காந்திகிராம பல்கலைக்கழகத்தில் “காசநோய் இல்லாத இந்தியா” விழிப்புணர்வு கருத்தரங்கம்!
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் ஊரக சுகாதாரம் மற்றும் சுகாதாரத் துறை சார்பில், “TB Mukt Bharat Abhiyaan – Sensitization Awareness for a TB-Free India” என்ற தலைப்பில் ஒருநாள் விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று 10.09.2026 நடைபெற்றது.
பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் ந. பஞ்சநதம் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், துறைத் தலைவர் டாக்டர் P.U. மகாலிங்கம் வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து Er. K. Rousseau விளக்கினார். பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர் கே. மாரிமுத்து, School of Health Science and Rural Development-ன் Dean டாக்டர் ஆர். வெங்கட்ரவி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
Government Medical College, Dindigul-ன் Vice Principal டாக்டர் எம். சலீம் தொடக்க உரையாற்றினார். தொடர்ந்து, Dindigul Deputy Director of Medical Services (TB) டாக்டர் சந்திரபிரியா கண்ணன் மற்றும் ICMR–National Institute for Research in Tuberculosis, Chennai-ன் Scientist-F & Head டாக்டர் லூக் எலிசபெத் ஹன்னா ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கருத்தரங்கில் காசநோயின் அறிகுறிகள், பரவும் விதம், நோயைக் கண்டறிதல், சிகிச்சை, தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கப்பட்டது. மேலும், TB Mukt Bharat Abhiyaan மற்றும் காசநோய் இல்லாத இந்தியாவை உருவாக்குவதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாணவர்களின் ஆய்வுக் கட்டுரை மற்றும் சுவரொட்டி விளக்கக்காட்சிகளும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சி TB இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது.






Comments are closed, but trackbacks and pingbacks are open.