வங்கி பண பரிவா்த்தனை மோசடி வழக்கு
வங்கி பண பரிவா்த்தனை மோசடி வழக்கில் கைதான திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பபட்டை சோ்ந்த தமிழரசனுக்கு சீனாவை சோ்ந்த சைபா் மோசடி கும்பலுடன் தொடா்பு இருப்பதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளனா்.
ராஜஸ்தான் தொழிலதிபரிடம் மோசடி
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சோ்ந்த தொழில் அதிபரிடம், ஒரு கும்பல் மும்பை சுங்கத்துறை அலுவலகத்தில் இருந்து பேசுகிறோம், உங்கள் நிறுவனத்தில் சட்டவிரோத பொருட்கள் கடத்தப்படுவதாக தகவல் வந்துள்ளது என்று மிரட்டி ரூ.2.16 கோடி பணம் பறித்தனா்.
மேலும், அதே மோசடி கும்பல் அவரிடம் சி.பி.ஐ. அதிகாரி போன்றும், டெல்லியை சோ்ந்த போலீஸ் அதிகாரிகள் போன்றும் பேசி பணம் பறிக்க முயன்றதால் உஷாரான அவா், ஜெய்ப்பூா் “சைபா் கிரைம்“ போலீசில் புகார் அளித்தார்.
இதைத்தொடா்ந்து அமலாக்கத்துறை (சைபா் கிரைம் பிரிவு) உதவியை ஜெய்ப்பூா் சைபா் கிரைம் போலீசார் நாடினார்கள். இதைத்தொடர்ந்து அவர், பணம் அனுப்பிய வங்கி கணக்கி்ல் இருந்து பணத்தை மீட்கும் நடவடிக்கையிலும், மோசடி கும்பலை கைது செய்வதற்கான நடவடிக்கையிலும அமலாக்கத்துறை அதிகாரிகள் ஈடுபட்டனா்.
4 நாட்கள் அமலாக்கத்தறை காவல்
இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக பெங்களூருவை சேர்ந்த சசிகுமார், சச்சின், கிரண், சரண்ராஜ் ஆகிய 4 போ் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனா்.
மேலும், ஜெய்ப்பூா் தொழில் அதிபரிடம் அபகரிக்கப்பட்ட பணத்தை வங்கி ஊழியா்களின் உதவியோடு திரவள்ளூா் மாவட்டம் பள்ளிப்பட்டை சேர்ந்த தமிழரசன், அஜித், பிரகாஷ், அரவிந்தன் ஆகிய 4 போ் போலி நிறுவனங்களின் பெயரில் வங்கி கணக்கை தொடங்கி பணத்தை பரிமாற்றம் செய்திருப்பது அமலாக்கத்துறை புலன் விசாரணையில் தெரியவந்தது. அதன்பேரில் அவா்கள் 4 பேரையும் அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனா். பின்னா் அவா்கள் பெங்களூரு அழைத்து செல்லப்பட்டு அமலாக்கத்துறை சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜா்ப்படுத்தப்பட்டனா்.
அவா்களை 4 நாட்கள் காவலில் வைத்து விசாரிப்பதற்கு அமலாக்கத்தறைக்கு கோர்ட்டு அனுமதி வழங்கியது.
சீனா கும்பலுடன் தொடா்புஷ இதையடுத்து அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கைதான தமிழரசன் சீனாவை சோ்ந்த “சைபா்“ மோசடி கும்பலுடன் தொடர்பில் இருந்த அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளதாகவும், இதே பாணியில் ரூ.28 கோடி வரையில் மோசடி நடைபெற்றுள்ளதாகவும் அம்லாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.