ஆகஸ்ட் 20 : சம்பவம் செய்ய காத்திருக்கும் எடப்பாடி தரப்பு!

0

இங்கே கிளிக் பண்ணுங்க.. - வேலை பெறுவது எளிது..

ஆகஸ்ட் 20 : சம்பவம் செய்ய காத்திருக்கும் எடப்பாடி தரப்பு!

எடப்பாடி, ஓ.பி.எஸ்., சசிகலா, டி.டி.வி.தினகரன் என நாலாபுறம் சிதறிய அதிமுக தொண்டர்களையெல்லாம் தன்பக்கம் அணிதிரட்டும் வகையில் வியூகங்களை வகுக்கத் தொடங்கிவிட்டார் எடப்பாடியார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

தற்போது விற்பனையில் அங்குசம் இதழ்...

எடப்பாடி பழனிச்சாமி
எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்டதையும், அதனடிப் படையில் மேற்கொள்ளப்பட்ட கட்சி நிர்வாகிகளின் நியமனத்தையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், இந்த வேகம் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கிறதாம். எதிர்வரும் ஆகஸ்ட்-20 இல் மதுரையில் மாநாடு நடத்தப் போவதாக அறிவித்திருக்கும் எடப்பாடி தரப்பு, தமிழகமே திரும்பிப் பார்க்கும் வகையில் ’சம்பவம்’ செய்வதற்காக தயாராகி வருகிறதாம்.

செம்ம சூப்பரான திரைப்படம்..

4

எடப்பாடியை அசைத்துப்பார்க்க முடிவெடுத்து, கொங்கு மண்டலத்தில் புரட்சிப் பயணம் என்ற பெயரில் காலெடுத்து வைத்து அணல் மூட்டியிருக்கிறார், சசிகலா. இவருக்கு கூடிய கூட்டத்தை பார்த்து எடப்பாடி பழனிச்சாமி சற்று ஆடித்தான் போனாராம். “அந்தம்மாவ நம்பி போகாதீங்கப்பா.. கடைசி காலத்துல அம்மாவையே கால வாரிய கூட்டம். சொந்த பந்தங்களை கூட வச்சிகிட்டு கட்சி நடத்துறதுதான் சின்னம்மா ஸ்டைல். அங்கே, கட்சிக்காக உண்மையாக உழைப்பவர்களுக்கு மரியாதை இருக்காது.” என கூட்டத்திற்குள் புகுந்து கேன்வாஸ் செய்துவருகிறதாம் எடப்பாடி தரப்பு.


“அட.. ஆமாம்பா கூட நின்னு போட்டோ புடிக்க நாம நின்னுட்டுருக்கும்போதே, பசையுள்ள ஆளுங்களும் அவங்க சொந்தபந்தங்களுமா நின்னு போட்டோ புடிச்சிட்டு, நம்மள கண்டுக்காமல சின்னம்மா கிளம்பி போனாங்க”-னு பேசிக்கிட்டாங்களாம் தொண்டர்கள் தரப்பில். பசை இருக்கிற பக்கம்தான் நாங்க இருப்போம்னு ஒரு குருப் சின்னம்மாவையே வட்டமிடுதாம்.


எது எப்படியோ, ஆகஸ்ட்-20 மதுரையில் மாநாடு எடப்பாடி தரப்புக்கு பேர் சொல்ற மாதிரி இருக்கும்னு இப்பவே பேசிக்கிறாங்களாம்.

-ஷாகுல், படங்கள் : ஆனந்த்

5
Leave A Reply

Your email address will not be published.