHEL ஊழியர்கள் பலரும் தங்களது PF மற்றும் பணி ஓய்வின்போது கிடைத்த இதர பணப்பலன்கள் என மொத்தமாக பல இலட்சங்களை இதில் முதலீடு செய்துள்ளனர். திருச்சி BHEL-இன் முன்னாள், இன்னாள் ஊழியர்கள் மட்டுமே 100 கோடி ரூபாய்களுக்கு மேல் இதில் முதலீடு செய்து ஏமாந்துள்ளதாக முதலீட்டாளர்கள் மூலமே தெரிய வருகின்றது. இதுபோல இன்னும் பல ஆயிரம் பேரின் சேமிப்பையும் எதிர்காலத்தையும் சூறையாடியிருக்கிறது நியோமேக்ஸ்.

பல மோசடி நிறுவனங்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் அதிக வட்டி ஆசை காட்டி மக்களை ஏய்த்த பிறகும் இதுபோன்ற ஏமாற்று நிறுவனங்களின் வலையின் நடுத்தர மக்கள் எதனால் விழுகின்றனர் என்று சிந்திக்க வேண்டியுள்ளது.

பண மதிப்பழிப்பு, வங்கிகள் திவால், தொழில்துறை நசிவு, GST போன்ற பொருளாதாரத் தாக்குதல்களால், நிலவுகின்ற உத்தரவாதமற்ற சூழலில் எதில் முதலீடு செய்வது என நடுத்தர, உயர்நடுத்தர வர்க்க மக்கள் இயல்பாகத் தடுமாறி வருகின்றனர். இவர்களை இலக்கு வைத்து நன்கு தெரிந்த நண்பர்கள், சொந்தங்கள் மூலமாகவே நம்பிக்கை ஊட்டி பெருமளவில் முதலீடு செய்ய வைத்துள்ளனர் இந்த நியோமேக்ஸ் நிறுவனத்தினர்.

* ‘நிறுவனச் சொத்தில் ஐந்து சதவீதத்தை விற்றாலே மொத்த முதலீட்டாளர்களுக்கும் பணத்தை செட்டில் செய்துவிட முடியும்’
* ‘நீங்கள் முதலீடு செய்த பணத்தை வாங்கிக் கொள்ளுங்கள், ஆனால் பியூச்சரில் கிடைக்க இருக்கும் இரண்டு மடங்கு முதிர்வு தொகையை இழக்க வேண்டி வரும்’
* ‘முதலீட்டைத் திரும்பப் பெறுவதாலும், நிறுவனத்தின் மீது புகாரளிப்பதாலும் மேலும் நெருக்கடி தான் முற்றும். கொஞ்ச காலம் பொறுத்து இருந்தால் மீண்டு விடுவோம்’
* ‘முதலீட்டை இப்போது திரும்பத்தர முடியாது, வட்டி வேண்டுமானால் வாங்கி கொள்ளுங்கள்

இவையெல்லாம் தனக்கு எதிராக புகார் அளிக்காமல் இருக்க, முதலீட்டாளர்களுக்கு நியோமேக்ஸ் நிறுவனம் சொல்லும் சமாதான வார்த்தைகளாகும். ஆருத்ரா உள்ளிட்ட நிதிநிறுவனங்கள் மக்களை ஏமாற்றியபோது அதில் ஏமார்ந்த மக்கள் அந்நிறுவனங்களை முற்றுகையிட்டு போராட்டங்களை முன்னெடுத்தனர். அதுபோன்ற போராட்டங்கள் நிகழாமல் தடுக்கவும் இதுபோன்ற போலி சமாதானங்களைச் சொல்லி எதிர்ப்புணர்வை நீர்த்துப்போகச் செய்து வருகிறது நியோமேக்ஸ்.

Neomax took the young woman's life
Neomax took the young woman’s life

ரிசர்வ் வங்கியின் அனுமதி பெறாமல் தனியொரு நிதிநிறுவனம் மக்கள் பணத்தை முதலீடாக பயன்படுத்த முடியாது, அதிக வட்டி கொடுக்க முடியாது என பல சட்ட வரையறைகள் இருந்தாலும், துணிந்து இது போன்ற நிதி நிறுவனங்கள் வருவதற்கும் மக்களைக் கொள்ளையடிப்பதற்குமான அடிப்படை எங்கு உள்ளது?

இதன் மூலம் அவர்கள் தன்னை நன்கு ஏமாற்றியிருப்பதை முழுமையாக அறிந்து கொள்ள முடிந்தது.

மேலும், விசாரித்தறிந்த வகையில் பலரிடம் ஏமாற்றி பெறப்பட்ட நில மோசடி நிதியில், மேற்கண்ட எதிர்தரப்பினர் பல்வேறு தொழிலில் முதலீடு செய்துள்ளதால், எங்களுக்கு உறுதியளித்தபடி முதலீட்டு & வட்டி பணம் வழங்காமல், ஏமாற்றிய எதிரி பட்டியலில் (ஏஜென்ட், மாவட்ட டைரக்டர் மற்றும் தலைமை டைரக்டர்கள் பெயர்கள்) உள்ளவர்களுக்கு எதிராக முதலீட்டாளர்கள் நல நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து காவலில் எடுத்து விசாரணை செய்து ஏஜெண்டின் சொத்து விபரங்கள் & மாவட்ட டைரக்டரின் சொத்து விபரங்களை மற்றும் அவர்களது பினாமி பெயர்களில் உள்ள அசையும் & அசையா சொத்துக்களை கைப்பற்றி மேலும் அமலாக்கத்துறை & வருமானவரித்துறை மூலம் சோதனைக்குட்படுத்தி, அவர்கள் நியோமேக்ஸ் நிறுவனத்தின் மூலம் அவர்கள் முறைகேடாக சேர்த்த அனைத்து சொத்துக்களை முடக்கி, எங்களது முதலீட்டு பணம் கிடைக்கும் வரை அவர்களுக்கு ஜாமீன் மறுக்கப்பட வேண்டி கோரி நீதிமன்றத்தில் வழக்காடி, எங்களுக்காக நிதியினை பெற்று தருமாறு இம்மனுவினை பணிவுடன் சார்பு செய்கிறோம். எங்களை போன்ற பிற பாதிக்கப்பட்ட பல புகார்தாரர்களுக்கும் முதலீட்டு பணத்தினை மீட்டு தர நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நாங்கள் அறிந்த மட்டில் உள்ள முகவர்கள் & நியோமேக்ஸ் லீடரின் சொத்துக்கள் அனைத்தும் மற்றும் அவர்களது உறவினர்கள் பெயரில் ஏராளமான பினாமி சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர்.

மேலும், எங்களது பாண்டு பேப்பரில் குறிப்பிட்ட முகவரியும், நாங்கள் நேரடியாக சென்று பணத்தை செலுத்திய நியோமேக்சின் முகவரி அதில் இல்லை. அந்த பாண்டுவில் குறிப்பிட்டுள்ள முகவரி போலி பினாமி கம்பெனி( Neosco developers pvt Ltd company), அந்த முகவரியில் நியோமேக்சின் அலுவலகம் எதுவும் இல்லை என்பதை நேரடியாக பார்த்தறிந்து உறுதிபடுத்திக்கொண்டோம்.

இப்படிக்கு,
பாதிக்கப்பட்ட அனைத்து முதலீட்டாளர்கள்.

 – அங்குசம் புலனாய்வு குழு

வீடியோ லிங்:

 

3 kavi national
Leave A Reply

Your email address will not be published.