2,276 வழக்குகள் மக்கள் நீதிமன்றத்தில் சமரசம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடந்தது.
முதன்மை மாவட்ட நீதிபதி மணிமொழி தொடங்கி வைத்து, பேசினார்.
திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் 12, முசிறி, மணப்பாறை, துறையூர், லால்குடி தலா 2, ஸ்ரீரங்கம், தொடடியம் தலா 1 என மொத்தம் 22 அமா்வுகளிலும் சமரச முறையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
அந்தவகையில், 22 அமா்வுகளிலும், 2 ஆயிரத்த 987 சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், ஆயிரத்து 458 காசோலை மோசடி வழக்குகள், ஆயிரத்து 654 வங்கி கடன் வசூல் வழக்குகள், ஆயிரத்து 987 மோட்டார் வாகன நஷ்ட ஈடு வழக்குகள், 2 ஆயிரத்து 897 உரிமையியல் வழக்குகள் என 12 ஆயிரத்து 696 வழக்ககள் சமரச தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
முடிவில், ரூ.32.63 கோடி மதிப்பிலான 2 ஆயிரத்து 276 வழக்குகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. இதற்கான எற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளா் சிவக்குமார் செய்திருந்தார்