அங்குசம் சேனலில் இணைய

சம்பளம் தான் கொடுக்க மாட்டேங்கிறீங்க … alteast மரியாதையாவது  குடுங்க !

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

அசிஸ்டன்ட் டைரக்டர்களை அசிங்கமாக திட்டி அடித்தால் தான் கெத்து என்று நினைக்கும்  அதிகார வர்க்க புத்தி உள்ள  பிற்போக்கு இயக்குனர்களின் கடைசி பேட்ச்.

சில மாதம் முன்பு என்னிடம் வேலை பார்த்த ஒரு அசிஸ்டன்ட்  டைரக்டர் இடம் பேசினேன்… என்னடா பெரிய படம் ஒர்க் பண்ண என்ன ஆச்சு என்று கேட்டேன் அந்த டைரக்டர்   எல்லார் முன்னாடியும் அடிச்சுட்டாரு அண்ணா அதனால  அந்த படத்துல இருந்து நின்னுட்டேன்.. அப்படின்னு  சொன்னான்…

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

அந்த  இயக்குனர்தான் சமீபத்தில் ஒரு கிரின்ச் குடும்ப படத்தை  எடுத்தவர். என்னடா  இப்போ இருக்க young ஜெனரேஷன்  இயக்குனர்கள் அசிஸ்டன்ட் மீது  கோபப்படுவார்கள் ஆனால் அசிங்கமாக திட்டியோ அடிக்கவோ மாட்டார்கள்… ரொம்ப mature ஆ handle பண்ணுகிறார்கள்.. இவரும் Young Grneration  டைரக்டர் தானே..  இவர் ஏன் இப்படி  பிற்போக்குத்தனமாக நடந்து கொள்கிறார்.. என்று கவனித்தால் அது அவரின் ஆசானிடம் இருந்து வந்தது.

இந்த இயக்குனர் அசிஸ்டெண்டாக ஒர்க்  பண்ண.. அந்தப் பெரிய இயக்குனர் எல்லாராலும் அரை மெண்டல் என்று இண்டஸ்ட்ரில அழைக்கப்படும்  ஒரு இயக்குனர்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

அந்த ஆளிடம்  எனக்குத் தெரிந்த ஒருவர் சென்று அசிஸ்டெண்டாக  சேர வேண்டும் என்று கேட்டிருக்கிறார்… அதற்கு  அந்த இயக்குனர் சொன்ன விஷயத்தை என்னிடம் வந்து  புலம்பினார்.

அசிஸ்டன்ட் டைரக்டர்களின் அவலம்அவரிடம் அசிஸ்டன்ட் டைரக்டராக சேர வேண்டும் என்றால் தினமும் காலையில் அவர் ரூமுக்கு வந்து அவரின் செருப்பை  துடைத்து வைக்க  வேண்டுமாம். அதன் பிறகு அவருக்கு சாப்பாடு வாங்கி வைப்பது முதல் அவருக்கு  வீட்டு எடுபுடி வேலை வரை  பண்ண வேண்டுமாம்.

இப்படி எல்லாம் பண்ணி எவனாவது அசிஸ்டென்டா ஆகி உருப்பட்டு இருக்கானா அப்படின்னு பார்த்தா.. மேல சொன்ன மாதிரி இவன் கிட்ட வாங்கின  வன்மத்த தன்னோட அசிஸ்டன்ட் மேல    கக்கிட்டு இருக்காங்க.

இதில் இன்னும் கொடுமை  அந்த  பெரிய இயக்குனர் புதுமுகங்களை வைத்து தான்  ஹிட்டு கொடுத்து இருக்கிறார்.. ஆனால் அதில் நாயகனாக நடித்த பல புது  முகங்களுக்கு அடுத்து சினிமாவில் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இது ஒரு புறம் இருக்க அந்த புதுமுகங்களை அவர் எப்படி தேர்வு செய்வார் தெரியுமா.. கடைசியாக ஒரு படம் எடுத்தார்.. அதில் தன்னுடைய  துணை இயக்குனரை தான் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தார்.. அதற்கு அந்தக் கதாபாத்திரத்தை அவர் தேர்வு செய்த முறை எப்படி தெரியுமா.

