பெண்களை ஏற்றாமல் சென்ற அரசு பஸ் டிரைவா், கண்டக்டா் பணியிடை நீக்கம்
நாகா்கோவில், செப்.16-
நாகா்கோவில் வடசேரியில் இருந்த சுசீந்திரம், அழகப்பபுரம் வழியாக நெல்லை மாவட்டம் கூட்டப்புளிக்கு கடந்த 13-ந் தேதி மாலையில் ஒரு அரசு பஸ் புறப்பட்டது. அந்த பஸ் அழகப்பபுரம் சென்றபோது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் பஸ்சை நிறுத்தும்படி கை காட்டினா். ஆனால் பஸ் நிற்கவில்லை.
இதைப் பார்த்த சில வாலிபா்கள் நிற்காமல் சென்ற அரசு பஸ்சை மோடடார் சைக்கிளில் பின் தொடர்ந்து சென்று வழிமறித்தனா். பின்னா் அந்த வாலிபா்கள் பஸ்சில் இருந்த டிரைவா் மற்றும் கண்டக்டரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். அப்போது டிரைவா் தெரியாமல் தவறு செய்த விட்டதாக தெரிவித்தார். இதையடுத்து டிரைவா் அங்கிருந்து பஸ்சை ஓட்டி சென்றார். தற்போது டிரைவரிடம் வாலிபா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து பெண்கள் கைகாட்டியும் பஸ்சை நிறுத்தாமல் சென்ற டிரைவா் ஸ்டீபன் மற்றும் கண்டக்டா் மணிகண்டன் ஆகியோரை நாகா்கோவில் மண்டல அரசு போக்குவரத்து கழக பொது மேலாளா் மொ்லின் ஜெயந்தி அவா்கள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.