அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கொலை முயற்சி குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனை !

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சிராப்பள்ளி மாவட்டம், சோமரசம்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பள்ளக்காடு கைக்காட்டி பகுதியைச்சேர்ந்த உஷா 55/22. க.பெ.சண்முகம் என்பவரின் பேரன் சந்துரு 17/22 என்பவர் 5 10.10.2022 ம் தேதியன்று பல்லக்காடு மாரியம்மன் கோவில் அருகே அவரது இரு சக்கர வாகனத்தை அஜாக்கிரதையாக ஒட்டி சென்றதாக அந்தப்பகுதியைச் சேர்ந்த 1 மாரியப்பன் @ அன்பழகன் 23/22 S/o அண்ணாமலை, பள்ளக்காடு, 2. சந்திரன் 20/22, S/o ராஜேந்திரன், பள்ளக்காடு, 3. சிவா @ மாசி பெரியண்ணன் 19/22 S/o சின்னக்கலை, பள்ளக்காடு, 4. சதீஷ்குமார் 24/22, S/o. சின்னதுரை, பள்ளக்காடு, 5. அஜித் 22/22, S/o. சின்னதுரை, பள்ளக்காடு, 6. டேவிட் @ குருமூர்த்தி 22/22, S/o முருகானந்தம், பள்ளக்காடு. 7. துரை @ துரைராஜ் 20/22, S/o. முருகானந்தம், பள்ளக்காடு, ஸ்ரீரங்கம், திருச்சி மாவட்டம் ஆகியோர் மேற்படி சந்துரு என்பவரிடம் பிரச்சனை செய்துள்ளனர்.

இது தொடர்பாக உஷா என்பவர் மேற்படி நபர்களிடம் சென்று கேட்டதற்கு எதிரிகள் சேர்ந்து உஷாவிடம் வாக்குவாதம் செய்தும், அவரைத் திட்டியும் மற்றும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் கால்களால் உதைத்து கொலை செய்ய முயற்சித்ததாக உஷா என்பவர் கொடுத்த புகாரின் . 327/22, U/s 147,148,294(b),323,324,307,506(ii) IPC r/w 4 of TNPWH Act ன் படி வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வழக்கின் விசாரணையானது திருச்சி மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

திருச்சி எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம்
திருச்சி எஸ்.பி. செ.செல்வநாகரத்தினம்

மேற்படி வழக்கில் அரசு தரப்பு வழக்கறிஞராக செல்வி. சுமதி, ஆஜராகி வாதிட்டு வந்த நிலையில் இன்று (15.05.2026) திருச்சி மகிளா நீதிமன்ற நீதிபதி  சண்முகபிரியா, அவர்கள் எதிரிகள் ஏழு பேருக்கும் தலா ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும், A1 எதிரியான மாரியப்பன் @ அன்பழகன் என்பவருக்கு ரூபாய். 3000 அபராதமும், மற்ற எதிரிகளுக்கு தலா ரூபாய். 2000 விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

இந்நிலையில், இவ்வழக்கில் குற்றவாளிக்கு தண்டனை பெற்று தர நீதிமன்ற நடவடிக்கைகளை சரிவர கவனித்த சோமரசம்பேட்டை காவல் நிலைய நீதிமன்ற காவலர் பாலமுருகன் என்பவரை திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம். இ.கா.ப  வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டியுள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.