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

சூட்டிங்கில்  உடம்பில் உள்ள  மொத்த துணியையும் அவிழ்த்துவிட்டு திரும்பி நில்லுடா என்று சொல்லி இருக்கிறார். பாவம் அந்த  துணை இயக்குனரும்.  நாம் நடிகராக ஆக வேண்டும் என்று தான் இவரிடம்  இத்தனை வருடம் அசிஸ்டெண்டாக வேலை செய்தோம். இப்பொழுது அந்த வாய்ப்பு கிடைக்கிறது என்று அதையும் செய்திருக்கிறார்.

ஒரு உண்மையான நடிகன் படத்தில் அந்த கதாபாத்திரத்திற்கு தேவை என்றால் கேமரா action சொன்னவுடன்.. முழு மனதுடன் மொத்த துணியும் அவிழ்த்து   நிற்க தயங்க மாட்டான்.. ஆனால் தேர்வு செய்வதற்காக ஏன் இப்படி தேவையில்லாமல். ஒரு ஷூட்டிங்ள அனைவரும் இருக்க இப்படி செய்ய வேண்டும். அவன் அத்தனை தியாகம் செய்து அந்த படத்தில் நடித்தும் அவனுக்கு அதுக்கப்பறம் எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை.

இன்னும் பல விஷயங்களை இவரைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் அதை எல்லாம் வெளியே சொன்னால் வெட்கக்கேடு.

இவர் ஒரு புறம் இருக்க. நான் மிகவும் மதித்த இயக்குனராண ஒடுக்கப்பட்டவர்களை  பற்றி படம் எடுக்கும் அந்த  இயக்குனரும் தனது துணை இயக்குனர்களை  அடிப்பதும் அசிங்கமாக திட்டுவதும்  எல்லோரும் தெரிந்த விஷயமே. இவரைப் பற்றி பல விஷயங்கள் கேள்விப்பட்டு  இவர் மேல் வைத்திருந்த மரியாதையே போய்விட்டது.

ஒரு குறிப்பிட்ட சமுதாயத்திற்கு இந்த மதிப்பும் மரியாதையும் கிடைக்கவில்லை என்று படம் எடுக்கும் நாமலே நம்மை ஆசனாக ஏற்று  டைரக்சன்  கற்றுக்கொள்ள வரும் துணை இயக்குனர்களை. மட்டும் மரியாதை இல்லாமல் நடத்தினால் எப்படி. உனக்கு வந்தால் ரத்தம் அடுத்தவனுக்கு வந்தால் தக்காளி சட்னியா.

மீராமகதி
மீராமகதி

இப்படித்தான் ஒருமுறை தன்னுடைய அசிஸ்டன்களை திட்டுவது போல்  கேட்டரங்கில்  வேலை செய்யும் அசிஸ்டன்ட்டை போய் திட்டி அவன் பதிலுக்கு இவரை  எல்லோர் முன்னும் அசிங்கமாக திட்டி  இதெல்லாம் உன் அசிஸ்டன்களிடம் வைத்துக் கொள் என்று சொல்லி வெளியே வந்திருக்கிறான்.

நான் 11 குறும்படங்கள் பண்ணியிருக்கிறேன் Double Tuckerr  என்ற ஒரு படம் எடுத்திருக்கிறேன். என்னிடம் பல துணை இயக்குனர்கள் வேலை பார்த்திருக்கிறார்கள் ஒரு நாள் கூட எவரையும் திட்டியதில்லை அடித்ததில்லை  வேலை ஒழுங்காக தான் நடந்தது. அவன் ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் தவறு இயக்குனரான உன்னிடம் தான் உள்ளது நீ ஒழுங்காக பிளான் போடவில்லை அவர்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்க தெரியவில்லை என்று தான் அர்த்தம்.

அசிஸ்டன்ட் டைரக்டர் என்பவன் ஒரு இயக்குனராக வேண்டும் என்று கனவுகளோடு. தனது குடும்பம் மற்றும் உற்றார் உறவினர்கள் நண்பர்கள். அனைவராலும் இதெல்லாம் எங்க உருப்பட போகுது என்று வார்த்தை காயங்களால் அவமானப்பட்டு  பல தியாகங்களை செய்துதான் இந்த சினிமாவை கற்றுக் கொள்ள வேண்டும் என்று வந்து உங்களிடம் இருக்கிறான். அவனுக்கு சரியான சம்பளம் தான் கொடுக்க மாட்டேங்கிறீங்க alteast மரியாதையாவது  குடுங்க.

 

—     மீராமகதி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Comments are closed, but trackbacks and pingbacks are open.